Welcome to NFPE Blog

Hi Friends, Welcome to National Federation Of Postal Employees, Group-C

Salem West Division

***R.Sundaram***

Friday, 6 March 2015

HAPPY WOMENS DAY




 உலக மகளிர் தினம்
பெண்கள் உரிமை போற்றுவோம் 

இன்று உலகம் முழுவதும் கொண்டாடப் படும் சர்வதேச மகளிர் தினம் உருவானதே ஒரு போராட்டக் களத்தில்தான். 1900ஆம் ஆண்டின் முதல் 10 ஆண்டுகளில் பெண்கள் பொருளாதாரரீதியாகவும் சமூகரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். இவற் றிற்கு எதிராக உலகம் முழுவதும் பெண்கள் வெகுண்டெழுந்து போராடிக்கொண்டிருந் தனர். சில நாடுகளில் பெண்களுக்கான அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டன.

1907-ல் ஜெர்மனியில், ஸ்டட்கார்ட் என்ற நகரில் முதன் முதலாக ‘சோசலிச பெண்கள் மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாட்டில் 15 நாடுகளிலிருந்து 59 பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். உலகம் முழுவதுமுள்ள பெண்கள் அமைப்புகளை ஒருங்கிணைப்ப தற்கு ஒரு சர்வதேச பெண்கள் அமைப்பு இம்மாநாட்டில் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பிற்கு கிளாரா ஜெட்கின் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

1908-
ம் ஆண்டு முதன்முதலில் நியூ யார்க் நகரில், 15000-க்கும் மேற்பட்ட பெண் கள் பேரணியாக சென்று தங்களின் வேலை நேரத்தை குறைக்க வலியுறுத்தியும், தேர் தலில் வாக்களிப்பதற்கான உரிமை கோரி யும், தங்களுக்கு நியாயமான, சமவேலைக்கு சமஊதியம் வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

1909-ல் ஆடை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த மகளிர் தங்களுக்கு நியாய மான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வேலைநிறுத் தம் மேற்கொண்டனர். அமெரிக்காவின் சோச லிஸ்ட் கட்சி தேசிய அளவிலான முதல் மகளிர் மாநாட்டை பிப்ரவரி 28-ம் தேதி நடத் தியது. அன்றைய தினத்திலிருந்து 1913 வரை பிப்ரவரி கடைசி ஞாயிற்றுக்கிழமை சர்வதேச பெண்கள் தினமாக கொண்டாடப்பட்டது.

ஜெர்மனியில், 1910-ல் கோபன்ஹேகன் நகரில் ஜெர்மனியின் சோசலிச ஜனநாயக கட்சி இரண்டாவது மகளிர் மாநாட்டை நடத் தியது. இதில் 17 நாடுகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். இவர்கள் பல்வேறு நாடுகளின் தொழிற்சங் கங்களின் பிரதிநிதிகளாகவும், சோசலிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகளாகவும், மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகளாகவும் இருந்த னர். பின்லாந்து நாட்டின் நாடாளுமன்றத் திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 3 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதிநிதிகளாக வந்திருந் தனர். இந்த மாநாட்டில் சோசலிஸ்ட் ஜனநா யக கட்சியின் மகளிர் பிரிவு தலைவராக இருந்த கிளாரா ஜெட்கின், பெண்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினத்தை நடத் திட வேண்டும் என்ற தீர்மானத்தை முன் மொழிந்தார். இந்த தீர்மானம் அனைத்து பிரதி நிதிகளாலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

தொடர்ந்து 1911-ல் சர்வதேச மகளிர் தினம் முதன்முதலாக ஆஸ்திரியா, டென் மார்க், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடு களில் மார்ச் மாதம் 19-ந்தேதி கொண்டாடப் பட்டது. இந்த நாடுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்ட பேரணி கள் நடைபெற்றன. இந்த பேரணிகளில் பெண்கள் வேலை செய்வதற்கான உரிமை. தேர்தல்களில் வாக்களிப்பதற்கான உரிமை, பயிற்சி பெறுவது, பொது அலுவலகங்களில் வேலை செய்வது, சமூகத்தில் பாகுபாடின்றி நடத்தப்பட வேண்டும் போன்ற கோரிக் கைகள் வலியுறுத்தப்பட்டன.

