Thursday, 19 July 2012
Wednesday, 18 July 2012
Wednesday, July 18, 2012
V.C.Premlatha
Holding of PA/SA Direct Recruitment for 2011 & 2012 through approved Outsourced Agency
2011 மற்றும் 2012 ஆண்டுகளுக்கான எழுத்தர் காலியிடங்களுக்கான நேரடி தேர்வு என்பது objective type - Multiple Choice Questions அடிப்படையில் நடக்க உள்ளது . இது M/S CMC Ltd என்ற தனியார் தேர்வு நிறுவனம் மூலம் நடத்திடப் பட இலாக்காவால் ஒப்புதல் வழங்கப் பட்டுள்ளது .
அதற்கான விரிவான இலாக்கா சுற்றறிக்கையினைப் பார்க்க கீழே 'கிளிக்' செய்யவும்.
PHOTOS OF STATEWIDE DEMONSTRATION HELD ON 16.07.2012
Wednesday, July 18, 2012
V.C.Premlatha
சேலம் மேற்கு கோட்டக் கண்காணிப்பாளர்
திரு. சுந்தரராஜனின் ஊழியர் விரோத , ஊழல் போக்கைக் கண்டித்து , அவர்
,மீது இலாக்கா ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கோரியும் , ஊழியர்கள் மீது
எடுக்கப் பட்ட பழி வாங்கும் நடவடிக்கைகளை
ரத்து செய்திடக் கோரியும் 16.07.2012 அன்று மாநிலம் தழுவிய அளவில்
அனைத்து கோட்ட/ கிளைகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் வெகு
சிறப்பாக நடைபெற்றது.
சென்னை CPMG அலுவலக வாயிலில் , சென்னை
பெருநகர கோட்ட சங்கங்களை ஒன்று திரட்டி , மாநிலச் சங்கத்தின் சார்பில்
மாபெரும் உணவு இடைவேளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் தோழர். J. ஸ்ரீ வெங்கடேஷ் தலைமை வகித்தார் .மாநிலச்
செயலர் தோழர் J.R. ஆர்பாட்டத்தின் நோக்கம் குறித்தும், பிரச்சினை
தீர்க்கப் படவில்லையானால், அடுத்த கட்டப் போராட்டம் தொடரும் என்றும் ,
இது மேலும் விரிவு படுத்தப் படும் என்றும் விளக்கிப் பேசினார்.
கூட்டத்தில்
சம்மேளன உதவிப் பொதுச் செயலர் தோழர். ரகுபதி , அகில இந்தியசங்கத்தின்
செயல் தலைவர் தோழர். N.G. , அகில இந்திய சங்கத்தின் உதவிப் பொதுச் செயலர்
தோழர் .A. வீரமணி
, P4 சங்கத்தின் அகில இந்திய அமைப்புச் செயலர் தோழர். கோபு .
கோவிந்தராஜன் , R3 சங்கத்தின் மாநிலச் செயலரும் NFPE தமிழ் மாநில
ஒருங்கிணைப்புக் குழுவின் கன்வீனருமான தோழர். M.கண்ணையன் , R 4 மாநிலச்
செயலர் தோழர்.K. ராஜேந்திரன் , NFPE SBCO சங்கத்தின் பொதுச் செயலரும்
மாநிலச் செயலருமான தோழர். அப்பன் ராஜ், நிர்வாகப் பிரிவு சங்கத்தின்
மாநிலச் செயலர் தோழர் .ரகுபதி உமாசங்கர் ஆகியோர் கலந்து கொண்டு,
நிர்வாகத்தில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகள் குறித்தும் , பல்வேறு
அதிகாரிகளின் அத்து மீறிய ஆணவச் செயல்கள் குறித்தும், இது தொடர்பாக
அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து மாநில அளவில் ஒன்று பட்ட ஒரு போராட்டம்
நடத்திட வென்றும் என்றும் பேசினார்கள்.
இறுதியாக
மாநில உதவித் தலைவர் தோழர். வெங்கட்ராமன் அவர்கள் நன்றி கூற ஆர்ப்பாட்டம்
சிறப்பாக முடிவுற்றது. ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் சென்னை பெருநகரத்தில்
உள்ள பெரும்பான்மையான கோட்ட/கிளைச் செயலர்களும் , இதர பொறுப்பாளர்களும்
மற்றும் 150 க்கும் மேற்பட்ட தோழர்களும் , தோழியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் . கூட்டத்தில்
கலந்துகொண்ட அனைவருக்கும் , ஆதரவு நல்கிய அனைத்து மாநிலச் சங்கங்களுக்கும்
, அது போல மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் , இந்த அறைகூவலை ஏற்று
ஆர்ப்பாட்டம் நடத்திய அனைத்து கோட்ட/கிளைச் சங்கத்தின்
பொறுப்பாளர்களுக்கும் மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி.
