Tuesday, 10 September 2013
Sunday, 8 September 2013
திருமண வாழ்த்து
Sunday, September 08, 2013
V.C.Premlatha
நமது சங்கத்தின் மூத்த தோழரும் வெண்ணந்தூர் அஞ்சல் அதிகாரி ஆன திரு V.ஜெயராமன் அவர்களின் மகன் செல்வன். J.பிரவின்குமார் அவர்களுக்கும் செல்வி. C.பிரியசாந்தி அவர்களுக்கும் 09.09.2013 அன்று சேலம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெறுகிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம்.மேலும் நமது மூத்த தோழியர்.C.ஹெலன் செல்வராணி அவர்களின் மகள் செல்வி. Dr.P.கிரேஸ் மனோ அவர்களுக்கும் Dr.P.மோகன் அவர்களுக்கும்09.09.2013 அன்று நாமக்கல் தமிழ் பாப்திஸ்து(S.B.M) ஆலயத்தில் நடைபெறும் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம். மணமக்கள் பல்லாண்டு வாழ நமது கோட்டச் சங்கம் வாழ்த்துகிறது.
இப்படிக்கு
C.சஞ்சீவி கோட்டச்
செயலர்- P3 சேலம்
மேற்கு கோட்டம் சேலம-636005.
Thursday, 5 September 2013
CIRCLE UNION NEWS
Thursday, September 05, 2013
V.C.Premlatha
D.O. LETTER FROM DTE.TO ALL CHIEF PMGs ON CASUAL LABOUR ISSUE
Posted by
All India Postal Employees Union – Group ‘C’ Tamilnadu Circle
at
10:47 AM
No comments:
Links to this post
GENERAL BODY MEETING OF AIPEU GR.C , ARAKKONAM DIVL. BRANCH
கடந்த 01.09.2013 அன்று அரக்கோணம் அஞ்சல்
மூன்று கோட்டச் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் , கோட்டத் தலைவர் தோழர்.
மலர்வண்ணன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது . பொதுக் குழுக் கூட்டத்தில்
அஞ்சல் மூன்று மாநிலச்சங்கத்தின் முன்னாள் உதவித் தலைவர் தோழர்.Eவெங்க
டேசன் அவர்களும் , அஞ்சல் மூன்று மாநிலச் செயலர் தோழர். J .R . அவர்களும்,
ராணிப்பேட்டை கிளையில் தலைவர் தோழர் G . மணி அவர்களும், கிளையின் செயலர்
தோழர் தனசேகரன் அவர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாறிவரும்
சூழலில் இலாக்காவின் இன்றைய நிலை குறித்தும் , தொழிற்சங்கத்தின் கடமை
குறித்தும் மாநிலச் செயலர் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.
இறுதியில் காலியாக உள்ள கோட்டச் செயலர்
பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் இளைய தோழர். P . குமார்
அவர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றார் . பொதுக் குழு சிறப்பாக நடைபெற
உதவிய அனைத்து தோழர்களுக்கும் , குறிப்பாக கோட்டத் தலைவர் தோழர்
மலர்வண்ணன் அவர்களுக்கும் , முன்னாள் கோட்டச் செயலர் தோழர். A . குமரன்
அவர்களுக்கும் புதிய கோட்டச் செயலர் தோழர் குமார் அவர்களுக்கும் நம்
மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். பொதுக் குழுவில் எடுக்கப்
பட்ட சில புகைப்படங்களை கீழே காண்க .
