Welcome to NFPE Blog

Hi Friends, Welcome to National Federation Of Postal Employees, Group-C

Salem West Division

***R.Sundaram***

Tuesday, 9 October 2012

11.10.2012 வேலை நிறுத்தம் குறித்த செய்திகள்



TN JCA DECISION ON RECORDED MINUTES AND AFTERMATH

அன்புத் தோழர்களே ! வணக்கம் !

05.10.12 அன்று காலை  தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் நடைபெற்ற  பேச்சு வார்த்தை  குறித்தும் , பின்னர் மதியம் அதன் மீதான  CPMG, TN  உடன்  நடைபெற்ற இரு தரப்பு பேச்சு வார்த்தை குறித்தும் நாம் ஏற்கனவே உங்களுக்கு தெரிவித்திருந்தோம் .  நம் வலைத்தளத்திலும்  பிரசுரித்திருந்தோம் . இது போலவே  தமிழக FNPO வலைத்தளத்திலும்  பிரசுரிக்கப் பட்டிருந்தது . திங்கள் அன்று  பேச்சு வார்த்தையின் பதிவு செய்யப்பட்ட MINUTES COPY  கிடைத்தவுடன்  இதன் மீதான  அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து JCA  கூடி முடிவெடுத்து அறிவிப்பதாக  தெரிவித்திருந்தோம். 

இன்று மதியம் JCA  தலைவர்கள் DPS HQRS  அவர்களை சந்தித்து DRAFT COPY  MINUTES குறித்து கேட்கச் சென்றோம். ஆனால் அவர் ஏற்கனவே பதிவு செய்யப் பட்ட   FINAL MINUTES  இன்  நகலை நமக்கு வழங்கினார் , அதன் நகல் சம்பந்தப் பட்ட அதிகாரிகள் அனைவருக்கும் ஏற்கனவே  அனுப்பப் பட்டதாகவும்  நம்மிடையே தெரிவித்தார்.  

அதிலும் கூட  நாம் பேசிய  பிரச்சினைகள்  குறித்தோ , இருதரப்பாலும்  ஒப்புக் கொள்ளப் பட்ட  விஷயங்கள்  குறித்தோ  பதிவாகவில்லை  மாறாக  தன்னிச்சையாக CPMG TN  அவர்களால் எடுக்கப் பட்டதாக (DECISION OF THE CPMG)  சில முடிவுகள் மட்டுமே அதில் பதிவாகி  இருந்தது . மேலும் ஏற்கனவே STRIKE DEFER  செய்யப் பட்டதாகவும்  பதிவாகி இருந்தது.  குறிப்பாக அதில் தோழர் ஜெயகுமார் அவர்களின்  தற்கொலை பற்றி மட்டுமே  விசாரணை செய்யப்படும் என்று  பதிவாகி இருந்தது. விசாரணை DPS CADRE க்கு மேலான PMG CADRE இல் போடப்படாமல் அதே RANK இல் உள்ள DPS HQRS  விசாரணை செய்வார் என்றும் பதிவு செய்யப் பட்டிருந்தது .

எனவே இந்த முடிவை நாம் கடுமையாக  மறுத்து நமது எதிர்ப்பை பதிவு செய்தோம் . மேலும்  நாளை  இதனை அனைத்து மாநிலச் செயலர்களும் கையெழுத்திட்டு  மறுப்புக் கடிதம்  அளிப்பதாக அவரிடம் தெரிவித்தோம்.

தொழிலாளர் நல ஆணையத்தின் வழிகாட்டுதலை மீறி BILATERAL AGREEMENT ஆக இல்லாமல் UNILATERAL  DECISION  ஆக  பதிவு செய்யப் பட்டது சட்டப்படி செல்லாது என்றும் , ஆகவே  கோரிக்கைகளின் மீது  அறிவிக்கப் பட்டபடி  வேலைநிறுத்தம் நடைபெறும்  என்றும்  இந்த முடிவு  எழுத்து பூர்வமாக LABOUR COMMISSIONER க்கும் நாளை  கையெழுத்திட்டு அளிக்கப் படும் என்றும் பதிவு செய்தோம். 

