Welcome to NFPE Blog

Hi Friends, Welcome to National Federation Of Postal Employees, Group-C

Salem West Division

***R.Sundaram***

Wednesday, 26 September 2012


STRIKE ! STRIKE! STRIKE ! 11.10.2012 ONE DAY STRIKE

அநீதி கண்டு வெகுண்டெழுந்து ஆர்ப்பரிக்கும் கூட்டமிது !
அநீதி களைய  ஒன்று சேர்ந்தால் வெற்றி நமதே  பொங்கி  எழு !

வேலை நிறுத்தம் வேலை நிறுத்தம்  !தமிழகமெங்கும் வேலை நிறுத்தம் !

ஒன்று பட்ட வேலை நிறுத்தம் !
அநீதிக் கெதிராய் வேலை நிறுத்தம் !

அடக்குமுறைக்கெதிராய்  வேலை நிறுத்தம்  !
PTC  இயக்குனரின்  படுகொலைச் செயலுக்கு  எதிராய்  வேலை நிறுத்தம் !

படுகொலைக்கு துணை நின்ற  மதுரை  மண்டல 
அதிகாரிக்கு எதிராய் வேலை நிறுத்தம்  !
அனைத்து ஊழியர் வேலை நிறுத்தம் !

விடமாட்டோம் ! விடமாட்டோம் !
நீதிக் கூண்டில் நிறுத்தாமல்  நாங்கள்  இனி 
விடமாட்டோம் !

தயாராகு  தோழனே ! அக்டோபர் திங்கள்  11 இல் 
தமிழகம் தழுவிய வேலை நிறுத்தத்திற்கு 
தயாராகு தோழனே !

வெற்றி நமதே ! பொங்கி ஏழு !
வீணர்களை  விரட்டி அடி !

 

CABINET APPROVES 7% HIKE IN DEARNESS ALLOWANCE FOR CENTRAL GOVT. STAFF.



UNION CABINET MET TODAY EVENING HAS APPROVED A PROPOSAL TO HIKE ADDITIONAL DEARNESS ALLOWANCE BY 7% FOR CENTRAL STAFF AND CENTRAL PENSIONERS.

THE CENTRAL GOVERNMENT TODAY APPROVED A SEVEN PER CENT HIKE IN DEARNESS ALLOWANCE TO CENTRAL GOVERNMENT EMPLOYEES AND PENSIONERS, THIS HIKE IS TO BE EFFECTIVE RETROSPECTIVELY FROM JULY 2012.

THE DEARNESS ALLOWANCE AND DEARNESS RELIEF FOR CENTRAL GOVERNMENT SERVING EMPLOYEES AND PENSIONERS WILL INCREASE FROM 65% PER CENT OF BASIC EMOLUMENTS TO 72% PER CENT WITH EFFECT FROM 1.7.2012.

Friday, 21 September 2012

அஞ்சல் நான்கு மாநில மாநாடு





   அகில  இந்திய  சங்க   வழிகாட்டுதலின்படி   அஞ்சல்   நான்கு சங்கத்தின்  தமிழ்  மாநில  மாநாடு   04.10.2012  அன்று    சென்னையில்  நடைபெறுகிறது .சேலம் மேற்கு  கோட்ட  சங்கத்தின்   சார்பாக   நாம் திரளாக   பங்கேற்போம் . மாநில   சங்கம்   இல்லாத  காரணத்தினால் நமது   பிரட்சினைகளில்    தேக்கம்   உள்ளது   என்பதை   நாம் சந்தித்து   வருகிறோம் .

மாநாடு   வெல்லட்டும் .  நம்  கோரிக்கைகள்  வெல்லட்டும் .