அதே ஆண்டில் மார்ச் மாதம் 25-ந்தேதி அன்று நியூயார்க் நகரில் நடைபெற்ற ஒரு முக்கோண தீ விபத்தில், பணியில் ஈடுபட் டிருந்த 140 பெண்கள் உயிரிழந்தனர். இவர் களில் பெரும்பாலானோர் இத்தாலி நாட் டைச் சேர்ந்தவர்கள். இந்த விபத்து அன் றைய தினம் அமெரிக்க நாட்டில் பெண்க ளுக்கு பாதுகாப்பற்ற நிலை இருந்ததை வெளிப்படுத்தியது. இதன் பின்னர், தொழி லாளர் சட்டங்களை கடுமையாக்க வேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு ஏற்பட இந்த நிகழ்ச்சி அடிகோலாக அமைந்தது. இதே ஆண்டில் பெண்கள் நடத்திய ‘ரொட்டியும் ரோசாப்பூவும்’ என்ற இயக்கம் பெண்களின் கோரிக்கை களை வலியுறுத்துவதாக அமைந்தது. இத்த கைய தொடர்ச்சியான போராட்டங்கள் மூலமே பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை யும் வேலை செய்யும் உரிமையும் சம ஊதியம் பெறும் உரிமையும் பிற்காலத்தில் கிடைத்தன.

மார்ச் 8

சர்வதேச பெண்கள் தினம்

1913-14-ல் ரஷ்ய நாட்டில் முதன் முறை யாக சர்வதேச பெண்கள் தினம் கொண் டாடப் பட்டது. 1913-ம் ஆண்டு பிப்ரவரி கடைசி ஞாயிறு அன்று நடைபெற்ற மாநாட்டில் மார்ச் 8 பெண்கள் தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. 1914-ல் போருக்கு எதிராக பெண்கள் ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும் பேரணி நடத்தினர். 1917-ல் ரஷ்ய பெண்கள் ‘ரொட்டிக்காகவும் போருக்கு எதிராகவும்’ பிப்ரவரி கடைசி ஞாயிறு அன்று வேலை நிறுத்தம் செய்தனர். அப்போது நடைபெற்ற போரில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உயிரிழந்திருந்தனர். இந்த வேலை நிறுத்தத்தை தடைசெய்ய ஆரம்பத் தில் அரசு முயற்சி செய்தபோதும் பின்னர் ரஷ்ய நாட்டு பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை முதல் முறையாக தந்தது குறிப் பிடத்தக்கது. அந்த வீரஞ்செறிந்த வேலை நிறுத்தம் ரஷ்ய ஜூலியன் காலண்டர் படி பிப்ரவரி 23 என்றாலும் உலகம் முழுவதும் கடைப்பிடித்து வரும் காலண்டர் படி மார்ச் 8 ஆகும். அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளே நாம் இன்று கொண்டாடும் மார்ச் 8 சர்வதேச மகளிர் தினமாகும்.

இன்று சர்வதேச மகளிர் தினம் உலகில் அனைத்து நாடுகளிலும் உற்சாகமாக கொண் டாடப்படுகிறது. சீனா, வியட்நாம், ஒன்றுபட்ட ரஷ்ய நாடுகளில் இன்று மகளிர் தினத்திற்கு அரசு விடுமுறை விடப்படுகிறது. அமெரிக் காவில் மார்ச் மாதம் முழுவதும் பெண்கள் வரலாற்று மாதம்  கொண்டாடப்படுகிறது.

இந்திய நாட்டில் பெண்கள் நிலை

நமது நாட்டிலும் மகளிர் தின கொண் டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வணிக நிறுவனங்கள் இந்த நாளை பயன் படுத்திக்கொண்டு ஆடை அணிகலன்கள் விற்பனைக்கு, விளம்பரத்திற்கு பயன்படுத்திக் கொள்கின்றன. ஆனால் இந்திய நாட்டில் பெண்கள் நிலை மிகவும் மோசமாகவுள்ளது.