கோட்ட/கிளைச்
செயலர்கள் அனைவரும் தவறுதல் இன்றி , நமது சுற்றறிக்கை எண் 9 இல்
காட்டிய SAVINGRAM வாசகத்தை அவரவர் LETTER HEAD இல் டைப் செய்தோ
அல்லது வெள்ளைத்தாளில் டைப் செய்தோ , கோட்ட/கிளைச் செயலருக்கான ரப்பர்
ஸ்டாம்ப் IMPRESS செய்து கையெழுத்திட்டு கீழ்க் கண்ட முகவரிக்கு
அவர்களின் நோட்டீஸ் நகலுடன் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.
1. SRI. A.N. NANDA, IPS, PMG, WESTERN REGION, COIMBATORE 641 002
2. SMT. SHANTHI NAIR, IPS, CHIEF PMG, TN CIRCLE , CHENNAI -600 002.
3. COM. J. RAMAMURTHY, CIRCLE SEC., AIPEU GRC , TN ,TIRUVALLIKENI
S.O. CHENNAI 600 005.
இந்த ரிப்போர்ட் ஐ கண்டிப்பாக இரண்டு நாட்களில் வந்து சேருமாறு
அனுப்பிட வேண்டுகிறோம். இதுவரை இந்தப் பிரச்சினை தீர்க்கப் படவில்லை .
அடுத்த
கட்ட போராட்டத்தில் நமது பொதுச் செயலர் தோழர். KVS அவர்களும்
கலந்துகொள்வதாக தொலைபேசியில் தெரிவித்தார். எனவே அதற்கான தேதியை , அவரது
PROGRAMME க்கு ஏற்ப தெரிவிப்பதாகவும் , எனவே உடன் தேதியை அறிவிக்க
வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டதால் , உடன் தேதி அறிவிக்கப் படவில்லை.
இதுவரை வந்த புகைப்படங்களை கீழே உங்கள் பார்வைக்கு வைத்துள்ளோம்.
திண்டுக்கல் கோட்டத்தில் :-
அரக்கோணம் கோட்டத்தில் :-
ஒரு கோட்டத்தின்
தோழர்கள் /தோழியர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தனக்கும் தான் அந்த
பாதிப்பு என்ற உணர்வுடன் தமிழகம் முழுதும் போராட்டத்தில் கலந்துகொண்ட தோழர்கள்
/தோழியர்கள், கலந்து கொள்ள முடியாத நிலையில் மனதார வாழ்த்திய அன்பு
நெஞ்சங்களுக்கும் நன்றியையும் வீர வாழ்த்துக்களையும் சேலம் மேற்கு கோட்டம்
நெஞ்சார தெரிவித்து கொள்கிறது.
Tuesday, 17 July 2012
சேலம் மேற்கு கோட்டகண்காணிப்பாளரின் ஊழியர் விரோத போக்கினை கண்டித்து ஆர்பாட்டம் - சேலம் மேற்கு கோட்டம்
Tuesday, July 17, 2012
V.C.Premlatha
நன்றி ! நன்றி !! நன்றி !!!
சேலம் மேற்கு கோட்டத்தின் P3,P4, & GDS சங்க சார்பில்
நெஞ்சார்ந்த நன்றியை
தெரிவித்துக் கொள்கிறோம் .
