N F P E
அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்
அஞ்சல் மூன்று ,அஞ்சல் நான்கு மற்றும் புறநிலை ஊழியர்கள் (NFPE)
சேலம் மேற்கு
கோட்டம், சேலம் – 636 005
|
ÍüÈȢ쨸 ±ñ 5 (¯ÚôÀ¢É÷ ÍüÚìÌ ÁðÎõ) §¾¾¢ : 18.04.2013
அன்புத் தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம்.
01.01.2013 முதல் வழங்கப் பட வேண்டிய 8% பஞ்சப்படி இதுவரை வழங்கப் படவில்லை .எப்போதும் போல இது மார்ச் இறுதியில்
உத்திரவிடப்பட்டு ஏப்ரல் முதல் தேதியில் நிலுவையுடன் உயர்த்தி வழங்கப் பட்டிருக்க வேண்டும் .
பிரதம அமைச்சர் ஊரில் இல்லை, நிதி அமைச்சர் ஊரில் இல்லை என்று மாற்றி
மாற்றி காரணங்கள் கூறப்பட்டு இன்று வரை காபினெட் ஒப்புதல் அளிக்கப்
படாததால் நமக்கு சட்டப் படி வழங்கப் பட வேண்டிய DA கால தாமதப் படுத்தப் படுகிறது.
இதனை எதிர்த்து மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் எதிர்வரும் 23.04.2103 அன்று அவரவர் பணியிடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டுகோள் விடுத்துள்ளது. இதன் படி நமது NFPE சம்மேளனமும் இதற்கான வேண்டுகோளை அளித்துள்ளது.
ஆகவே தமிழகத்தின் அனைத்து கோட்ட / கிளைகளிலும் எதிர்வரும் 23.04.2013 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தி , பிரதம அமைச்சருக்கு கடிதத் தந்திஅனுப்பிட உள்ளது
எனவே
சேலம் மேற்கு கோட்டத்தில் இருந்தும் NFPE P3/P4/GDS(NFPE) சங்கங்களின் கோட்ட
நிர்வாகிகள் மற்றும் அனைத்து உறுப்பினர்கள் எதிர்வரும் 23.04.2013 செவ்வாய் கிழமை மாலை
6.00 மணிக்கு சூரமங்கலம் தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பிரதம அமைச்சருக்கு கடிதத்
தந்திஅனுப்பிட உள்ள நிகழ்ச்சியில் பெருந்திரளாக கலந்து கொண்டு
சிறப்பு செய்திட வேண்டுகிறோம்.
வாழ்க NFPE
! வளர்க NFPE !
என்றும்உங்கள்
சேவையில்
தோழமையுடன்,K. பரமசிவம் தலைவர் P3 C.சஞ்சீவி செயலர் P3 K.K.கமலமணி நிதிச்செயலர் P3
R.வரதராஜன் தலைவர் P4 R..பிரகாஷ் செயலர் P4 S.ரத்தினம் நிதிச்செயலர் P4
K. கண்ணபிரான் கௌரவதலைவர் GDS(NFPE) C.ஆறுமுகம் செயல் தலைவர் GDS(NFPE) R.சரவணன் தலைவர் GDS(NFPE) S.சண்முகம் செயலர் GDS(NFPE)C.முருகன் நிதிச்செயலர்GDS(NFPE)
Thursday, April 18, 2013
V.C.Premlatha