இந்திய நாட்டில் பணிபுரியும் பெண் களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக ‘அசோசெம்’ அமைப்பு சேகரித்த புள்ளி விப ரங்கள் கூறுகின்றன. இரவு நேரங்களில், தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற் றும் பெண்களும், விமானப் போக்குவரத்துப் பணியில் பணியாற்றும் பெண்களும், மருத்து வமனையில் பணியாற்றும் பெண்களும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என்றும், நிறுவனங்கள் இவர்களுக்கு போதுமான பாதுகாப்பை தரத்தவறியுள்ளன என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இது தலைநகர் தில்லியில் அதிகபட்சமாக 65சதவீதமும் ஹைதராபாத்தில் 28சதவீதமும் மும்பையில் 28சதவீதமும் என உள்ளது.

பெங்களூரில் உள்ள 2200 தொழில் நிறுவனங்களில் 1600 நிறுவனங்கள் மட்டும் தொழில்துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களில் 75000 முதல் 95000 பெண்கள் பணியாற்றி வருகின்றனர். மருத் துவமனைகள், விமானப்போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பத் துறைகளில் பணி யாற்றும் இவர்களில் 56சதவீத பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என ‘அசோசெம்’ புள்ளிவிபரம் கூறுகிறது.

மகாத்மா காந்தி, பண்டிட் ஜவஹர்லால் நேரு, தந்தை பெரியார் போன்றவர்கள் பெண் களுக்கு சம உரிமை வழங்குவது குறித்து பேசியிருந்தாலும், பெண்களுக்கென தனிச் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும், அவை யெல்லாம் ஏட்டுச் சுரைக்காயாகவே உள்ளன. நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீடு பிரச்சனையில் இன்று இந்திய அரசியல்வாதிகளின் முகமூடிகள் கிழித்தெறி யப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளது. இடதுசாரிக் கட்சித் தலைவர்களை தவிர ஏனையோர் இரட்டை நிலைப்பாடு கொண்டி ருப்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. மாநி லங்களவையில் நிறைவேற்றப்பட்ட இட ஒதுக்கீடு மசோதா, மக்களவையில் நிறை வேற்ற முடியாமல் உள்ளது வெட்கக்கேடானது.

இன்று பெண்கள் தினத்தை கொண்டாடு வதில் ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம் உள்ளது. அதே போல் உழைப்பாளி மக்களுக் கும் ஒரு நோக்கம் உள்ளது.

பெண்களுக்கு, சமூகம், அரசியல், பொரு ளாதாரம் மற்றும் தொழிற்சங்கத்தில் சமத்து வம் கிடைத்திடவும், சொத்து உரிமை, சட்டம் இயற்றக் கூடிய அவைகளில் இடம் பெற்றிடவும்,

வேலை செய்யுமிடங்களில் ஆண்- பெண் என்ற பாகுபாடு இல்லாமலிருக்கவும், வேலை செய்யுமிடங்களில் பாதுகாப் பினை உத்தரவாதப்படுத்திடவும், குழந்தைகள் காப்பகங்கள் ஏற்படுத்திடவும், பாலியல் பலாத்காரத்தை தடுத்து நிறுத்திடவும், வரதட்சணைக் கொடுமைகளை களைந்திட வும், பெண்களை வணிக விளம்பரத்திற்கு அருவருக்கத்தக்க முறையில் பயன்படுத் துவதை தடுத்து நிறுத்திடவும், சாதியக் கொடுமைகளிலிருந்தும், மதரீதியான, சம்பிர தாய, மூட பழக்க வழக்கங்களிலிருந்தும் பெண்களை மீட்டெடுத்திடவும், உலகமயத் தினால் முதலில் பாதிக்கப்படுவது பெண் என் பதால் அவற்றிற்கு எதிரான போராட்டங்களில் பெண்களை ஈடுபடுத்துவதும்

இன்று உழைப்பாளி மக்கள் முன் உள்ள தலையாயக் கடமைகளாகும். இந்த உணர் வோடு சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடுவோம்








புதிய எழுத்தர்கள் சான்றிதல் சரிபார்ப்பு -சேலம் மேற்கு கோட்டத்தில் முடிந்தது.