                                       
நன்றி  

                                                                      தோழமையுடன் 
                                                                              இரா.பிரகாஷ் 

                                                                       
கோட்ட   செயலர் P 4 
                     சேலம் மேற்கு  கோட்டம்

GDS WELFARE SCHEMES

GDS WELFARE SCHEMES
1.   FINANCIAL ASSISTANCE IN CASE OF DEATH :
At present the Financial Assistance of Rs.7,000/- is payable as immediate death relief as per the orders dated 26-04-2002. The GDS and Casual Workers have been brought at par with Govt. employees vide orders dated 01-06-2000.
(The death relief amount will be enhanced to Rs.10,000 as agreed in the last PSSWB meeting held on 16-05-2012 and orders are  to be released)
2.   FINANCIAL ASSISTANCE IN CASE OF DEATH WHILE ON DUTY :
GDS and Casual labourers / Part time employees due to attack by terrorists / robbers / dacoits while on duty an aggregate amount inclusive of immediate death relief of Rs.50,000/- is admissible as financial assistance to the bereaved family. If dies due to an accident, it will be Rs.6,000/-. If dies due to the attack of anti-social elements, dacoits etc., during non-duty hours it will be Rs.10,000/-.
3.   FINANCIAL ASSISTANCE IN CASE OF NATURAL CALAMITIES, FIRE, FLOOD ETC.,
In case of GDS, the amount of financial assistance is limited to Rs.750/- in cases of natural calamities, fire, floods etc.
4.   FINANCIAL ASSISTANCE FOR THE PURCHASE OF ARTIFICIAL LIMBS
In case of handicapped GDS, financial assistance may be sanctioned for the purchase of hearing aid / artificial limb as per the rules vide letter No.B-12014/6/80/WL dated 04-11-1980.
5.   FINANCIAL ASSISTANCE IN CASE OF PROLONGED ILLNESS / MAJOR SURGERIES:
The financial assistance upto Rs.1500/- can be granted in exceptionally hard cases of prolonged illness in respect of GDS, casual mazdoors and part time employees subject to the conditions indicated below :
(i)The person concerned has put in at least six years' service in the Department.
(ii)The person has been taking treatment in Govt. hospital and produced medical certificates from the hospital concerned.
(iii)Illness is at least two months old.
(The financial assistance will be enhanced to Rs.10,000 as agreed in the  last PSSWB meeting held on 16-05-2012)
6.   SCHOLARSHIP AVAILABLE FOR GDS CHILDREN FROM WELFARE FUND :
The following scholarship fixed for regular employees from welfare fund is also applicable GDS as per the DG(P) No.2-6/89/WL & Sports (P) dated 23-05-1990 with effect from the year 1990-91.
(i)  IIT, AIMS, ITM                        --                         Rs.300/- per month
(ii) Technical Education (Degree)  --                         Rs.225/- pm
     Technical Education(Diploma)-                           Rs.150/- pm
(iii)Non-Technical Degree, BA, B.Sc-                       Rs120/- pm
     B.Com., Degree in Fine Arts
(iv) ITI Certificate course        --                              Rs.450/- pm
(v)  Book Awards for Tech. Edu.      --                      Rs.450/- per year
(vi) School students award:
                  (1) V to VII          --                -Rs.200/- per year
                   (2)IX to XII         --                -Rs.450/- per year
Scholarship for physically handicapped children Rs.45/- per month
(It was agreed to enhance the amount @25% in the last PSSWB meeting held on 16-05-12)
7.   TREATMENT OF PERIOD OF GDS PARTICIPATION IN ALL INDIA SPORTS MEET :
The period of absence of GDS due to participation in All India Postal Sports / Cultural meets will be treated as on duty for the purpose of continuity of their service for grant of ex-gratia gratuity.
8.   SPECIAL CASUAL LEAVE TO GDS FOR DONATING BLOOD :
It was decided to allow payment from the Postal Service Staff Welfare Fund to those GDS who donate blood to recognized blood banks on working days.
9.   ADMISSION OF CHILDREN OF GDS IN KENDRIYA VIDYALAYAS :
Children of GDS are permitted for admission in Kendriya Vidyalayas.
10.                QUANTUM OF AMOUNT PAID AS FLOOD ADVANCE:
It has been decided to enhance the existing limit of Flood Advance of Rs.200/- to Rs.600/- with immediate effect.
11.                GDS TB PATIENTS - FINANCIAL ASSISTANCE :
OPD TB patients admissible for Rs.200/- per month for six months for their nutrition.
12.                FUNERAL EXPENSES FOR GDS DIED IN EXCEPTIONAL CASES :
It is decided to grant Rs.250/-to perform last rites of GDS where there are no relatives, died in departmental premises, out of station while on duty.
13.                ADVANCE FOR PURCHASE OF BICYCLE.
In certain cases, depending upon the availability of funds, the cycle advance of Rs.1500/- may be sanctioned to GDS for the purchase of bicycle for performing delivery work.
source: GDS REFRESHER & CRUSADER TO GRAMIN DAK SEVAKS -compiled by Com.K.V.SRIDHARAN, General Secretary, AIPEU Gr.C (CHQ)