KOVILPATTI JCA STRUGGLE ENDS AFTER WRITTEN AGREEMENT WITH CIRCLE OFFICE BEARERS
கோவில்பட்டி கோட்டத்தின் JCA சார்பாக
நீண்ட காலமாக தேங்கிக் கிடக்கும் தலமட்ட பிரச்சனைகளை தீர்த்து
வைக்கக்கோரி மூன்று கட்ட போராட்டம் அறிவிக்கப் பட்டு கடந்த 06.08.2013
அன்று ஆர்ப்பாட்டமும் , 13.08.2013 அன்று தர்ணா போராட்டமும் 03.09.2013
மற்றும் 04.09.2013 ஆகிய தேதிகளில் தொடர் உண்ணாவிரதப் போராட்டமும்
அறிவிக்கப் பட்டு , முதல் இரண்டு கட்ட போராட்டங்கள் நடத்தப் பட்டு ,
கோரிக்கைகளில் எந்த வித முன்னேற் றத்தை யும் கோட்ட நிர்வாகம் அளிக்காத
காரணத்தால் மூன்றாவது கட்ட போராட்டம் கடந்த 03.09.2013 அன்று காலை
துவக்கப் பட்டது . இதில் தோழர் ஸ்ரீவெங்கடேஷ் மாநிலத்தலைவர் அஞ்சல் மூன்று ,
தோழர் J.ராமமூர்த்தி மாநில செயலாளர் அஞ்சல் மூன்று , தோழர் தன்ராஜ் மாநில
செயலாளர் GDS-NFPE, தோழர் தியாகராஜபாண்டியன் தென்மண்டல செயலாளர் அஞ்சல்
மூன்று, தோழர் ராமராஜ் , மாநிலத் தலைவர் ,GDS NFPE ஆகியோர் கலந்து
கொண்டனர் .
மண்டல அலுவலகத்தின் தலையீட்டின் பேரில்
, காலை 11.30 மணிக்கு கோவில்பட்டி முது நிலைக் கண்காணிப்பாளர் பேச்சு
வார்த்தைக்கு நிர்வாகிகளை அழைத்தார். பேச்சு வார்த்தையில் அங்கு
சென்றிருந்த மாநிலச் சங்க நிர்வாகிகள் மற்றும் கோட்ட , கிளைச் சங்க
நிர்வாகிகள் பங்கு கொண்டோம். பேச்சு வார்த்தையில் ஏற்பட்ட முன்னேற்றம்
காரணமாக 27 அம்சக் கோரிக்கைகளை மீது தனித் தனியே எழுத்து பூர்வமான
பதிலுடன் கூடிய MINUTES கண்காணிப்பாளர் அவர்களால் பதிவு செய்யப் பட்டு
மாநிலச் செயலரிடம் அளிக்கப் பட்டது. கோரிக்கைகளில் பெரும்பான்மையானவை
தீர்க்கப் படுவதாக எழுத்து மூலம் பதில் பெற்றதாலும், இதர RT இட மாறுதல்
கோரிக்கைகளுக்கு மண்டல அலுவலகத்துக்கு பரிந்துரைப்பதாகவும் பதில்
அளித்ததின் பேரில் போராட்டம் விலக்கிக் கொள்வதாக அறிவிக்கப் பட்டது.
தொடர்ந்து தல மட்டக் கோரிக்கைகளுக்காக
தொய்வில்லாமல் போராடிய கோவில்பட்டி , சங்கரன்கோயில், தென்காசி அஞ்சல்
மூன்று, அஞ்சல் நான்கு, GDS கோட்ட/கிளைச் சங்க நிர்வாகிகளுக்கும்
அனைத்து தோழர்களுக்கும் மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். !
தல மட்டத்தில் கிளர்ந்தெழுந்து போராடினால்
வெற்றி நிச்சயம் என்று மீண்டும் நிரூபிக்கப் பட்டிருக்கிறது. அங்கு
எடுக்கப் பட்ட புகைப்படங்களில் சிலவற்றை கீழே பார்க்கவும் .
Thursday, September 05, 2013
V.C.Premlatha
PMG, CCR ACTION ON HOLDING OF MACP IN DIVISIONS UNDER CITY REGION
அன்பு கோட்ட கிளைச் செயலர்களே ! வணக்கம் !
உங்கள் கோட்டத்தில் கீழே குறிப்பிட்டுள்ள
காலத்திற்கான MACP குறித்து நடவடிக்கை எடுக்கப் படவில்லையானால் உங்கள்
கோட்ட கண்காணிப் பாளரை அணுகி உடன் DSC கூட்டிட அழுத்தம் கொடுக்கவும் .