நமது சேலம் மேற்கு கோட்டத்தில் இன்று 06.03.2015 தேர்வான எழுத்தர்களுக்கான சான்றிதல் சரிபார்ப்பு தொடங்கியது..  நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்கள் மகிழ்வுடன் வரவேற்று தொடங்கிய சான்றிதல் சரிபார்ப்பு மதியம் முடிந்தது.  நமது கோட்ட சங்கம் சார்பில் சான்று சரிபார்ப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்து சொல்லி  இனிப்பு வழங்கி வரவேற்றோம்.  விரைவில்  இவர்களுக்கு பணி நியமன உத்திரவு  வழங்கப்படும் என  எதிர் பார்க்கிறோம்.  அதன் மூலம் கோட்டத்தில்  உள்ள எழுத்தர் பற்றாக்குறை ஓரளவு குறையும்  என  நமது கோட்டகண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார். 21 எழுத்தர்களில் மூவர் மற்றும்  விருப்பமின்மை தெரிவித்ததாக தகவல் வந்துள்ளது.

***.    N F P E  P3, SALEM WEST*******




PENTA MOBILE PHONE SALES STARTED AT SURAMANGALAM HO 



 

Improvement in Finacle Access and Processing...


It is noticed that there is good improvement in the performance of FINACLE software today.

The speed was good in the operation of Menu and its functions.

We hope that the same level of Speed and Connectivity would be maintained hereafter...

Many offices have already done EOD at this time..

Appreciations are hereby conveyed to the CBS Team  /  CPC Chennai / Cept  teams for their efforts....

NFPE 
salemwest

Wednesday, 4 March 2015

FURTHER VICTORY TO P 3/ GDS CIRCLE UNIONS AGITATIONAL PROGRAMMES IN TN CIRCLE

நமது அஞ்சல் மூன்று மற்றும் GDS  மாநிலச் சங்கங்களின் போராட்டத்திற்கு  மேலும் கிடைத்து வரும்  வெற்றிகள் !

அன்புத் தோழர்களுக்கு இனிய வணக்கம் ! ஏற்கனவே  நம்முடைய  இரண்டு கட்ட போராட்டத்தின் விளைவாக  நாம் வைத்திட்ட கோரிக்கைகளில் 

1) நீண்ட காலமாக தேங்கிக் கிடந்த  நேரடி எழுத்தர் தேர்வு முடிவுகள் கடந்த 17.02.2015 அன்றே அறிவிக்கப்பட்டன என்பதை  முதல் வெற்றியாக தெரிவித்திருந்தோம்.

2) இரண்டாவதாக  ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் சென்னை பெருநகரத்தில் தாம்பரம் , தி . நகர்( மத்திய கோட்டம் ) , அண்ணா நகர் 
(வட கோட்டம் ) , விருகம்பாக்கம் ( தென் கோட்டம் ) உள்ளிட்ட இடங்களில் நடப்பில் இருந்த  துரித அஞ்சல் பட்டுவாடா  உத்திரவு அடியோடு ரத்து செய்யப்பட்டது. இதனால் நம்முடைய அஞ்சல் மூன்று தோழர்கள்  விடுமுறை  தினங்களை முழுமையாக பெறலாம் என்பது மிகப் பெரிய வெற்றி. இதேபோல  தென் மண்டலத்திலும்  8 அஞ்சலகங்களில்  இந்த உத்திரவு அமலில் உள்ளது.  அதனையும் நிச்சயம் ரத்து செய்து உத்திரவு பெறுவோம் . 