JCA HUNGER FAST AGAINST THE ATROCITIES OF DIRECTOR, PTC, MADURAI

JCA
NFPE-FNPO  அஞ்சல் -RMS-MMS ஊழியர் கூட்டுப் போராட்டக் குழு தமிழ் மாநிலம். 
____________________________________________________________________

ஊழியர்களை கொடுமைப்படுத்தி   மதுரை அஞ்சல் பயிற்சி மையத்தை அடிமைக் கொட்டடியாக வைத்திருக்கும் DIRECTOR, PTC, MADURAI யின் அடாவடித்தனத்தை எதிர்த்தும் , 

அவரது கொடுஞ்செயலினால் மனமுடைந்து 
தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும்  தோழர்.ஜெயக்குமார், எழுத்தர்,  பெரம்பூர்-சென்னை அவர்களின் சாவுக்கு உயர்மட்ட காவல்துறை விசராணை நடத்திடக் கோரியும் ,  


அஞ்சல் பயிற்சி மையத்தில் தற்போது  பயிற்சியில் உள்ள அனைத்து பயிலாளர்களிடமும்  நேரடி விசாரணை நடத்திட வேண்டியும் , 

விசாரணை நியாயமாகவும் , பாரபட்சமின்றி நடைபெறவேண்டி , விசாரணை முடியும் வரையில் PTC, DIRECTOR  ஐ  தற்காலிகப் பணிநீக்கம் செய்திட வேண்டியும்  

தமிழகத்தில் உள்ள NFPE - FNPO  சம்மேளனங்களின்  அனைத்து மாநிலச் சங்கங்களும் ஒன்று சேர்ந்து  நேற்று (20.09.2012 அன்று) CPMG  அலுவலகம் முன்பாக  மதியம் உணவு இடைவேளை  ஆர்ப்பாட்டம்  நடத்தினோம். . பின்னர் CPMG அலுவலகத்தில் உள்ள தலைமையிடத்து  இயக்குனரிடம்  கோரிக்கை மனு அளிக்கப்பட்டது .

கண்டன ஆர்ப்பாட்டத்தில்  NFPE-FNPO சம்மேளனங்களின் அனைத்து உறுப்புச் சங்கங்களில் இருந்தும் கிட்டத்தட்ட 300  க்கு மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டது , ஊழியர்களின் ஒட்டுமொத்த கோபத்தை வெளிப்படுத்துவதாக  இருந்தது. 

அதன் தொடர்ச்சியாக , இதே கோரிக்கைகளை வலியுறுத்தி  தமிழகத்தில் உள்ள NFPE- FNPO  சம்மேளனங்களின்  அனைத்து மாநிலச் செயலர்களும் JCA  சார்பில் CHIEF PMG அலுவலகம் முன்பாக  இன்று காலை 10.00 மணி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளார்கள். 

ஆகவே சென்னை பெருநகர மண்டலத்தில் உள்ள அனைத்துபகுதி  NFPE-FNPO சம்மேளனங்களின்  தோழர்களும்  மிகப் பெரும் அளவில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு அநீதி களைய உங்கள் பங்கினை செலுத்திட வேண்டுகிறோம்.

இந்தப் போராட்டத்தின் வீச்சு  அனைத்து கொடுமதியாளர்களுக்கும்  ஒரு பாடமாக  அமைந்திட வேண்டும். இறந்து போன அப்பாவி ஊழியரின் ஆன்மாவுக்கு  இதுவே நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும் .