ஏற்கனவே உள்ள காலத்திற்கு MACP நிலுவையில் இருக்குமானால் உடன் மாநிலச்
சங்கத்திற்கு தகவல் தெரிவிக்கவும் . நமது PMG, CCR அவர்கள் கோட்ட
அதிகாரிகளுக்கு முன்கூட்டியே உரிய நடவடிக்கைக்கு உத்திரவிட்டுள்ளார்கள்.
இந்த நடவடிக்கைக்கு நமது PMG, CCR
அவர்களுக்கும் AD STAFFஅவர்களுக்கும் நம் மாநிலச் சங்கத்தின் நன்றி. பல
மண்டலங்களில் இந்த பிரச்சினை பல காலமாக தூங்கிக் கிடக்கிறது என்பதை
நினைவில் கொள்ளவும்.
Tuesday, 3 September 2013
DBAnalyzer for Sanchay Post - dated 30/08/2013
Tuesday, September 03, 2013
V.C.Premlatha

Pre-requisite: .Net framework 3.5
Download
NOTE: Generation of Consolidated Report is a TIME CONSUMING PROCESS. All
offices are advised to generate this report after completing the daily
routines like DAY-END process, Database Backup, etc.
Download
Duties and responsibilities of Project Arrow Postmasters without caretaking allowance
Tuesday, September 03, 2013
V.C.Premlatha

Duties
and responsibilities of Postmaters working in Project Arrow Post
offices as per Directorate letter no D.O. No.Project Arrow/Office
Service Level/08-09 dated 11.02.2009 are:
Please click here to view the department order copy to read the duties allocated to Project arrow postoffice postmaster.
1.Outside campus cleaned and garbage removed.
2.Watering of plants/trees/lawn
3.Cutting hedges and trimming trees whenever required
4.Seeing that All the campus lights an back list boards are in working condition
5.Cleaning and mopping office floors with disinfectant
6.Cleaning
and mopping counter area twice a day or more as per the customer
traffic and empting of waster paper baskets in public hall/office hall
7.Dusting of furniture/counters
8.Cleaning of window glass panes/counter glasses with water/spray
9.Cleaning of toilets after every two hours with phenyl disinfectant and availability of water
10.Cleaning of wash basin and availability of naphthalene balls
11.Punctuality of staff
12.Availability of soap/liquid soap in toilet
13.Mopping of drinking water area every half an hour
14.Availability of sufficient cash at the counter
15.Fans/Tube lights/roof/walls to be cleaned at least once in a month
16.Free availability of forms used by customers at the identified place in public hall
17.Genset is in working condition
18.Availability of sufficient diesel
19.UPS in working order-water level of batteries checked
20.Availability of sufficient office stationery
The
above duties are in addition to duties and responsibilities as
prescribed by various volumes and rules made thereunder.
It
can be seen that Postmaster has to act as caretaker of the building.
But why the department is not granting 10% Caretaking allowance when the
MOF has given orders(Click here to view/download GOI,MOF, DoE , OM No. F.No.7(21)2008-E III(A) Dated 22.09.2008) to grant caretaking allowance.Is it not unjustified.
All project arrow office postmasters
are requested to send your representation to claim 10% care taker
allowance to the Project arrow postmaster. Proforma for the
representation is attached below.