3) மூன்றாவதாக  CIS ( McCAMISH )  பிரச்சினைகளை தீர்க்காமல்  கண்மூடித்தனமான  FURTHER  MIGRATION நிறுத்தப் படவேண்டும் என்று கோரியிருந்தோம். தற்போது கடந்த 2.03.2015 இல் உத்திரவிடப்பட்ட 17 தலைமை அஞ்சலகங்களில் 8இல்  உடன் நிறுத்தச் சொல்லியும்  அடுத்த MIGRATION எதுவும் செய்திடாமல் உடன் நிறுத்திடவும்  உத்திரவிடப் பட்டுள்ளது.  இது நமது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

4) நான்காவதாக  கண்மூடித்தனமாக ரூ. 10/- RD கணக்குகள் போடச் சொல்லுவது , போலி  RPLI  பாலிசிகள்  போடச் சொல்வதை உடன் நிறுத்தச் சொல்லியும் , "எந்தவித தவறான வழிகளையும் பிரயோகிக்கக் கூடாது அப்படிப் பிரயோகித்தால்  பொறுத்துக் கொள்ளமுடியாது " என்றும்  CPMG  தமிழ்நாடு அவர்கள்  உத்திரவிட்டுள்ளார் . இந்த உத்திரவு  பாதிக்கப்பட்ட  அப்பாவி  ஊழியர்களுக்கு, குறிப்பாக  GDS  ஊழியர்களுக்கு  மிகப்பெரும்  பாதுகாப்பினைத் தரும் . இந்த உத்திரவின் நகலை கீழே  பார்க்கலாம். இதையும் மீறி எந்த குட்டி அதிகாரியாவது  மிரட்டி போலி பாலிசி போடச் சொன்னாலோ  அல்லது  போலி RD ACCOUNT  குறைந்த DENOMINATION இல் நூற்றுக் கணக்கில் போடச் சொன்னாலோ அந்த அதிகாரியின் பெயர் குறிப்பிட்டு உடன்  மாநிலச் செயலர்களுக்கும்  பொதுச் செயலருக்கும் எழுத்து மூலம் புகார் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.  அவர் மீது உடன்  CPMG , SECRETARY  POST  முக்கியமாக  FINANCE  MINISTRY  வரை  நாங்கள் புகார் செய்து மேல் நடவடிக்கை எடுக்க வைக்கிறோம் .

5) ஐந்தாவதாக ,  தேர்வு செய்யப் பட்ட அனைத்து நேரடி எழுத்தர்களையும் உடனடியாக தாற்காலிக (PROVISIONAL ) பணி  நியமனம் செய்யுமாறு CPMG  அவர்கள்,   எழுத்தர் நியமன அடிப்படை சட்டவிதிகளை RELAX செய்து  உத்திரவிட்டுள்ளார்கள். அதாவது அவர்களிடம் இருந்து UNDER TAKING DECLARATION  பெற்றுக் கொண்டு  CERTIFICATE  VERIFICATION  செய்யாமலேயே , சாதிச் சான்று  VERIFICATION செய்யாமலேயே, MEDICAL  CERTIFICATE  பெறாமலேயே ,  POLICE  VERIFICATION  பெறாமலேயே  அவர்களுக்கு  தாற்காலிகப்  பணி  நியமனம் அளித்திடும் உத்திரவே  இது. ஏற்கனவே  நமது மத்திய சங்கத்தின் மூலம்  TRAINING  செல்லாமல் அனைத்து VERIFICATION  முடிக்கப்பட்டால் பணி  நியமனம்  அளிக்கலாம் என்ற உத்திரவை நாம் பெற்றிருந்தாலும்  தற்போது CPMG  , TN  அவர்கள் அளித்துள்ள  உத்திரவு  ஆட்பற்றாக்குறையை வெகுவாகத் தீர்த்திட  உதவும்,  உடனடி  நியமனத்திற்கான உத்திரவாகும். இது  நமது   தமிழ் மாநில  அஞ்சல் மூன்று  சங்கத்தின்  இரண்டு கட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.  உத்திரவின் நகலை கீழே பார்க்கவும்.  இந்த செய்திகளை உடன் நகல் எடுத்து அனைத்து ஊழியர்களுக்கும்   அளிக்கவும்.