பின்னர்  அங்கிருந்த  NFPE/FNPO  மாநிலச் செயலர்கள் ஒன்று கூடி நாளை அனைத்து மாநிலச் செயலர்களையும் ஒன்று கூட்டி  அடுத்த கட்ட தீவிர நடவடிக்கை குறித்து முடிவெடுப்பதாக  தீர்மானித்தோம். இந்த முடிவு நாளை காலை 11.30 மணியளவில்  அனைவருக்கும்  உடனடியாக SMS  மூலம் தெரிவிக்கப்படும் . பின்னர் வலைத்தளத்தில் அறிவிக்கப்படும் .  

எனவே தோழர்கள் அனைவரும்  போராட்ட களத்தில் அதன் வீச்சை அதிகப் படுத்தும் படி கேட்டுக் கொள்கிறோம்.  நம்முடைய பொதுச் செயலர் மூலம் இலாக்கா  முதல்வரை சந்தித்து  விரிவான கடிதம் அளித்து பேசி உடன் முடிவு காணவும்  கேட்டுக் கொண்டுள்ளோம் .வதந்தியாளர்களை  நம்ப வேண்டாம்  என்றும்  கேட்டுக் கொள்கிறோம். JCA  விலிருந்து வரும் இறுதியான தகவல்களை மட்டுமே  நம்புமாறும்  கேட்டுக் கொள்கிறோம். 
No comments:

Monday, 8 October 2012

மதுரையில்நடந்தஎழுச்சிமிகுஆர்ப்பாட்டமும், போராட்ட பொதுக்குழுவிளக்கக்கூட்டமும்,

                                                        .....ஒற்றுமை ஓங்குக....  

மதுரையில் 05.10.2012 அன்று, மாலை 0530 மணியளவில், மதுரை மண்டல அலுவலகத்தில், ஆர்ப்பாட்டத்திற்கு J.C.A. தோழர்கள், அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

தென்மண்டல இயக்குனர் திரு.வ.ச. ஜெயசங்கர், ஆர்ப்பாட்டத்தினைத் தவிர்க்க வேண்டி, மாலை 0300 மணிக்கு எல்லாம் திருநெல்வேலி சென்றுவிட்டார்.

தென்மண்டல இயக்குனரால், கிட்டத்தட்ட 03.30 மணிக்கு எல்லாம் காவல்துறையினர் தெற்கு மண்டல வாயிற்கதவிற்கு அருகில் குவிக்கப்பட்டு, கதவுகள் அடைக்கப் பெற்று எந்த தோழரையும் ஆர்ப்பாட்டத்திற்கு தென்மண்டலத்தின் உள்ளே நுழைய அனுமதிக்கப் படவில்லை.

மாலை 0400 மணிக்கே தென்மண்டல அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும், அனுமதி அளிக்கப்பட்டு அலுவலகத்தை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டனர்.

சுமார் 0430 மணியளவில் இருந்தே தென்மண்டல NFPE, FNPO தோழர்கள் எழுச்சியோடு பங்கேற்க வந்தபோது, காவல் துறையினரால் தடுக்கப்பட்டு, தொழிற்சங்கக் கடமைகளை நிறைவேற்ற விடாமல் கைது செய்யப்படுவீர்கள் என மிரட்டப்பட்டனர்.
பின்னர் J.C.A. தலைவர்கள் சென்னை மாநில அலுவலகத்திற்கு இதை தெரிவித்த பின்னரே, சென்னை மாநில CPMG அவர்களின் உத்தரவிற்கு பின்னரே, தென்மண்டல இயக்குனர் காவல் துறையினை களைந்து செல்லப்பணித்தார்.

பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, மாலை 0500 மணியில் இருந்தே, அனைத்து கோட்டங்களில் இருந்தும், தூரம் பாராது, மெய் வருத்தம் கொள்ளாது, குடும்பக்கடமைகளைப் புறக்கணித்தும், தோழர் அமரர் ஜெயக்குமாரின் மரணத்திற்கு நியாயம் என்பதையே முழு மூச்சாகக் கொண்டு, அனைத்து 11 கோட்ட தோழர்களும், மதுரை மண்டலத்தை முற்றுகையிட்டு, 600 அறுநூற்றுக்கும் அதிகமான துடிப்புமிக்க தோழர், தோழியர்கள் கலந்து கொண்டனர். அஞ்சல் பெண் தோழியர்களும் எழுச்சிமிக்க ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொண்டதும், மற்ற கோட்டத் தோழர்கள் கூட வெகு தொலைவில் இருந்தாலும் வேன் பிடித்து தென்மண்டலம் முன் வந்து இறங்கியதும் காணக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. J.C.A. தோழர்களின் P.T.C இயக்குனர் மற்றும் மண்டல நிர்வாகத்திற்கு எதிரான முழக்கம் விண்ணை முட்டியது என்பதில் ஐயமில்லை.
ஆர்ப்பாட்டத்தை  தோழர் S .K .ஜேக்கப் ராஜ்  கோட்டசெயாளர்  NFPE P 3 நெல்லை ,விண் அதிரும்  கோஷங்களுடன் 
துவக்கிவைத்தார்கள் .      

தலைவர்களின் வீரவுரை.

திரு. K. நாராயணன் NFPE மண்டல செயலர், சென்னை LABOUR OFFICE கூட்டம், மற்றும், CPMG அவர்களோடு நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் தற்போதைய நிலவரங்களை விளக்கிக் கூறியதோடு, தென் மண்டல இயக்குனராலும், மதுரை PTC இயக்குனராலும், தோழர்களும் படும் சொல்லொண்ணாத்துயரங்களை கூட்டத்தில் விளக்கி எழுச்சி உரையாற்றினார்.

திரு. G.பாஸ்கரன் FNPO மண்டல செயலர், வீரர் அமரர் ஜெயக்குமாரின் மரணத்திற்கு ம்துரை PTC `இயக்குனரின் இடைவிடாத துன்புறுத்தலேயன்றி வேறு பண நெருக்கடி தான் காரணம் என்று PTC இயக்குனரின் வாதம் பொருளற்றது என்பதற்கு கீழ்க்கண்ட காரணங்களை சுட்டிக்காட்டினார்.


பண நெருக்கடி தான் தோழர் ஜெயக்குமார் மரணத்திற்கு காரணம் என்றால்,

1. அவர் V.R.S.ல் சென்று இருந்தால் கூட, ரூ.1500000 (பதினைந்து இலட்சங்கள்) பணத்தோடு, ஒய்வூதியமும் கிடைக்கப்பெறும் சூழல் இருக்கும் நிலையில், தற்கொலை பண்ண என்ன அவசியம் வந்தது?



2. மேலும் 13 நாட்கள் PTC சிறைவாசக்கொடுமைக்களுக்கு பின் தற்கொலை செய்து கொண்டதும், அதற்கு மதுரை PTC இயக்குனரும், தென்மண்டல இயக்குனரும், மதுரை G.H வரை சென்று, சடலத்தை சென்னைக்கு விரைந்து அனுப்புவதற்கு துடித்ததும், உடன்பயிலும் யாரையும் பார்க்கக்கூட விடாததும், ஜெயக்குமார் அவர்களின் இறுதி ஊர்வலம் வரை சென்று, அவர்களின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு, கருணை அடிப்படையில் இலாக்காவில் உடனடியாக வேலை வழங்கப்படும் என்று கூறியதும், என்று இவ்வளவு செய்தவர்கள், ஒரிரு வாரங்களுக்கு முன்னால், மதுரையில் விபத்தில் அகால மரணமடைந்த தபால்காரர் திரு. அழகுப்பாண்டி, மரணத்திற்கு வந்து இதேபோல கலந்து கொள்ளாததன் காரணம் என்னவோ என்று ஐயம் எழுப்பி வீரவுரை ஆற்றினார்.