Click here to download the proforma to claim the 10% care taker allowance
Click here to download the proforma to claim the 10% care taker allowance
APPROVAL OF CPMG, TN FOR SECRETARY , STAFF SIDE , RJCM , TAMILNADU
Tuesday, September 03, 2013
V.C.Premlatha
நமது அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர். J .R . அவர்கள் ,
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மாநில கூட்டு ஆலோசனைக் குழுவின்
ஊழியர் தரப்பு செயலராக இலாக்காவால் .அங்கீகரிக்கப் பட்டார் . இதன் மூலம்
இனி ஊழியர் தரப்பு பிரச்சினைகளை மாநில கூட்டு ஆலோசனை குழு கூட்டத்தில்
நம்மால் முழுமையாக எடுத்துச் செல்ல இயலும் என்பதை மகிழ்ச்சியுடன்
தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழகத்தில் இருக்கும் அனைத்து கோட்ட/
கிளைச் செயலர்களுக்கும் ஓர் அன்பு வேண்டுகோள். உங்கள் கோட்ட/கிளைகளில்
தீர்க்கப் படாமல் உள்ள பொதுப் பிரச்சினைகள் (தனி நபர் பிரச்சினைகள் அல்ல ) ,
இலாக்கா விதி மீறிய உத்திரவுகள் , ஊழியர் சேம நலன் சம்பந்தப் பட்ட
பிரச்சினைகள் இப்படி மாநில அளவில் எடுக்கக் கூடிய பிரச்சினை எதுவாக இருந்தாலும் அவற்றை
தெளிவாக நீங்களோ அல்லது உங்கள் SYSTEM ADMINISTRATOR அல்லது E -MAIL
அனுப்பத் தெரிந்த தோழர் மூலமோ நம்முடைய அஞ்சல் மூன்று மாநிலச்
சங்கத்திற்கு எதிர்வரும் 08.09.2013 க்குள் கிடைக்குமாறு அனுப்பிட
வேண்டுகிறோம்.
ஆட்பற்றாக்குறை பிரச்சினை என்பதை உரிய
புள்ளி விபரங்களுடன் அளித்திட வேண்டுகிறோம் . ஏனெனில் இந்தப்
பிரச்சினையில் ஏற்கனவே பலமுறை சரியான தகவல் தராததால், நம் கோரிக்கை
இழுத்தடிக்கப் பட்டு நிராகரிக்கப் பட்டது என்பதை நினைவில் கொள்ளவும் .
அது P 4, R 3, R 4, ADMIN , ACCOUNTS ,
SBCO, GDS பிரச்சினைகளாக இருந்தாலும் அந்த அந்த மாநிலச் செயலர்களுக்கு
பிரச்சினைகளை அனுப்பி , அதன் நகலை மட்டும் அஞ்சல் மூன்று மாநிலச் சங்க
முகவரிக்கு தவறாமல் அனுப்பிடக் கோருகிறோம் .
மின்னஞ்சல் முகவரி : aipeup3tn@gmail.com
தயவு செய்து அலட்சியப் படுத்தாமல் , கால
தாமதப் படுத்தாமல் இந்த செயலை செய்திட வேண்டுகிறோம். நிச்சயம் உங்கள்
பிரச்சினை எதிர்வரும் 10.09.2013 க்குள் மாநில கூட்டு ஆலோசனை குழு
கூட்டத்தின் விவாதத்திற்கு வைக்கப் படும் . இப்போது விடுபட்டால் இனி
அடுத்த 4 அல்லது 5 மாதம் கடந்த பின்னரே மறுபடியும் பிரச்சினை வைக்க
முடியும் ஏற்கனவே எடுக்கப் பட்டு தீர்க்கப் படாத பிரச்சினைகள் ஆனாலும்
மீண்டும் அதனை எழுப்பிட நிச்சயம் முயற்சிக்கிறோம். எனவே அதனையும்
கருத்தில் கொள்ளவும் .
RJCM என்பது மாநில அளவில் உச்ச மட்ட
அமைப்பு என்பதால் நிச்சயம் பல பிரச்சினைகளை இதில் எடுத்துச் சென்று பேசி
தீர்த்திட சட்ட ரீதியாக வாய்ப்புகள் அதிகம் என்பதை நினைவில் கொண்டிட
வேண்டுகிறோம். இதர மத்திய அரசு , மாநில அரசு , பொதுத் துறைகளில் இப்படிப்
பட்ட வாய்ப்புகள் மறுக்கப் பட்டுள்ளன என்பதையும் நினைவில் கொள்ள
வேண்டுகிறோம்.
எனவே இந்த அமைப்பை நாம் முழுமையாக
பயன்படுத்திக் கொள்ள உங்களின் ஒத்துழைப்பை வேண்டுகிறோம். இந்த செய்தியை ,
இதனை படிக்கும் அனைத்து தோழர்களும் தங்கள் பகுதியில் உள்ள நிர்வாகிகள்
படிக்காமல் இருந்தால், அவர்களுக்கு தெரிவித்து முழுமையாக உபயோகப்
படுத்திக் கொள்ளவும்.
