கடந்த 16.12.2012 அன்று நடைபெற்ற
தபால்காரர் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான விடைக்கான
ANSWER KEY இலாக்காவினால் வெளியிடப்பட்டுள்ளது . தாங்கள் எழுதிய
தேர்வில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் அவரவர்கள் எழுதிய விடைத்தாளின்
நகலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்று இந்த விடைகளுடன்
சரிபார்க்கலாம் .
எனவே தேர்வின் முடிவுகளில் சந்தேகம்
உள்ளதாக எவரும் கருதிட வாய்ப்பு அளிக்காமல் இருக்கவே இந்த ஏற்பாடு .
இந்த உரிமை தொழிற் சங்கத்தினால் பெறப்பட்டதாகும் .
இதற்கு முன்னதான காலங்களின் இப்படி
ஒரு வாய்ப்பு வழங்கப்பட வில்லை . VALUATION TRANSPARENCY ஆக இருக்க
வேண்டும் என்பதற்கே இந்த ஏற்பாடு. எல்லா இலாக்கா தேர்வுகளுக்கும் இந்த
முறை தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது. தவறான நபர்களிடம் நமது
ஊழியர்கள் ஏமாந்து போகாமல் இருக்க வேண்டும் என்பதை கோட்ட/ கிளைச்
செயலர்கள் ஊழியர்களிடம் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்திட
வேண்டுகிறோம்.
ANSWER KEY பெற கீழே உள்ள இணைப்பை 'கிளிக்' செய்யவும்.
Thursday, January 24, 2013
V.C.Premlatha