Welcome to NFPE Blog

Hi Friends, Welcome to National Federation Of Postal Employees, Group-C

Salem West Division

***R.Sundaram***

Friday, 26 April 2013

தபால் காரர் தேர்வு

28.04.2013 அன்று நடைபெறும்  தபால் காரர்  தேர்வின்  SALEM WEST DIVISIONக்கான VACANCY அறிவிக்கப்பட்டுள்ளது .

MTS (GROUP-D) TO POSTMAN

Total Vacancies        UR     SC     ST

       07                     04       01      02

GDS to POSTMAN

Total Vacancies        UR     SC     ST

       06                     06        0        0

                                                தேர்வு நடைபெறும்  இடம்

                 CSI POLYTECHNIC COLLEGE, YERCAUD MAIN ROAD, SALEM 636007

                                   தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகிறோம் 

அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு மற்றும் GDS (NFPE) சேலம் மேற்கு  ,


8% DA ORDER


Thursday, 25 April 2013

ROTATIONAL TRANSFER 2013 -SALEM WEST DIVISION

  1.  நமது சேலம் மேற்கு கோட்டத்தின் சுழல் மாறுதல் உத்திரவு இன்று வெளி வந்துள்ளது.



Monday, 22 April 2013



                                                            
Com.C.Chandrasekar working President NFPE 
Bids Adieu to the Department
COM. C. CHANDRASEKAR AT AIC, TRIVANDRUM
     Com.C.Chandrasekar, Postmaster Grade I Peelamedu SO retires from service on30.4.2013 after 40 years of service in the Department.

      He was  Divisional Secretary  of Coimbatore Division for 6 years from 1996 and Regional Secretary,Coimbatore for 4 years.  He was uplifted as All India leader of the NFPE and worked as such for the past 5 years.  He retires as Working President of our mighty organisation NFPE and active member of our Divisional Unions from the day of his appointment.  He was instrumental in successful conduct of the Bonus strikes 1996, 7 -days strike in 1998 and 14 days strike in Dec.2000. He struggled hard for the cause  of our employees and always at the doorstep of the employees to help them in their distress.

     After so many stints as Sub Postmaster and PRI (P), he retires as Postmaster Grade-I official at Peelamedu SO.

The Salem West Divisional Union Wishes him a healthy and long life 
for the cause of 
Postal employees

                              C,SANJEEVI,DIVISIONAL SECRETARY,P3,SALEM WEST                                     

DA (Dearness Allowance) orders

DA (Dearness Allowance) orders for 1.1.2013 

to be issued tomorrow 22.04.2013 

by the 

Government of India.

 

CGS News. Delhi

Saturday, 20 April 2013

முக்கிய செய்தி


மத்திய  அரசு  ஊழியர்களுக்கு  01.01.2013 முதல்  பஞ்சப்படியை  80% 

ஆக  உயர்த்த  18.04.2013 அன்று  நடந்த  மத்திய அமைச்சரவை 

ஒப்புதல்  வழங்கியது 

.இதனால்  23.04.2013 அன்று நடைபெறவிருந்த 

ஆர்ப்பாட்டம்  இரத்து  செய்யபடுகிறது   . 

JCA/NFPE  SALEM WEST

RE-ALLOTMENT OF GROUP- B OFFICERS

GR  B  பதவி உயர்வு பெற்று  வெளி மாநிலங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கும் 11 அதிகாரிகளுக்கு  தமிழ்நாடு வட்டத்திற்கு  இன்று   மாறுதல் உத்திரவு  கிடைத்துள்ளது. இதனால் பல கோட்டங்களுக்கு புதிய அதிகாரிகள் வர உள்ளார்கள். அவர்களுக்கு நம் வாழ்த்துக்கள்.  அந்த உத்திரவின் நகலை கீழே உள்ள இணைப்பில் 'கிளிக் ' செய்து பார்க்கவும் 