தமிழகம் தழுவிய
அளவில் அனைத்துக் கோட்ட /கிளைகளிலும்
கண்டன
ஆர்பாட்டம்
சேலம் மேற்கு கோட்டக் கண்காணிப்பாளரின் தொழிலாளர்
விரோத, தொழிற்சங்க விரோதப் போக்கைக் கண்டித்தும்,
ஊழியர்கள் மீது காழ்ப்புணர்ச்சியில் எடுக்கப்பட்ட
பழிவாங்கும் நடவடிக்கைகளை ரத்து செய்திடக்
கோரியும்,
போலி ரசீது
தயாரித்துக் கொடுத்து முறைகேடாக பெற்ற பணம்
ரூ
1,40,000.00 –த்தை உடனடியாக அவரிடமிருந்து பிடித்தம் செய்யவும்,
அவர் மீது
ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கோரியும்,
கடிவாளம் இல்லாத குதிரையாய் தறிகெட்டு ஓடும்
அதிகாரிக்கு எச்சரிக்கை மணியடிக்க, அவர்தம் கொட்டத்தை அடக்க, துறையின்
நட்டத்தை தவிர்க்க அனைவரும் வீறுகொண்டெழுந்து அலை கடலென ஆர்ப்பரித்து
ஆர்பாட்டத்தில் தவறாது கலந்துகொண்டு நீதியை
நிலைநாட்ட
தமிழ் மாநிலச் சங்கம் விடுத்த அறைகூவலை ஏற்று தமிழகம்
தழுவிய அளவில் 16.07.2012 அன்று அனைத்து கோட்ட/கிளை மட்டத்தில் நடந்த மாபெரும் கண்டனஆர்ப்பாட்டத்தில்
கலந்து கொண்ட அனைத்து மாநில சங்க நிர்வாகிகள் மற்றும் கோட்ட/கிளை தோழர்களுக்கும் தோழியர்களுக்கும்
சகோதர சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கும்
நெஞ்சார்ந்த நன்றியை
தெரிவித்துக் கொள்கிறோம் .
16.07.2012 அன்று சேலம் மேற்கு கோட்டத்தில் நடைபெற்ற மாபெரும் கண்டனஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில் சுமார் 130 க்கும் மேற்பட்ட தோழர்/தோழியர்கள் கலந்து கொண்டனர் .
Friday, 13 July 2012
A NOTE ON RIGHT TO INFORMATION ACT 2005
Friday, July 13, 2012
V.C.Premlatha
Friday, July 13, 2012
அன்புத் தோழர்களே ! வணக்கம் ! தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து விளக்கம் அளித்திட வேண்டி ஏராளமான E-MAIL கள் வந்த வண்ணம் உள்ளன.
எனவே இந்த முயற்சி ! வலைத்தளத்தில் இதை
விட விரிவாக தெரிவிக்க முடியாது என்று எண்ணுகிறோம். இது உங்களுக்கு
நிச்சயம் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுகிறோம். நம் மாநிலச் சங்கம்
அங்கீகாரம் பெற்ற பிறகு நிச்சயம் தவறுகளை தட்டிக் கேட்க உங்களுக்கு ஒரு
நம்பிக்கை வந்திருக்கும் என்று எண்ணுகிறோம்.
இருந்தாலும் படித்துவிட்டு கீழே உள்ள COMMENTS பகுதியில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்திட வேண்டு கிறோம் ! நன்றி !
............ அன்புடன் மாநிலச் செயலர் .
தகவல் அறியும் உரிமை சட்டம்........ ஓர் விளக்கம்
தகவல் அறியும் உரிமைச் சட்டம்
2005ம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டத்தை சரியாக பயன்படுத்துவதன் மூலம்
லஞ்சம் மற்றும் ஊழலை பெருமளவு கட்டுப்படுத்த முடியும்.
சட்டம் எதற்கு?
அரசு அலுவலகங்கள் பொது
மக்களுக்கு தகவல் சொல்லக் கடமைப்பட்டிருந்தாலும் இச்சட்டம்
இயற்றப்படுவதற்கு முன் நீங்கள் கேட்கும் தகவலை அவ்வளவு எளிதில் பெற
இயலாது. நீங்கள் தகவல் கேட்டு அனுப்பும் கடிதம் குப்பைக்கு கூட செல்லும்
வாய்ப்பு உள்ளது. ஆனால் இச்சட்டம் இயற்றப்பட்ட பிறகு தகவல் தர மறுத்தால்
சட்டத்தை மீறுவதாகும். தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தால் தகவல் கிடைக்கும்
வாய்ப்பு உறுதியாகிறது.
எங்கிருந்து தகவல் பெறலாம்?
மத்திய மாநில அரசு நிறுவனங்கள்,
பொதுத்துறை நிறுவனங்கள், அரசு நிதி பெறும் நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து
தகவல் பெறலாம். தனியார் நிறுவனங்களுக்கு இச்சட்டம் பொருந்தாது.
என்ன தகவல் பெறலாம்?