தொடர்ந்து  சுற்றிக்கை மூலமாகவும், SAVINGRAM  மூலமாகவும்,  தொடர் கடிதங்கள் மூலமாகவும்  அஞ்சல் மூன்று வலைத்தளத்தின் மூலமாகவும், அகில இந்திய சங்கத்திற்கு  இடைவிடாமல்  பிரச்சினைகளை எடுத்துச் செல்வதன் மூலமாகவும்  தமிழக அஞ்சல் மூன்று சங்கம்   நிர்வாகத்தின்  கவனத்திற்கு   பிரச்சினைகளை கொண்டு சென்ற போதும் தீர்க்கப்படாத  பிரச்சினைகள் , 

தற்போது  நூற்றுக் கணக்கான  ஊழியர்களின் ஒன்று பட்ட குரல் மூலம் ஓங்கி  ஒலிக்கத் துவங்கியவுடன்தான்  நிர்வாகத்தின் காதுகளுக்கு நம் பிரச்சினைகள் செல்லத்துவங்கியுள்ளன. இப்போதாவது கேட்கத் துவங்கியுள்ளதே  என்று  சற்று  நிம்மதி அடைகிறோம். ஆனாலும் நம்முடைய பெரும்பகுதி பிரச்சினைகள்  இன்னமும் தீரவில்லை. இது தொடக்கமே !

LSG  பிரச்சினையில்  மாநில நிர்வாகம் கேட்டிருந்த விளக்கம்  DTE  மூலம் அனுப்பப் பட்டுள்ளதாகவும்  உடன் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும் என்று 
நம்முடைய அஞ்சல் மூன்றின் பொதுச் செயலர் தோழர். N .S . அவர்கள் இன்று தொலைபேசியில் தெரிவித்தார்.   இது குறித்து நாளை  மாநில நிர்வாகத்திடம் பேசிட உள்ளோம். 

மூன்று ஆண்டுகளாக  அளிக்கப் படாத  LSG  பதவி  உயர்வு உடன் அளிக்கப் பட வேண்டும்  என்பதும் அதுவும்   நிர்வாகத்தின் காலதாமதம் என்பதால்  NOTIONAL  ஆக  அளிக்கப்பட வேண்டும் என்பதும்  நமது கோரிக்கை.HSGI  அலுவலகங்களுக்கு   பணித்  தகுதி உள்ள ஊழியர்கள் இல்லை யென்றால்  REVISED  HSG  I  பணி  நியமன விதிகளின்படி  HSG  I  பதவிகளை DOWNGRADE செய்யாமலேயே   உரிய ஊழியரைக் கொண்டு  HSG  II LEVEL  இல்  OPERATE  செய்திட வேண்டும் என்பதாகும். அப்படிச் செய்தால் எல்லா  HSG  I  பதவிகளும்   உடன் நிரப்பப்படும். இதனை  மாநில அஞ்சல் நிர்வாகம்  கருத்தில் கொண்டு உடன் உத்திரவு இட வேண்டுகிறோம்.

நாளை (05.03.2015) மாலை   தமிழக NFPE    COC  யின் கூட்டம்  எழும்பூர் RMS  மனமகிழ் மன்றத்தில் நடைபெற  உள்ளது  அதில் நிச்சயம் இணைந்த போராட்டத்திற்கு  முடிவு  எடுக்கப்படுமென்று   நம்புகிறோம் .  தேங்கிக் கிடக்கும் பிரச்சினைகளைத் தீர்த்திட  போராட்டம் தான்  வழி என்று நிர்வாகம் நம்மை தள்ளியுள்ளது.   போராட்டத்திற்குப் பின்னர்தான்  இந்த தீர்வுகள் கிடைக்கத் துவங்கியுள்ளன  !    

தீர்மானித்தபடி அடுத்த கட்டத்தை நோக்கி  ஒன்றுபட்டு  இயக்கத்தை எடுத்துச் செல்வதில் அஞ்சல் மூன்று  சங்கம்  முன்கை  எடுத்து  நிச்சயம்  செயல்படும். ஒற்றுமையே  வெற்றி !

