நன்றி ! நன்றி !! நன்றி !!!
சேலம் மேற்கு கோட்டத்தின் P3,P4, & GDS சங்க சார்பில்
நெஞ்சார்ந்த நன்றியை
தெரிவித்துக் கொள்கிறோம் .
தமிழகம் தழுவிய
அளவில் அனைத்துக் கோட்ட /கிளைகளிலும்
கண்டன
ஆர்பாட்டம்
சேலம் மேற்கு கோட்டக் கண்காணிப்பாளரின் தொழிலாளர்
விரோத, தொழிற்சங்க விரோதப் போக்கைக் கண்டித்தும்,
ஊழியர்கள் மீது காழ்ப்புணர்ச்சியில் எடுக்கப்பட்ட
பழிவாங்கும் நடவடிக்கைகளை ரத்து செய்திடக்
கோரியும்,
போலி ரசீது
தயாரித்துக் கொடுத்து முறைகேடாக பெற்ற பணம்
ரூ
1,40,000.00 –த்தை உடனடியாக அவரிடமிருந்து பிடித்தம் செய்யவும்,
அவர் மீது
ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கோரியும்,
கடிவாளம் இல்லாத குதிரையாய் தறிகெட்டு ஓடும்
அதிகாரிக்கு எச்சரிக்கை மணியடிக்க, அவர்தம் கொட்டத்தை அடக்க, துறையின்
நட்டத்தை தவிர்க்க அனைவரும் வீறுகொண்டெழுந்து அலை கடலென ஆர்ப்பரித்து
ஆர்பாட்டத்தில் தவறாது கலந்துகொண்டு நீதியை
நிலைநாட்ட
தமிழ் மாநிலச் சங்கம் விடுத்த அறைகூவலை ஏற்று தமிழகம்
தழுவிய அளவில் 16.07.2012 அன்று அனைத்து கோட்ட/கிளை மட்டத்தில் நடந்த மாபெரும் கண்டனஆர்ப்பாட்டத்தில்
கலந்து கொண்ட அனைத்து மாநில சங்க நிர்வாகிகள் மற்றும் கோட்ட/கிளை தோழர்களுக்கும் தோழியர்களுக்கும்
சகோதர சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கும்
நெஞ்சார்ந்த நன்றியை
தெரிவித்துக் கொள்கிறோம் .
16.07.2012 அன்று சேலம் மேற்கு கோட்டத்தில் நடைபெற்ற மாபெரும் கண்டனஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில் சுமார் 130 க்கும் மேற்பட்ட தோழர்/தோழியர்கள் கலந்து கொண்டனர் .
Tuesday, July 17, 2012
V.C.Premlatha