அரசு அலுவலகங்களில் உள்ள
கோப்புகள். ஆவணங்கள், சுற்றறிக்கைகள். ஆணைகள், ஈமெயில்கள், நோட் பைல்
எனப்படும் அலுவலக குறிப்புகள் ஆகியவை பெறலாம். இது தவிர சாலை போடுதல்,
அரசு கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் மாதிரிகள் கேட்டுப் பெறலாம்.
எவ்வாறு பெறுவது?
ஒரு தகவல் பெறுவதற்கென தனியான படிவம் ஏதும் கிடையாது. ஒரு சாதாரண வெள்ளைத் தாளில் வேண்டிய தகவல்களை கேட்டு விண்ணப்பிக்கலாம்.
கட்டணம் விவரம்
மத்திய அரசும். தமிழ்நாடு
அரசும் தகவல் பெற ரூ.10/- என கட்டணம் நிர்ணயித்துள்ளன. இக்கட்டணத்தை
ரொக்கமாகவோ, வரைவேலையாகவோ, போஸ்டல் ஆர்டர் மூலமோ,UCR ரசீது மூலமோ
, நீதிமன்ற கட்டண வில்லை மூலமாகவோ செலுத்தலாம். XEROX நகல்
வேண்டுமானால் ஒரு தாளுக்கு ரூ. 2/- எனக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
யாரிடம் தகவல் கேட்பது?
ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும்
உதவிப் பொதுத் தகவல் அலுவலர் அல்லது பொதுத்தகவல் அலுவலர் ஆகியோர்
நியமிக்கப்பட்டுள்ளனர். உதாரணத்திற்கு CPIO, O/O SUPERINTENDENT OF POs.,
என்று முகவரியிட்டு கேட்கலாம். நேரிடையாக தகவல் வேண்டி மனுவைக்
கொடுத்தாலே CPIO அதனை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று சட்டம் கூறுகிறது.
ஆனால் நடைமுறையில் அப்படி நடப்பதில்லை . எனவே REGISTERED POST மூலமோ
அல்லது SPEED POST மூலமோ அனுப்புவது நல்லது. ஒரு துறையின் ஊழியர்கள்
அந்த துறை சார்ந்த அதிகாரியிடம் தகவல் கேட்பதானால் கூடுமானவரை அந்த
ஊழியர் பெயரில் கேட்பதைத் தவிர்க்கவும் . ஏனெனில் அந்த அதிகாரி உங்கள்
மீது கோபம் கொண்டு உங்கள் வேலையில் குறை கண்டுபிடித்து உங்களை தண்டிக்க
நினைப்பார் . ஆகவே ஒய்வு பெற்ற ஊழியர் மூலமோ அல்லது வெளியில் உள்ள பொது
நல/ தொழிற் சங்க அமைப்புகள் மூலமோ நீங்கள் தகவல் கேட்பது நல்லது.
தகவல் ஏன் கேட்கிறோம் என சொல்ல வேண்டுமா?
பிரிவு 6 (2)ன்படி தகவல்
கேட்பவர் எதற்காக தகவல் கேட்கப்படுகிறது என்ற விபரத்தை தெரிவிக்க
வேண்டியதில்லை. பதில் அனுப்ப ஒரு தொடர்பு முகவரியைத் தவிர வேறு எந்த
விபரத்தையும் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.
எவ்வளவு நாட்களில் தகவல் பெறலாம்?
பிரிவு 7 (1)ன் படி ஒரு பொதுத்
தகவல் அலுவலர் 30 நாட்களில் தகவல் தர வேண்டும். கேட்கப்படும் தகவல் ஒரு
நபரின் உயிர்ப்பாதுகாப்பு பற்றிய செய்தியாக இருந்தால் 48 மணி நேரத்தில் தர
வேண்டும்.
மேல் முறையீடு
பொதுத் தகவல் அலுவலர் 30
நாட்களில் தகவல் தரவில்லையென்றாலோ, அல்லது அவர் அளித்த தகவல்
திருப்திகரமாக இல்லையென்றாலோ அந்தந்த துறைகளில் பிரிவு 19ன் கீழ் உள்ள
மேல் முறையீட்டு அதிகாரியிடம், அதாவது APPELLATE AUTHORITY, O/O DIRECTOR
OF POSTAL SERVICES என்ற முகவரியில் 30 நாட்களுக்குள் முதல் மேல்
முறையீடு REGISTERED POST மூலம் செய்யலாம்.
