Monday, 26 March 2012

சிறு சேமிப்புகளுக்கு வட்டி உயர்த்த முடிவு

தபால் அலுவலகங்களில் உள்ளசேமிப்பு கணக்குமற்றும் மாதாந்திர வருவாய் திட்டம் போன்ற முதலீடுகளுக்கு வழங்கப்படும் வட்டி தொகையை 0.25 சதவிகிதம் உயர்த்த மத்திய  அரசு திட்டமிட்டுள்ளது .  தபால் அலுவலக சேமிப்பு தொகைக்கான வட்டி விகிதம் கடந்த 2001 ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில்  3.5 சதவிகிதத்தில்  இருந்து  4 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது.   அத்துடன் மாதாந்திர வருவாய் திட்டம்  மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி போன்றவற்றிற்கும் 8.2, மற்றும்  8.6 சதவிகிதம் என வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது .

வங்கித்  துறையில் இதர முதலீடுகளுக்கு வழங்கப்படும் வட்டி தொகைக்கு இணையான தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களுக்கும் வழங்க வேண்டும் என சியாமளா கோபிநாத் கமிட்டி அளித்த பரிந்துரையின் படி சேமிப்பு கணக்கு ,மாதாந்திர வருவாய் திட்டம்  மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி போன்றவற்றிற்கு வட்டி விகிதத்தை     0.25 சதவிகிதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது


நன்றி: காலைக்கதிர்