போராடுவோம் !            நீதி கேட்டு வீதியில் நின்று  போராடுவோம் !
  அநீதி களையப்படும் வரை போராட்டம் தொடரட்டும் !
________________________________________________________________________________
குறிப்பு : 

இதற்கு முன்னர் இந்த PTC, DIRECTOR  இன் அடாவடியான  கொடுஞ்செயல்களினால்  பாதிக்கப்பட்ட தோழர்கள்  , இலாக்கா விதிமுறை மீறிய செயல்கள்,  மனித உரிமை மீறிய செயல்கள் , அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை உடனே  புகாராக எழுதி CHIEF PMG   அவர்களுக்கு அனுப்புமாறும் , அதன் நகலை தவறுதல் இன்றி  மாநிலச் செயலருக்கு அனுப்புமாறும் பணிவுடன்  கேட்டுக் கொள்கிறோம்.  அப்படிச் செய்வதால் , இந்த பிரச்சினையில் நீதி கிடைத்திட , மேலும் பலம் சேர்க்கும் !  தயவு செய்து கோட்ட /கிளைச் செயலர்கள் இந்த திசையில் உடன் கவனம் செலுத்தவும்    கோரப்படுகிறது. அவசியம்  எதிர்பார்க்கிறோம்.

இதர மண்டலங்களில்  ஆங்காங்கே  தல மட்டங்களில் இதே கோரிக்கையை வலியுறுத்தி  உணவு இடைவேளை அல்லது மாலை நேர கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திடவும் கோட்ட/ கிளைச் செயலர்களைக் கோருகிறோம். அவசியம்  தொலைக் காட்சி/ பத்திரிக்கை நிருபர்களை அழைத்து  அவர்கள் முன்னிலையில் இந்தப் போராட்டத்தை நடத்தவும்.

அடுத்த கட்ட  போராட்டத்திற்கும் தயாராவோம் !
_________________________________________________________________________________

21ST SEP.CABINET MEETING POSTPONED ON POLITICAL REASONS



Cabinet meetings Scheduled on 21st Sept, postponed – Cabinet approval for Dearness Allowance increase likely to be Delayed

_________________________________

The meeting of the Union Cabinet, which was scheduled to consider a 7 per cent hike in dearness allowance to 80 lakh central government employees and pensioners, has been put off to next week.
“The Cabinet, CCEA (Cabinet Committee on Economic Affairs) and CCI (Cabinet Committee on Infrastructure) meetings scheduled for Friday, have been postponed,” an official announcement said.
Cabinet meetings usually take place on Thursdays, but they have been postponed apparently in view of the rapid political developments in the aftermath of the government’s decision to hike diesel prices and operationalise its earlier move to allow foreign direct investment (FDI) in multi- brand retail.
Increasing DA from 65 per cent to 72 per cent to provide relief to 50 lakh central government employees and 30 lakh pensioners was on the agenda of the meeting. It is now likely to be taken up next week.
Once approved, the hike in dearness allowance will be effective from July 1, 2012, and the employees would be entitled to arrears from that date.
The additional burden on exchequer on account of increase in DA would be around 5,000 crore for the eight-month period between July, 2012 and February, 2013. It will be Rs. 7,400 crore for the fullfinancial year.
The government had last increased DA in March this year from 58 per cent to 65 per cent, which was effective from January 1, 2012.
The government periodically hikes the DA, which is linked to consumer price index for industrial workers.
The consumer price index (CPI) based on movement in retail prices, soared to 10.03 per cent in August, from 9.86 per cent in July.
Source: NDTV

மாநில JCA முடிவின் படி உடனடியாக இன்று மத்திய 1.00 மணியளவில் உணவு இடைவேளை  ஆர்பாட்டமும்  அதனை தொடர்ந்து  CPMG க்கு  கோரிக்கை  மனுவும்    கொடுக்கப்படும்.   நாளை 21.09.12  காலை 10.00 மணியளவில்  CPMG அலுவலக வளாகத்தில் நடை பெறும்   உண்ணாவிரதத்தில் அனைத்து  மாநில  செயலர்களும்  கலந்து  கொள்வார்கள் . அநீதி  களைய  அலை    கடலென   அணி திரண்டு  வாரீர் !

--- JR
மாநில  செயலர்.