மேல்
முறையீட்டு அதிகாரியின் பதில் திருப்திகரமாக இல்லையெனில் 90
நாட்களுக்குள் பிரிவு 19 (3)ன் கீழ் மாநில அல்லது மத்திய தகவல் ஆணையரிடம்
இரண்டாவது மேல் முறையீடு செய்யலாம்.
1.தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம்,
273/378, அண்ணாசாலை, (வானவில் அருகில்),
தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
போன் : 044-24357580, 24312841, 24312842
'B' Wing, II Floor
August Kranti Bhawan
Bhikaji Cama Place
New Delhi - 110 066
தகவல் தராவிட்டால் தண்டனை உண்டா?
பிரிவு 20ன் கீழ் குறிப்பிட்ட
காலத்துக்குள், உரிய நியாயமான காரணங்கள் எதுவுமின்றி தகவல் தர மறுத்தாலோ,
தவறான தகவல் அளித்தாலோ அரைகுறையான முழுமையற்ற தகவல்கள் அளித்தாலோ,
தகவல்களை அழித்தாலோ பிரிவு 20ன் கீழ் அதிகபட்சமாக ரூ.25,000/- அபராதம்
மற்றும் துறை நடவடிக்கை எடுக்க தகவல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு.
விதி விலக்குகள் :
பிரிவு 8ன் படி நாட்டின்
இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும், நீதிமன்றத்தால் தடை
செய்யப்பட்டிருக்கும், சட்டமன்ற, பாராளுமன்ற உரிமைகள் மீறும், வியாபார
ரகசியங்கள், வெளிநாடுகளிலிருந்து அரசுக்கு வந்த ரகசியங்கள், காவல்
துறையின் ரகசிய தகவலாளர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் தகவல்கள், புலனாய்வில்
உள்ள வழக்குகள், அமைச்சரவை கூட்ட குறிப்புகள் போன்றவை
இச்சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.
மேலும் பிரிவு 24ன் கீழ் மத்திய
மற்றும் மாநில அரசுகளால் பட்டியலிடப்படும் பாதுகாப்பு மற்றும் உளவுத்
துறை நிறுவனங்கள் ஆகியன இச்சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.
எவ்வாறு இச்சட்டத்தை உபயோகமாய் பயன்படுத்தலாம்?
இச்சட்டத்தை பயன்படுத்திட
சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதிமேம்பாடு
நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது என்று கேட்கலாம். நகராட்சி மற்றும்
ஊராட்சிகளில் வழங்கப்படும் நிதிகள் எவ்வாறு செலவிடப்படுகிறது எனக்
கேட்கலாம். ஊழல் நடைபெறக் கூடும் என்று சந்தேகப்படும் அலுவலகங்களில் தகவல்
கேட்கலாம். உங்கள் தெருக்களில் போடப்படும் சாலைகளிலோ அரசு கட்டுமானப்
பணிகளிலோ மாதிரிகள் எடுத்து சோதனைக் கூடங்களுக்கு அனுப்பலாம். டெண்டர்
விபரங்களைக் கேட்கலாம். உங்கள்
அஞ்சல் கோட்டத்தில் அல்லது மண்டல / மாநில அலுவலகங்களில் பணி நியமனங்கள் ,
காண்டிராக்டுகள் , டெண்டர்கள் , பொருட்கள் வாங்குவதில் முறைகேடுகள் , பணி
மாறுதல்களில் முறைகேடுகள் , வியாபார அபிவிருத்தி என்ற பெயரில்
ஆயிரக்கணக்கில் செலவு செய்து போடப்படும் மேளாக்கள் , கூட்டங்கள் , ஸ்டார்
ஹோட்டல் பார்ட்டிகள் என்று எது குறித்த செலவு விபரங்கள் அல்லது
அதற்குண்டான ரசீதுகள் , அந்த செலவு செய்திட அந்த அதிகாரிக்கு உரிய
அதிகாரம் உண்டா என்பது போன்ற விபரங்கள் , அரசு வாகனங்களுக்கு உண்டான
டீசல் பில் , அதற்கான மைலேஜ் , அதற்காக அவர் போட்ட பயணப்படி பில் ,
அவரது டயரி , அவர் ஆய்வு செய்த அலுவலகங்களின் ரிபோர்ட்கள் , இன்னும்
எத்தனை எத்தனையோ நீங்கள் கேட்கலாம். ஆனால் இவ்வளவையும் கேட்பதனால் தயவு
செய்து உங்கள் பெயரில் கேட்காதீர்கள் . அந்த அதிகாரி உங்களை பழி வாங்கத்
தொடங்கி விடுவார் . வேறு நபர்கள் மூலம் நீங்கள் கேட்கலாம் .
