TN JCA DECISION ON RECORDED MINUTES AND AFTERMATH
அன்புத் தோழர்களே ! வணக்கம்
!
05.10.12 அன்று காலை தொழிலாளர் நல ஆணையர்
முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தை குறித்தும் , பின்னர் மதியம் அதன்
மீதான CPMG, TN உடன் நடைபெற்ற
இரு தரப்பு பேச்சு வார்த்தை குறித்தும் நாம் ஏற்கனவே உங்களுக்கு
தெரிவித்திருந்தோம் . நம் வலைத்தளத்திலும் பிரசுரித்திருந்தோம்
. இது போலவே தமிழக FNPO வலைத்தளத்திலும்
பிரசுரிக்கப்
பட்டிருந்தது . திங்கள் அன்று பேச்சு வார்த்தையின் பதிவு
செய்யப்பட்ட MINUTES
COPY கிடைத்தவுடன் இதன் மீதான அடுத்த கட்ட நடவடிக்கை
குறித்து JCA கூடி
முடிவெடுத்து அறிவிப்பதாக தெரிவித்திருந்தோம்.
இன்று மதியம் JCA தலைவர்கள் DPS HQRS அவர்களை
சந்தித்து DRAFT COPY
MINUTES குறித்து கேட்கச் சென்றோம். ஆனால் அவர்
ஏற்கனவே பதிவு செய்யப் பட்ட FINAL MINUTES இன் நகலை நமக்கு வழங்கினார் , அதன் நகல் சம்பந்தப்
பட்ட அதிகாரிகள் அனைவருக்கும் ஏற்கனவே அனுப்பப் பட்டதாகவும் நம்மிடையே தெரிவித்தார்.
அதிலும் கூட நாம் பேசிய பிரச்சினைகள் குறித்தோ , இருதரப்பாலும் ஒப்புக்
கொள்ளப் பட்ட விஷயங்கள் குறித்தோ பதிவாகவில்லை மாறாக தன்னிச்சையாக
CPMG TN அவர்களால்
எடுக்கப் பட்டதாக (DECISION
OF THE CPMG) சில முடிவுகள் மட்டுமே அதில் பதிவாகி இருந்தது . மேலும்
ஏற்கனவே STRIKE DEFER
செய்யப் பட்டதாகவும் பதிவாகி இருந்தது. குறிப்பாக அதில் தோழர்
ஜெயகுமார் அவர்களின் தற்கொலை பற்றி மட்டுமே விசாரணை செய்யப்படும்
என்று பதிவாகி
இருந்தது. விசாரணை DPS
CADRE க்கு மேலான PMG CADRE இல் போடப்படாமல் அதே RANK இல் உள்ள DPS HQRS விசாரணை செய்வார்
என்றும் பதிவு செய்யப் பட்டிருந்தது .
எனவே இந்த முடிவை நாம்
கடுமையாக மறுத்து நமது
எதிர்ப்பை பதிவு செய்தோம் . மேலும் நாளை இதனை அனைத்து
மாநிலச் செயலர்களும்
கையெழுத்திட்டு மறுப்புக் கடிதம் அளிப்பதாக
அவரிடம் தெரிவித்தோம்.
தொழிலாளர் நல ஆணையத்தின்
வழிகாட்டுதலை மீறி BILATERAL
AGREEMENT ஆக இல்லாமல் UNILATERAL DECISION ஆக பதிவு செய்யப் பட்டது சட்டப்படி செல்லாது
என்றும் , ஆகவே கோரிக்கைகளின்
மீது அறிவிக்கப் பட்டபடி வேலைநிறுத்தம்
நடைபெறும் என்றும் இந்த முடிவு எழுத்து பூர்வமாக LABOUR COMMISSIONER க்கும் நாளை கையெழுத்திட்டு
அளிக்கப் படும் என்றும் பதிவு செய்தோம்.
பின்னர் அங்கிருந்த NFPE/FNPO மாநிலச் செயலர்கள்
ஒன்று கூடி நாளை அனைத்து மாநிலச் செயலர்களையும் ஒன்று கூட்டி அடுத்த கட்ட தீவிர
நடவடிக்கை குறித்து முடிவெடுப்பதாக தீர்மானித்தோம். இந்த முடிவு
நாளை காலை 11.30 மணியளவில் அனைவருக்கும்
உடனடியாக SMS மூலம் தெரிவிக்கப்படும்
. பின்னர் வலைத்தளத்தில் அறிவிக்கப்படும் .
எனவே தோழர்கள் அனைவரும்
போராட்ட களத்தில்
அதன் வீச்சை அதிகப் படுத்தும் படி கேட்டுக் கொள்கிறோம். நம்முடைய பொதுச்
செயலர் மூலம் இலாக்கா முதல்வரை
சந்தித்து விரிவான
கடிதம் அளித்து பேசி உடன் முடிவு காணவும் கேட்டுக்
கொண்டுள்ளோம் .வதந்தியாளர்களை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்
கொள்கிறோம். JCA
விலிருந்து வரும் இறுதியான தகவல்களை மட்டுமே நம்புமாறும்
கேட்டுக்
கொள்கிறோம்.
No
comments:
Tuesday, October 09, 2012
V.C.Premlatha