தோழர் S.சுந்தரமூர்த்தி அவர்கள், தென்மண்டல இயக்குனரின் அடாவடித்தனத்தை, அடக்குமுறையின் தொகுப்பினை ஒவ்வொன்றாக விளக்கி, படமென நம் கண்முன் நிறுத்தி, கொடுஞ்செயல்கள் அனைத்தையும் இத்தோடு நிறுத்திக் கொள்ளச்சொல்லி இறுதி எச்சரிக்கை அளித்து வீரவுரை ஆற்றினார்.

மற்றும் அனைத்துக் கோட்டச் செயலர்களும், அவரவர்களின் அதிருப்தியினையும், தென்மண்டல இயக்குனர் மற்றும், மதுரை PTC இயக்குனரின் ஊழியர் விரோதப்போக்கினையும், அடாவடித்தனத்தையும் விளக்கிப் பேசினர்.

இறுதியாக 3 மணி நேரம் நடைபெற்ற எழுச்சி மிகு ஆர்ப்பாட்டத்திற்கு, திரு ராஜன் FNPO கோட்டச்செயலர் நன்றியுரை ஆற்றி, அறுநூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு, முழங்கிய ஆர்ப்பாட்டத்தின் இறுதி வீர முழக்கம், விண்ணை மட்டுமல்ல, திருநெல்வேலி சென்ற தென்மண்டல இயக்குனர் மற்றும், நாடாளுமன்றக்குழுவைக் காராணம் காட்டி, கோவை சென்ற இயக்குனர் P.T.C. காதுகளிலும் இடியென இறங்கி இருக்கும் என்பதில் ஐயமில்லை....

இப்படிக்கு,
ஒருங்கிணைந்த புரட்சிகரமான வாழ்த்துக்களுடன்,
J.C.A

Saturday, 6 October 2012

Savings Interest Calculator, TD & RD tables...

11.10.2012 வேலை நிறுத்தம் -தொழிலாளர் நல ஆணையர் - CPMG TN உடன் 05.10.2012 அன்று நடந்த பேச்சுவார்த்தை விவரங்கள்

BI-LATERAL DISCUSSIONS ON STRIKE BY CPMG WITH JCA LEADERS

தொழிலாளர் நல ஆணையர்  உத்திரவுப்படி  05.10.2012  மாலை 03.30 மணியளவில்  CPMG TN  அவர்களால்  அதிகாரபூர்வமான பேச்சு வார்த்தைக்கு வேலைநிறுத்த  நோட்டீஸ்  அளித்த JCA  தலைவர்கள் அழைக்கப் பட்டனர். NFPE/FNPO  சார்பில் 13 மாநிலச் செயலர்கள்  பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர் .  மதுரை அஞ்சல் பயிற்சி மைய  இயக்குனரின்  அடாவடித்தனங்கள் குறித்தும் ,  பயிலாளர்களுக்கு  இழைக்கப் பட்ட கொடுமைகள் குறித்தும்  விரிவாக விவாதிக்கப் பட்டது.  

மேலும்  தோழர் ஜெயகுமாரின்  தற்கொலைக்கு  பயிற்சி மைய இயக்குனரின்  கொடுமைகளே காரணம் என்பதையும் விரிவாகத் தெரிவித்தோம் . அதே போல  தென் மண்டல இயக்குனரின்  அத்து மீறிய செயல்களையும் ,  இந்த தற்கொலையில் அவரின் வரம்பு மீறிய செயல்களையும் ,  உண்மைகளை மறைத்து  , அஞ்சல் மைய  இயக்குனருக்கு ஆதரவாக அவர் செயல் படும் தவறான விதம் குறித்தும்  விரிவாகத் தெரிவிக்கப் பட்டது.  இவை அனைத்தையும் CPMG அவர்கள் பொறுமையாகக் கேட்டறிந்தார். பல்வேறு கேள்விகளை கேட்டும் அதன் மீது விளக்கங்களையும்  பெற்றார். கிட்டத்தட்ட 3 1/2 மணி நேரம் இந்த விவாதம் நடைபெற்றது.