தகவல் கேட்பவரை மிரட்டினால் என்ன செய்வது?
தகவல் கேட்பவரை மிரட்டுவது சில
நேரங்களில் நிகழ்ந்துள்ளது. குறிப்பாக காவல் துறையினரிடம் தகவல்
கேட்கையில் இது போல் நிகழும் வாய்ப்பு உள்ளது. அவ்வாறு நேர்ந்தால், எந்த
தகவலை கேட்கையில் மிரட்டல் வந்ததோ, அதே தகவலை மாநிலத்தில் பல்வேறு
இடங்களில் இருந்து நண்பர்களையோ உறவினர்களையோ, அதே தகவலை கேட்டு பல
விண்ணப்பங்களை அனுப்பச் செய்யுங்கள். இது மிரட்டலை நிச்சயம் நிறுத்தும்.
இதையும் மீறி மிரட்டல் தொடர்ந்தால் வழக்கறிஞர்களை அணுகலாம். அல்லது
CHIEF INFORMATION COMMISSIONER இடம் புகார் செய்யலாம். மனித உரிமை
கமிசனிடம் புகார் செய்யலாம். இது கூட உங்கள் சார்பாக உங்கள் மனைவியையோ
அல்லது பிள்ளையையோ விட்டு என் தந்தையை அந்த அதிகாரி மிரட்டுகிறார் . எனவே
உரிய பாதுகாப்பு வேண்டும் என்று புகார் அளிக்கச் செய்யவும். நீங்கள்
நேரிடையாக மனித உரிமை ஆணையரிடம் புகார் செய்தால் , ஏன் மேல் அதிகாரியிடம்
புகார் செய்யாமல் , நேரிடையாக மனித உரிமை ஆணையரிடம் புகார் செய்தாய்
என்று கேட்டு மீண்டும் மிரட்டுவார்கள்.
மத்திய மனித உரிமை ஆணையத்தின் முகவரி :-
National Human Rights
Commission, Faridkot House,
Copernicus Marg, New Delhi, PIN 110001
Tel.No. 23384012
Fax No. 23384863 E-Mail: covdnhrc@nic.in, ionhrc@nic.in
என்ன தோழர்களே ? இது போதுமா ? இனி நீங்கள் செயல்பட ஆரம்பித்துவிடுவீர்களா ?
எதிர்பார்க்கிறோம் நாம் - உங்களிடையே விழிப்புணர்ச்சியை - எதிர்காலம் உமதாகட்டும் !
Thursday, 12 July 2012
Result of the Limited Departmental Competitive Examination for promotion to the cadre of Postmaster Grade-I held on 3rd June 2012
Thursday, July 12, 2012
V.C.Premlatha
கடந்த 03.06.2012 அன்று நடைபெற்ற POSTMASTER GRADE I தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன . இந்தியா முழுமைக்குமான தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ள கீழே கிளிக் செய்யவும் :-
உங்கள் கோட்டத்தில் / மண்டலத்தில் காலியிடம் இல்லை என்று தெரிந்தால் , நீங்கள் வெளிக் கோட்டத்திற்கு /மண்டலத்திற்கு செல்ல விருப்பம் இல்லாதிருந்தால், உடனே உங்கள் கோட்ட அலுவலகம் மூலம் CPMG, TN அவர்களுக்கு DECLINE செய்து REPRESENTATION அனுப்பவும் . ALLOTMENT போட்ட பிறகு மாற்ற இயலாது . நீங்கள் போடப்பட்ட இடத்திற்கு/ மண்டலத்திற்கு சென்று கட்டாயம் JOIN செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
இது போல சென்ற ஆண்டும் பல ஊழியர்கள் அவதிக்குள்ளானார்கள் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். விபரங்களுக்கு உங்கள் கோட்டச் செயலர் /மண்டலச் செயலர்/ மாநிலச் சங்க நிர்வாகியை அணுகவும்.