ஒருபுறம் நாம் வாதாடும் களம் !
முடியவில்லையானால் போராடும் களம் !
நிச்சயம் பிரச்சினையை தீர்த்திட முயலுவோம் !
நன்றியுடன்
மாநிலச் செயலர் அஞ்சல் மூன்று ,
தமிழ் மாநிலம் .
Govt to hike dearness allowance by 10%; benefit 80 lakh employees & pensioners
Tuesday, September 03, 2013
V.C.Premlatha
Monday, 2 September 2013
சேலம் மேற்கு கோட்டம் சார்பாக புதிய பென்ஷன் திட்ட மசோதா தாக்கல் குறித்து ஆர்ப்பாட்டம்
Monday, September 02, 2013
V.C.Premlatha
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்
அஞ்சல் மூன்று ,அஞ்சல் நான்கு
மற்றும் GDS (NFPE)
|
சேலம் மேற்கு கோட்டம் சேலம் – 636 005
( உறுப்பினர்களுக்கு
மட்டும் )
அறிக்கை எண் 9 நாள் 02.09.2013
வாழ்க NFPE ! வளர்க NFPE !
வீரமிகு தோழர்களே ! தோழியர்களே !!
வணக்கம்.
அஞ்சல் துறைப் பணிகளை சீரமைக்க ஆலோசனை வழங்க இலாக்காவால்
மெக்கன்சி கன்சல்டன்சி என்னும் அமெரிக்க
நிறுவனம் அமர்த்தப்பட்டது. ஆனால் அந்த
நிறுவனமோ பல நாடுகளிலும் நல்ல லாபத்தில் இயங்கிய
பல கம்பெனிகளை தங்களது அபத்தமான ஆலோசனைகளால் நட்டத்தில் ஆழ்த்தி
மூடுவிழாவும் நடத்திய நிறுவனம் ஆகும்.இந்த நிறுவனத்தை நமது துறைக்கு ஆலோசனை
வழங்குவதற்கு ரூ.100 கோடிக்கு கட்டணம் கொடுத்து 2
ஆண்டுகளுக்கு முன் நியமித்தது. ஆனால் நிலைமை தாறுமாறாக மாறுவதைஉணர்ந்து
கொண்ட நமது இலாக்கா M N O P –L1,L2 பிரிப்பக முறையை
கைவிட்டு முந்தைய முறையில் இனி அஞ்சல் பிரிப்பகங்கள் செயல்படும் என்று
அறிவித்துள்ளது. ஒன்றுபட்ட நமது
போராட்டத்தின் வெற்றி இது ஆகும்.
அடுத்த தாக்குதலாக நமது மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய
பென்ஷன் மசோதா திட்டம் இன்று 2.9.2013
திங்கள்கிழமை பாராளுமன்றத்தில்
தாக்கல் செய்யப்படுகிறது. இதன் படி மத்திய
அரசு பணியில் 2004 ஆம் ஆண்டுக்கு பின்
பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய பென்ஷன் திட்டம் நடைமுறை படுத்தப்படும் என
அறிவித்துள்ளது. அதன்படி மத்திய அரசு தன் பங்காக ஒரு தொகையை செலுத்தி அப்பணத்தை
பங்கு சந்தையில் முதலீடு செய்து அதில் வரும் லாபத்தை பிரித்து கொடுக்கும் அபத்தமான
திட்டத்தை நடைமுறை படுத்த முயலுகிறது. இதை அணைத்து மத்தியஅரசு ஊழியர் சங்கங்களும்
ஒன்று சேர்ந்து எதிர்ப்பு குரல் கொடுத்து வருகிறது.