இறுதியாக  நம்முடைய  வேலை நிறுத்தத்திற்கான  மூன்று கோரிக்கைகளையும்  உடன்  நிறைவேற்ற வேண்டுமென நாம் வேண்டினோம் 

அதற்கு  CPMG TN  அவர்கள் கீழ்க்கண்டவாறு  பதில் அளித்தார். 

1. PTC, MADURAI  இல் நடக்கும்  விதிகளை மீறிய  தவறான  ( EXCESS ) நடவடிக்கைகள்  நிறுத்தப் படுவதற்கு  உடன்  ஆவன செய்யப் படும்.

2. பாதிக்கப் பட்ட ஊழியர்கள் ,  அவர்களுக்கு  இழைக்கப் பட்ட அநீதி குறித்து உரிய புகார் CPMG க்கு , நேரிலோ  அல்லது  விரைவு/ பதிவுத் தபாலிலோ  தெரிவிக்கப் பட்டால் , விசாரித்து  ஆவன  நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.

3. மேலும்  இவை குறித்து PTC  இயக்குனர்  மற்றும்  தென் ,மண்டல  இயக்குனர் ஆகியோரிடம்  அவரே நேரில் சென்று  விசாரித்து  ஆவன நடவடிக்கை மேற்கொள்வார் .

4. PTC  இயக்குனர் DIRECTORATE  இன் நேரடி CONTROL  இல் உள்ளதால்  அவரை உடனே  இடமாற்றம் செய்திட அல்லது  இடை நீக்கம் செய்திட  இயலாது. 

5. தோழர். ஜெயகுமாரின்  தற்கொலை குறித்தும் , PTC, DIRECTOR  மற்றும் தென் மண்டல  இயக்குனரின் அத்து மீறிய செயல்கள் குறித்தும்  மாநில நிர்வாகத்தால்  சென்னையில் நடைபெறும் வண்ணம்   உரிய உடனடி விசராணைக்கு உத்திரவிடப்படும்.

6. இது குறித்து  உரிய ஆதாரங்களுடன்  எந்த ஒரு ஊழியரும் , அல்லது உறவினரும்  தபாலிலோ அல்லது நேரிலோ  புகாரை அவருக்கு  அளிக்கலாம்.  அதன் ரகசியங்கள் காக்கப் படும். 

7. விசாரணை  குறுகிய கால அவகாசத்தில் 15.10.2012 க்குள் முடிக்கப் பட்டு , அதன் மீது  இரகசிய விசாரணை அறிக்கை  டெல்லிக்கு  அனுப்பப் பட்டு அதன் மீது  உரிய  நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.

8. விசாரணை காலத்தில் INDUCTION TRAINING  மற்றும் நடப்பில் உள்ள பயிற்சி தவிர , வேறு எந்த MID CAREER TRAINING ம் நடத்தப் படாது. 

9. மீண்டும் 16.10.2012 இல் இது குறித்து  அடுத்த கட்ட  பேச்சு வார்த்தைக்கும்  ஊழியர் தரப்பிருக்கு அழைப்பு விடுக்கப் படும்.

இந்த பதிலின் மீது  நமக்கு முழு உடன் பாடு ஏற்படாததாலும் , இதற்குரிய  RECORDED MINUTES  திங்களன்று  இறுதி செய்யப்படுவதாலும்   இதன் மீதான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து JCA கூடி  திங்களன்று  முடிவு எடுப்பதாக அறிவிக்கப் பட்டது. 

கோட்ட/கிளைச் செயலர்களுக்கு/ஊழியர்களுக்கு ஒரு வேண்டுகோள் !

CPMG, TN  அவர்களால் அறிவிக்கப் பட்டுள்ள உயர் மட்ட விசாரணைக்கு  உங்கள்  பாதிப்புகள் ஏதும் இருப்பின்  உடன் நேரடி புகார்  மனுவை  திருமதி. ஹில்டா ஆபிரகாம் , IPS, CHIEF POSTMASTER GENERAL, TN CIRCLE,
CHENNAI 600 002 என்று  பெயரிட்டு  விரைவுத் தபாலிலோ  அல்லது பதிவு தபாலிலோ  உடன் அனுப்பிட  வேண்டுகிறோம்.