உங்கள் கோட்டத்தில் / மண்டலத்தில் காலியிடம் இல்லை என்று தெரிந்தால் , நீங்கள் வெளிக் கோட்டத்திற்கு /மண்டலத்திற்கு செல்ல விருப்பம் இல்லாதிருந்தால், உடனே உங்கள் கோட்ட அலுவலகம் மூலம் CPMG, TN அவர்களுக்கு DECLINE செய்து REPRESENTATION அனுப்பவும் . ALLOTMENT போட்ட பிறகு மாற்ற இயலாது . நீங்கள் போடப்பட்ட இடத்திற்கு/ மண்டலத்திற்கு சென்று கட்டாயம் JOIN செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
இது போல சென்ற ஆண்டும் பல ஊழியர்கள் அவதிக்குள்ளானார்கள் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். விபரங்களுக்கு உங்கள் கோட்டச் செயலர் /மண்டலச் செயலர்/ மாநிலச் சங்க நிர்வாகியை அணுகவும்.
| A-34013/04/2012-DE | 11/07/2012 | Result of the Limited Departmental Competitive Examination for promotion to the cadre of Postmaster Grade-I held on 3rd June 2012 |
Wednesday, 11 July 2012
CIRCLE UNION NEWS
Wednesday, July 11, 2012
V.C.Premlatha
GRANT OF PROVISIONAL PENSION TO THOSE RETIRED AND AGAINST WHOM RULE 9 IMPOSED
எந்த ஒரு அரசு ஊழியருக்கும் அவர்கள்
கட்டாய ஒய்வு அளிக்கப்பட்டாலும் அல்லது இலாக்கா ஒழுங்கு
நடவடிக்கை முடியாமல் RULE 9 இன் கீழ்
கொண்டு வரப்பட்டிருந்தாலும்
கூட அவர்களுக்கு அடிப்படை
பென்சனில் 90% வரை
அந்தந்த கோட்ட
அதிகாரியே , ஒய்வு பெற்ற
அந்த மாதமே
PROVISIONAL PENSION ஆக வழங்க வேண்டும் என்பதை
உறுதி செய்து மீண்டும் ஒரு இலாக்கா உத்திரவு இதோ !
இப்படி எத்தனை உத்திரவுகள் இட்டபோதும்
ஏமாற்றும்
கோட்ட அதிகாரிகள் இன்னமும் இருந்துகொண்டே தான்
இருக்கிறார்கள் என்பதற்கு
தஞ்சை கோட்ட தோழர். ராமநாதன் ஓர் உதராணம் !
பாதிக்கப் பட்ட தோழர்கள் எவரேனும்
இருப்பின் உடன் மேல்
முறையீடு செய்து அதன் நகலை மாநிலச் சங்கத்திற்கு அனுப்பவும்
Tuesday, 10 July 2012
சேலம் மேற்கு கோட்ட கண்காணிப்பாளரின் ஊழியர் விரோத மற்றும் ஊழல் போக்கை கண்டித்து மாநில சங்கம் புதுக்கோட்டை மாநில செயற்குழுவில் அறிவித்த தீர்மானத்தின்படி அனைத்து கோட்ட/கிளை மட்டங்களில் முதற்கட்டம் எதிர்வரும் 16.07.2012 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் ! மண்டல மாநில அதிகாரிகளுக்கு கடிதத் தந்தி அனுப்புதல்
Tuesday, July 10, 2012
V.C.Premlatha
Monday, 9 July 2012
ஹலோ! வைரஸ் வரப்போகுதாமே என்ன செய்யப்போகிறாய்
Monday, July 09, 2012
V.C.Premlatha
Saturday, July 7, 2012
DNS Virus on 09.07.12
வாஷிங்டன்:
ஏய் வைரஸ் வரப்போகுதாமே என்ன செய்யப்போகிறாய் என்ற பேச்சுத்தான் தற்போது
எங்குப்பார்த்தாலும் தகவல் பரிமாறக்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வைரஸ்
இணையத்தை முடக்கி உங்களின் கணினியை செயல் இழக்கச்செய்து விடும். இது
புதிதாக தாக்குதலை தரப்போவதில்லை என்ற நிம்மதியான தகவல் வல்லுநர்கள்
தெரிவித்தாலும் ஏற்கனவே உங்கள் கம்ப்யூட்டரில் இந்த வைரஸ் இருந்தால் வரும் 9
ம்தேதி அம்பேல்தான் என்கின்றனர். கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள்.