http://www.indiapost.gov.in/DOP/Pdf/Postings/9-22-2013-SPG_18-04-2013.pdf

FILLING UP OF ALL VACANT HSG I POSTS BASED ON EXISTING RULES - ORDERS ISSUED TODAY

அன்புத் தோழர்களுக்கு வணக்கம். நீண்ட காலமாக  நிரப்பப் படாமல் ADHOC ARRANGEMENT  இல் வைக்கப் பட்டிருக்கும்  GENERAL  LINE க்கு உண்டான அனைத்து HSGI  பதவிகளையும் தற்போது நடப்பில் உள்ள  HSGI  RECTT RULES  அடிப்படையில் நிரப்பிக் கொள்ள இலாக்கா இன்று உத்திரவிட்டுள்ளது.
ஏற்கனவே அனைத்து HSGI  பதவிகளையும்  GENERAL LINE க்கு அளிக்க வேண்டும் என்றும் ,  அதன் மீது புதிய பதவி உயர்வுத்திட்டம் வேண்டும் என்றும்  நாம் கோரிக்கை வைத்து , அதன் அடிப்படையில்  இலாக்கா DOPT  க்கு பரிந்துரை செய்திருந்தது  உங்களுக்கு நினைவிருக்கும்.  பல காலம் இந்த கோப்பு பல்வேறு விளக்கங்கள்  கேட்டு  மீண்டும் மீண்டும் திருப்பப் பட்டதால்  DOPT  ஒப்புதல் கிடைக்கும் வரை HSGI  பதவிகளை நிரப்ப வேண்டாம் என்று இலாக்கா முடிவு எடுத்திருந்ததும் உங்களுக்கு நினைவு இருக்கும்.  

கடந்த 28.12.2012 JCM  இலாக்கா குழு கூட்டத்தில் , இந்தப் பரிந்துரை DOPT யால் மறுக்கப் பட்டதால் , பழைய சட்ட விதிகளின் படி HSGI  பதவிகளை நிரப்பிக்கொள்ள விரைவில் உத்திரவு அளிக்கப் படும் என்று  எழுத்து பூர்வமாக பதிலை இலாக்கா அளித்திருந்தது  உங்களுக்கு நினைவு இருக்கும். 

இதிலும் கூட 50% பதவிகள் ASP  இலிருந்து பதவி உயர்வாக அளிக்கப் பட்டிருந்ததால்,  ASP  யும்  HSGI  உம்  ஒரே ஊதியத்தில் உள்ளதால்  அது பதவி உயர்வாக கருதி  காலிப் பணியிடங்களை நிரப்பிடலாமா என்பதற்கு DOPT  இலிருந்து  விளக்க ஆணை வராத காரணத்தால் , அந்த பதவிகள் நிரப்பப்  படமாட்டாது  என்று உத்திரவு இடப்பட்டுள்ளது .

இதனால் மீண்டும் நம்முடைய தோழர்களே பல IPO  லைன் காலிப் பணியிடங்களில்  வேலை பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது .   எது எப்படி ஆனாலும் , தற்போது  இந்த உத்திரவின் மூலம்  எதிர்வரும் 30.04.2013 க்குள் DPC  கூட்டப் பட்டு  06.05.2013 க்குள்  50% HSGI  பதவிகள் நிரப்பப் பட வேண்டும் என்று உத்திரவிடப்பட்டுள்ளதால் , தற்போது HSGII  பணியிடங்களில் இருக்கும் தோழர்களுக்கு HSGI  பதவி உயர்வும் , LSG  பதவியில் உள்ளவர்களுக்கு , புதிதாக  காலியாகும்  HSGII  பணியிடங்களும் , அதேபோல நிலுவையில் LSG  காலிப்   பணியிடங்களுடன் கூடுதலாக காலிப் பணியிடங்களும்  கிடைக்கும் என்பதும் , இதனால்  RESULTANT  ஆக 300 க்குக் குறையாமல்  PA  காலியிடங்கள்  2013 DIRECT  RECTT  இல் கூடுதலாக நிரப்பப் படும் என்பதும் நமக்கு  மகிழ்ச்சியை அளிக்கிறது .  