இது போல  தோழர். ஜெயகுமாரின்  தற்கொலை குறித்து எவருக்கு  உரிய விபரம் தெரிந்தாலும்  CHIEF PMG, TN  அவர்களுக்கு நேரிலோ அல்லது  விரைவுத் தபாலிலோ  அல்லது பதிவுத் தபாலிலோ  விரிவாக எழுதி கையெழுத்திட்டு  அளிக்கவும்/ அனுப்பவும்.  உங்கள்  விபரங்கள் கண்டிப்பாக CHIEF PMG  TN அவர்களால் பாதுகாக்கப் படும். 

உடன் செயல் படுங்கள் !  கால தாமதம்  உரிய நீதியைக் கொடுக்காது !
பயம்  நீதியை தூக்கில் தொங்க விடும் ! 
விதைக்கும் காலத்தில்  தூங்கிப் போனால் அறுக்கும் காலத்தில் எதுவும் இருக்காது !

Friday, October 5, 2012


CONCILIATORY TALKS BEFORE LABOUR COMMISSIONER

05.10.2012 அன்று காலை 11.00  மணியளவில்  சென்னை மத்திய தொழிலாளர் நல ஆணையர்  முன்னிலையில்  தமிழக JCA  சார்பில் அளிக்கப்பட  வேலை நிறுத்த  அறிவிப்பை ஒட்டி  நடைபெற்ற  முத்தரப்பு பேச்சு வார்த்தையில்  நிர்வாகத்தின் சார்பில்  திரு . M.  நாச்சிமுத்து , AD SR  அவர்களும்  ஊழியர் தரப்பில் 13 மாநிலச் செயலர்களும்  கலந்து கொண்டார்கள். 

நிர்வாகத் தரப்பில் CPMG TN  அவர்கள்  கலந்துகொள்ளாமல் ASST. DIRECTOR  ஒருவரை அனுப்பியது  சட்ட விதிகளுக்கு முரணானது என்பதை  தொழிலாளர் நல ஆணையர்  சுட்டிக் காட்டி எச்சரித்தார் .  ஊழியர் தரப்பில்  அளிக்கப்பட  ஆவணங்களைப் பெற்றுக் கொண்டு ,   அதன் மீதான விபரங்களை பொறுமையாக கேட்டறிந்தார்.  நாம் வைத்த  குற்றச் சாட்டுகளுக்கு  நிர்வாகத் தரப்பில்  பதில் ஏதும்  சரிவர அளித்திட இயலவில்லை .  

இதனை சுட்டிக் காட்டி , தொழிலாளர் நல ஆணையர் அவர்கள் ,  உடனடியாக CPMG TN  அவர்கள்  பேச்சு வார்த்தை நடத்தி  பிரச்சினை தீர்க்கப் படவேண்டும் என்று நிர்வாகத்திற்கு  உத்திரவிட்டார் . பேச்சு வார்த்தையின் முடிவுகளை உடன்  தமக்கு தெரிவிக்க வேண்டுமெனவும்  தெரிவித்தார் .  அதனடிப்படையில்  அடுத்த கட்ட பேச்சு வார்த்தைக்கு  தேதி  தெரிவிக்கப் படும் என்றும்  பதிவு செய்யப் பட்டது

இது சம்பந்தமாக  தொழிலாளர் நல ஆணையர் முன் கையொப்பமிடப்பட்ட  MINUTES COPY  கீழே  உங்கள் பார்வைக்கு அளிக்கப் பட்டுள்ளது .