இத்திட்டம் நிறைவேறினால் அடுத்து பென்ஷன் திட்டத்தில் உள்ள மத்திய அரசு
ஊழியர் அனைவருக்கும் நீட்டிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இருந்து வருகிறது. எனவே பாராளுமன்றத்தில் இத்திட்டம் தாக்கல்
செய்வதற்கு எதிர்ப்பு காட்டும் வகையில் இந்தியா முழுவதும் உள்ள மத்திய அரசு
ஊழியர்கள் 3.9.2013 அன்று அணைத்து மத்திய
அரசு அலுவலகம் முன்பும் மாபெரும்
ஆர்பாட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டதின்
அடிப்படையில் நமது N F P
E சம்மேளனமும் அணைத்து தலைமை அஞ்சலகம் மற்றும்
கோட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் விடுத்துள்ளது. அதன் படி நமது சேலம் மேற்கு
கோட்டத்தில் சூரமங்கலம் தலைமை அஞ்சலகம் முன்பு 3.9.2013 மாலை 6.00 மணிக்கு அஞ்சல் மூன்று ,அஞ்சல் நான்கு மற்றும் GDS (NFPE) தலைவர்களின் கூட்டு தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அணைத்து பகுதி தோழர்களும் /தோழியர்களும் முக்கியமாக 2004
ஆம் ஆண்டுக்கு பின் பணியில் சேர்ந்த
ஊழியர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெறச் செய்யுமாறு
கேட்டு கொள்கிறோம்.
தோழமையுடன் .
அகில
இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் ,
அஞ்சல்
மூன்று ,அஞ்சல் நான்கு மற்றும் புறநிலை ஊழியர் சங்கம் (NFPE)
சேலம் மேற்கு கோட்டம்
,சேலம் 636005
Monday, September 02, 2013
V.C.Premlatha
TN NFPE COC DECIDES TO HOLD THE PROGRAMME ON 3RD SEPTEMBER 2013
அன்புத் தோழர்களுக்கு வணக்கம். ! நம்முடைய மத்திய அரசு ஊழியர்
மகா சம்மேளனம் மற்றும் நம்முடைய NFPE சம்மேளனம் எடுத்த
முடிவினை அமல் படுத்திட வேண்டி,
புதிய பென்ஷன் திட்டத்திற்கான மசோதா
பாராளுமன்றத்தில் எதிர் வரும் செப்டம்பர் 2 அன்று விவாதத்திற்கு எடுத்துக்
கொள்ளப் படுவதால் , தமிழ் மாநில NFPE சம்மேளனத்தின் கீழ் உள்ள உறுப்பு
சங்கங்கள் அடங்கிய தமிழ் மாநில அஞ்சல் -RMS இணைப்புக் குழுவின்
சார்பாக
எதிர்வரும் 03.09.2013 அன்று தமிழகம் தழுவிய அளவில் இந்த அறைகூவலை ஏற்று நடத்திட வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
அதே தேதியில் தமிழகத்தில் , சென்னை
மாநகரில் உள்ள கோட்டங்கள் உட்பட, அனைத்து தலைமை அஞ்சலக / கோட்ட அலுவலக
வாயிலில் PFRDA மசோதாவை எதிர்த்து உணவு இடைவேளை கண்டன ஆர்ப்பாட்டமோ
அல்லது மாலை நேர கண்டன ஆர்ப்பாட்டமோ தவறாமல் நடத்திட வேண்டுகிறோம்.
தமிழக அஞ்சல் மூன்றின் மாநிலத் தலைவரும்
மாநிலச் செயலரும் மதுரை கோட்டச் சங்கங்கள் ஏற்று நடத்திடும்
ஆர்ப்பாட்டத்தில் அதே தேதியில் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கிறோம்.
இதற்கான ஏற்பாடுகளை மதுரை அஞ்சல் மூன்று கோட்ட சங்கம் ஏற்று நடத்திட வேண்டுகிறோம்.
இதற்கான செய்திகளை பத்திரிகை மற்றும் தொலைக் காட்சி ஊடகங்களுக்கு தவறாமல் அளித்து மத்திய அரசின் கவனத்தை
ஈர்த்திட வேண்டுகிறோம்.
நமது போராட்டம் வெல்லட்டும் !
PFRDA மசோதா முடங்கட்டும் !