        வாழ்க  NFPE  !  வளர்க  நம்   ஒற்றுமை !  வெல்க நம் போராட்டம் !

                                                          தோழமையுடன் 
 J . இராமமூர்த்தி,                                                                                              R . தனராஜ் ,
மாநிலச் செயலர், அஞ்சல் மூன்று                                மாநிலச் செயலர் , GDS 

TARGET /TORTURE  குறித்த CPMG உத்திரவினை நமது மேற்கு மண்டல P M G அலுவலகம் அனைத்து கோட்ட அதிகாரிகளுக்கும் தெரிவித்த கடித நகல் 


நேரடி எழுத்தர் நியமனம் செய்திட உத்திரவு 
DECLARATION  சாரம் 
and I have been made known that this PROVISIONAL appointment order issued to me and my deputation to training/appointment  is subject to satisfactory verification of my age proof , educational certificates , community certificate, Discharge certificate/ medical certificate etc and other verifications as prescribed by Departmental rules and it is liable to be cancelled at any time if any of the document /information furnished by me is found not genuine /I was not eligible for selection to the post of Postal Assistant /Sorting Assistant for any reason.
b) I ……………………… hereby declare that no Criminal/Police case is registered against me in any police station.
c) I ……………… being  physically handicapped understand that my selection is liable to be cancelled if it is found later on medical examination by the Competent authority that I do not come under the category of physically handicapped as defined in the relevant order.

d) I …………… belong to the ………………. Community which is recognized as                                 by the Government of India for the purpose of reservation in service in the relevant orders.

Heartly Welcome to Department of Posts


THIS IS THE ORDER OF 'CBS ' IN TAMIL NADU. WHETHER THE AUTHORITIES KNOWINGLY ADMITTING THE 'MALADY' ?

Finacle ன் நிலை . என்று மாறும் ????????????

மொதல்ல இப்படிதாங்க சொன்னாங்க ....................
Image result for vadivelu comedy images

Respected Sir/Madam,
Final step of DC closure is running. It  is expected to be completed by  17.30hrs......DC closure status can be viewed in EODMON at label "DC status" . On completion of DC closure , SOLs can commence  HSCOD
​Request to communicate all the SOL's under your Region please.​
Circle Processing Centre(CBS),
Tamilnadu Circle,
Contact No 044-28295964,65.


இத நம்பி நாங்களும் இருந்தோம் ...........
அப்புறம் சொன்னாங்க .....................





Image result for vadivelu comedy imagesvadivelu comedy images க்கான பட முடிவு

Respected Sir/Madam,
Final step of DC closure is not yet completed.
Expected time of completion, is not known.
Further update will be sent by 18.30hrs
Circle Processing Centre(CBS),
Tamilnadu Circle,
Contact No 044-28295964,65.
சரி ஆகட்டும்னு விட்டுட்டோம் 

vadivelu comedy images க்கான பட முடிவு


கடைசில ..மணி எட்டே முக்காலுக்கு ...சொல்றாங்க ..

vadivelu comedy images க்கான பட முடிவு

Sir

We have been directed  by the competent authority to convey the following instructions on EOD for 03.03.15
 ​All Sos's are hereby requested to clear all the blocking validations and to leave for the day. Kindly inform All the divisional SPOC's to give a consolidated report of their concerned offices regarding NIL report on BLOCKING VALIDATIONS to their Regional office and in turn RO will communicate to CPC on the same.
 ​EOD for today (03.03.2014) - HSCOD for all ​the offices will be executed centrally from CPC. Those offices who have not finished entering the transactions in FINACLE due to connectivity issues may complete the transactions if finacle connectivity is available..

Circle Processing Centre(CBS),
Tamilnadu Circle,
Contact No 044-28295964,65.

Image result for vadivelu comedy images


அததான்யா நாங்க  மொதல்லேயே சொன்னோம் ...

போயிட்டு  நாளைக்கு வரோம்னு ......

கேட்டீங்களா ........