Thursday, 4 October 2012

முதியோர் தொகையினை, வங்கிகள் பட்டுவாடா செய்வதில் குளறுபடி, மதுரை தினமலர் செய்தி

முதியோர் உதவித் தொகை மற்றும் பல நலத் திட்டங்களின் கீழ் மாநிலம் முழுவதும், நாட்டின் மிகப்பெரிய சேவை நிறுவனமான அஞ்சல் துறையில் வழங்கப்பட்டு, பயனீட்டாளர்களின் இருப்பிடத்திற்கே சென்று தபால்காரர்களால் பட்டுவாடா செய்யப்பட்டு வந்த நிலையில், சமீப காலமாக அவற்றில் ஒரு பகுதியை சோதனை முயற்சியாக வங்கிகளின் மூலம் தமிழக அரசால் பட்டுவாடா செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன்படி தள்ளாத வயதிலும் மற்றும் ஊனமுற்ற பல பயனீட்டாளர்கள் பட்டுவாடா செய்யும் இடத்திற்கு அவர்களாகவே பணம் செலவழித்து சென்று பெறுதல், ரேகை பெறுவதில் சிக்கல், கணக்குப்புத்தகம் பெறுவதில் சிக்கல் போன்ற   பல முரண்பாடுகளினால் பயனீட்டாளர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.வங்கிகளின் தற்போதைய அடிப்படை வசதிகளைக் கொண்டும், அதன் ஆட்பற்றாக்குறை காரணமாகவும் திறம்பட பட்டுவாடா செய்ய முடியாமல், வங்கி ஊழியர்களும் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இவற்றையெல்லாம் வெளிக்கொணரும் விதமாக மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற உதவித்தொகை பட்டுவாடா செய்வது குறித்த வங்கி ஊழியர் கூட்டம் பற்றிய தினமலர் செய்தி 04.10.12 இங்கே வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் பயனீட்டாளர்கள் அதிருப்திக்கு உள்ளாகி, மீண்டும் அஞ்சல் துறையே திறம்பட உதவித்தொகை பட்டுவாடா செய்யும் நிலை மீண்டும் உருவாகும் என்று அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக தினமல்ர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



      

தமிழ் மாநில அஞ்சல் நான்கு மாநில மாநாடு -

அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் நான்காம் பிரிவின்  மாநில மாநாடு  மத்திய சங்கத்தின் வழி காட்டுதலின்  பேரில் இன்று  04.10.2012  மத்திய சங்க பார்வையாளர்கள் முன்னிலையில் சென்னையில் நடைபெற்றது .  நடந்து முடிந்த தேர்தலில் 
 தமிழ் மாநில தலைவராக தோழர் .G.கண்ணன் ,POSTMAN,கோவில்பட்டி ,
தமிழ் மாநில செயலராக  தோழர் . V.இராஜேந்திரன் ,STG PM ,ANNA ROAD,
தமிழ் மாநிலபொருளாளராக தோழர்.வெங்கட்டரமணி ,POSTMAN ,மயிலாப்பூர்

ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர் .


நமது அஞ்சல் நான்கு கோட்ட செயலாளர் .தோழர் .இரா . பிரகாஷ் அவர்கள் 
தமிழ் மாநிலஉதவிப் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் 
 என்பது மகிழ்ச்சி செய்தி .

தமிழ்  மாநில அஞ்சல் நான்கின் பணி சிறக்க வாழ்த்துக்கள் .

சி.சஞ்சீவி -கோட்ட செயலாளர் , அஞ்சல் மூன்று ,சேலம் மேற்கு கோட்டம்

FLASH NEWS

இயக்குனர் அஞ்சல் பயிற்சி மையம் மதுரை அவர்களின் கொடுமைகளுக்கு எதிரான ,  நம் தோழர் ஜெயகுமாரின் உயிர்பலிக்கு நியாயம் கேட்டு  நடைபெற உள்ள 11.10.2012 JCA  வின் வேலை நிறுத்த NOTICE  பெற்ற  
LABOUR COMMISSIONER  அவர்கள் பேச்சு வார்த்தைக்கு 05.10.2012   அன்று காலை   11.00  மணிக்கும் , 
நமது CPMG  அவர்கள்  05.10.2012  அன்று மாலை 3.00 மணிக்கும்  JCA  வுக்கு அழைப்பு விடுத்துள்ளார்கள் .
--SMS FROM J.R. c.s.

DOP ORDER OF DA W.E.F. 01.07.2012


Monday, 1 October 2012

7 % DA ORDER RELEASED


Monday, 1 October 2012