இவையெல்லாம்  காலதாமதமில்லாமல் முறையாக நிறைவேற நம் மாநிலச் சங்கம் நிச்சயம்  நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி கூறுகிறோம். உத்திரவின் நகலை கீழே உள்ள இணைப்பில் 'கிளிக்' செய்து பார்க்கவும்.

http://www.indiapost.gov.in/DOP/Pdf/Circulars/04-44-2012-SPB.II_18-04-2013.pdf



8% DA APPROVED BY THE CABINET

8% D.A. TO CENTRAL GOVT. EMPLOYEES APPROVED BY THE CABINET . AWAITING  ORDERS OF THE FINANCE MINISTRY BY TOMORROW. 

 

Thursday, 18 April 2013

8% பஞ்சப்படி வழங்க 23.04.2013 அன்று ஆர்ப்பாட்டம்




                     N F P E    


அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்

அஞ்சல் மூன்று ,அஞ்சல் நான்கு மற்றும்  புறநிலை ஊழியர்கள் (NFPE)

சேலம்  மேற்கு  கோட்டம்,             சேலம் – 636 005







ÍüÈȢ쨸 ±ñ 5          (¯ÚôÀ¢É÷ ÍüÚìÌ ÁðÎõ)           §¾¾¢ : 18.04.2013
          
அன்புத் தோழர்களே ! தோழியர்களே !  வணக்கம். 
01.01.2013 முதல் வழங்கப் பட வேண்டிய  8% பஞ்சப்படி  இதுவரை வழங்கப் படவில்லை .எப்போதும் போல இது மார்ச் இறுதியில் உத்திரவிடப்பட்டு ஏப்ரல் முதல் தேதியில்  நிலுவையுடன்  உயர்த்தி வழங்கப் பட்டிருக்க வேண்டும் . 

பிரதம  அமைச்சர்  ஊரில் இல்லை, நிதி அமைச்சர் ஊரில் இல்லை என்று மாற்றி மாற்றி காரணங்கள் கூறப்பட்டு  இன்று வரை காபினெட் ஒப்புதல் அளிக்கப் படாததால்  நமக்கு சட்டப் படி வழங்கப் பட வேண்டிய  DA  கால தாமதப் படுத்தப் படுகிறது. 

இதனை எதிர்த்து  மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம்  எதிர்வரும் 23.04.2103 அன்று  அவரவர் பணியிடங்களில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டுகோள் விடுத்துள்ளது. இதன் படி நமது  NFPE  சம்மேளனமும்  இதற்கான வேண்டுகோளை  அளித்துள்ளது. 

ஆகவே தமிழகத்தின் அனைத்து கோட்ட / கிளைகளிலும்  எதிர்வரும் 23.04.2013 அன்று  ஆர்ப்பாட்டம் நடத்தி , பிரதம அமைச்சருக்கு கடிதத் தந்திஅனுப்பிட உள்ளது

எனவே  சேலம் மேற்கு   கோட்டத்தில்  இருந்தும்  NFPE  P3/P4/GDS(NFPE) சங்கங்களின் கோட்ட நிர்வாகிகள்  மற்றும்  அனைத்து உறுப்பினர்கள் எதிர்வரும் 23.04.2013 செவ்வாய் கிழமை மாலை 6.00 மணிக்கு சூரமங்கலம் தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெறும்   கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பிரதம அமைச்சருக்கு கடிதத் தந்திஅனுப்பிட உள்ள நிகழ்ச்சியில் பெருந்திரளாக   கலந்து கொண்டு சிறப்பு  செய்திட வேண்டுகிறோம். 



வாழ்க NFPE !                                                                                                       வளர்க NFPE !
                                                                                                                                               
                                                                  என்றும்உங்கள் சேவையில் 
                                                                                  தோழமையுடன்,

  K. பரமசிவம் தலைவர்  P3       C.சஞ்சீவி செயலர் P3         K.K.கமலமணி  நிதிச்செயலர்  P3    
                                            
      R.வரதராஜன் தலைவர் P4    R..பிரகாஷ் செயலர் P4 S.ரத்தினம் நிதிச்செயலர்  P4

    K. கண்ணபிரான் கௌரவதலைவர் GDS(NFPE) C.ஆறுமுகம் செயல் தலைவர் GDS(NFPE)         R.சரவணன்  தலைவர் GDS(NFPE) S.சண்முகம் செயலர் GDS(NFPE)C.முருகன் நிதிச்செயலர்GDS(NFPE)