டி.என்.எஸ்.,(
டொமைன் நேம் சிஸ்டம் ) என்பது நாம் வைத்துள்ள தளத்தின் முகவரியை கணினிக்கு
புரியும் வகையில் ஐ.பி.எண்ணாக மாற்றி அந்த தளங்கள் திறக்க உதவுகிறது.
தற்போது டி.என்.எஸ்.,சேஞ்சர் ( அலூரியன் மால்வேர் ) என்ற வைரஸ் உருவாக்கி
இதன் மூலம் உங்கள் சிஸ்டத்தை செயல் இழக்கச்செய்யும் நாச வேலையில்
அயல்நாட்டவர்கள் 7 பேர் இறங்கினர் . இது கடந்த நவம்பரில் பரப்பி
விடப்பட்டது. இதன் மூலம் பல கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டன. மேலும்
பாதிப்பில் இருந்து தப்பிக்க இதனை அமெரிக்க உளவு பிரிவு எப்.பி.ஐ., மாற்று
சர்வரை நிறுவி உதவியது. இந்த சர்வரை நிறுத்திட முடிவு செய்திருப்பதால் இந்த
வைரஸ் மீண்டும் வரும் 9 ம் தேதி செயல்பட துவங்கி விடுமாம். இதனால் உலகம்
முழுவதும் பல லட்ச கம்யூட்டர்கள் செயல் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வைரஸ் பாதிப்பு உள்ளதா என கண்டறியுங்கள் :எனவே
டி.என்.எஸ்., சேஞ்சர் என்ற வைரஸ் பாதிக்கப்பட்டிருக்கிறதா என்று அறிந்து
முன்சோதனை செய்து கொள்ளவும். பெரும் கார்ப்ரேட் நிறுவனங்கள் ஆண்டி வைரஸ்
வைத்திருப்பதால் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும். நடுத்தரமானவர்கள்
இது போன்று ஆண்டிவைரஸ் வைக்காத பட்சத்தில் பாதிப்பு வர வாய்ப்புகள் அதிகம்.
எனவே தங்களின் கம்ப்யூட்டர்களில் இது போன்று வைரஸ் பாதிப்பு உள்ளதா என
கண்டறிய நீங்கள் www.dns-ok.us கிளிக்
செய்தால் பாதிக்கப்டாமல் இருந்தால் பச்சைக்கலரில் வரும்.
பாதிக்கப்பட்டிருக்குமானால் சிவப்பு நிற இமேஜ் வரும். வரும் 9 ம்தேதி என்ன
நடக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர் இன்டர்நெட் உபயோகிப்பாளர்கள்.
வைரசை முற்றிலுமாக அழிக்க : ஒருவேளை உங்கள் கணினி பாதிக்க பட்டிருந்தால் முதலில் இந்த படிவத்தைforms.fbi.gov/dnsmalware பூர்த்தி செய்யவும். உங்கள் கணினியில் இருந்து அந்த வைரசை நீக்குவது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
விண்டோஸ் XP, Vista, 7 கணினிகளுக்கு: DNS Changer வைரசை கணினியில் இருந்து நீக்குவதற்காக பிரபல ஆன்ட்டிவைரஸ் நிறுவனமான அவிரா ஒரு புதிய மென்பொருளை உருவாக்கி உள்ளனர். இந்த லிங்கில் Avira DNS Repair சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
டவுன்லோட் ஆகியதும் exe பைலை
இரண்டு கிளிக் செய்து இன்ஸ்டால் செய்ய தொடங்கியவுடன் கீழே இருப்பதை போல
வந்தால் உங்கள் கணினி பாதுக்காப்பாக உள்ளது. ஆகவே இந்த மென்பொருள் உங்கள்
கணினியில் இன்ஸ்டால் ஆகாது.ஒருவேளை பாதிக்கப்பட்டிருந்தால் இந்த மென்பொருள்
அந்த வைரசை கண்டறிந்து உங்கள் கணினியில் இருந்து அழித்து விடும்.
மேக்(Mac) கணினிகளுக்கு: மேக் கணினிகளில் இருந்து இந்த வைரசை நீக்க இந்த மென்பொருளை DNS Changer Removal Tool டவுன்லோட் செய்து நீக்கி கொள்ளலா
Source : Dinamalar Dt. 07.07.12.

