Thursday, 20 September 2012

கண்ணீர் அஞ்சலி

                                                     


 ஆழ்ந்த அனுதாபங்கள்

மதுரை அஞ்சல் பயிற்சி மையத்தில் பயிற்சியில் இருந்த  சென்னை பெரம்பூர்  அஞ்சல்  நிலைய அஞ்சல உதவியாளர்  தோழர். ஜெயக்குமார்   MACP III அவர்கள் 19.09.2012  அன்று    இரவு  சுமார் 8.30  மணியளவில் மதுரை அஞ்சல் பயிற்சி மைய தங்கும் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார் என்பதை ஆழ்ந்த அனுதாபத்துடன் தெரிவித்து கொள்கிறோம் .  அன்னாரை பிரிந்து வாடும் அவர்தம் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம் .  

அகில  இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல மூன்று,நான்கு மற்றும்   புறநிலை ஊழியர்கள் சங்க உறுபினர்கள் ,சேலம் மேற்கு கோட்டம்

Monday, 17 September 2012

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு ஆரோக்கியமா ? ஆபத்தா ?

பல்பொருள் சில்லரை விற்பனைத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்ற மத்திய அமைச் சரவையின் முடிவு. நாடு முழுவதிலுமுள்ள கோடிக் கணக்கான சிறுகடை வியா பாரிகளின் வாழ்வாதாரத்தை, அரசின் இந்த முடிவு அழித்து நிர்மூலமாக்கும். சில்லரை விற்பனைத்துறையில் பன்னாட்டு நிறுவனங்கள் ஏகபோக ஆதிக்கம் செலுத்த வழிவகுக்கும். மிகக்கடுமையான அளவில் நீடிக்கும் பணவீக்கம், தொடர்ந்து அதிகரித்து வரும் வேலையின்மை மற்றும் விவ சாய நெருக்கடியின் துயரம் ஆகிய வற்றின் பின்னணியில், இந்த முடிவு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அர சின் மக்கள் விரோத, நாசகர குணாம்சத்தை அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது. அமெரிக்க மற்றும் இதர மேற்கத்திய அரசுகளின் நிர்ப்பந்தங் களுக்கு பணிந்துசெயலாற்ற மத்திய அரசு ஆவலோடு இருக்கிறது என்ப தும், தனது சொந்த மக்களின் நலன் களை பாதுகாப்பதைவிட வால் மார்ட், டெஸ்கோ மற்றும் கேர்ஃ போர் போன்ற பன்னாட்டு நிறுவனங் களின் நலன்களுக்கு சேவை செய்யவே ஆவலோடு இருக்கிறது என்ப தும் மேலும் பகிரங்கமாக அம்பலமாகியுள்ளது. 
சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு நுழைவதற்கு நிபந்தனைகள் என்ற பெயரில் அரசு அறி வித்திருக்கும் ஏற்பாடுகள் எந்த விதத்திலும் பொருத்தமற்றவையாகவும், எந்த தரப்பு மக்களையும் பாதுகாக்க உகந்தவையாகவும் இல்லை. ரூ.520 கோடி முதலீட்டுத்தகுதி என் பது வால்மார்ட், டெஸ்கோ, கேர்ஃ போர் போன்ற பகாசுர சில்லரை வர்த் தக நிறுவனங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. ஏனென்றால் இந்த கம்பெனி கள் பல்லாயிரம் கோடி டாலர் முத லீட்டு சக்தி கொண்டவை. அந்நிய சில்லரை விற்பனை மையங்கள், 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநகரங்களில் மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற அரசின் கட்டுப்பாடு, எந்தவிதத்திலும் அர்த்தமற்றது. ஏனென்றால், மேற் கண்ட பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியச் சந்தையில் கூடுதல் வருமா னம் கொண்ட பிரிவினரை முழுமையாக தங்கள் பக்கம் ஈர்ப்பதற்கு இது போன்ற மாநகரங்களில் முதலில் கடைவிரிக்க வேண்டும் என்றுதான் விரும்புகின்றனர் என்பதை கவனிக்க வேண்டும். இத்தகைய பெரும் நகரங்களில் மிக அதிக அளவிலான சில்லரை விற்பனையாளர்கள் குவிந்திருக்கிறார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். 

உலகிலேயே சில்லரை வியாபாரம் மிக அதிக அளவிலும், மிக விரிவான அளவிலும் நடக்கும் நாடு இந்தியா தான். இங்கு ஆயிரம் நபர்களுக்கு 11 சிறு கடைகள் இருக்கின்றன. நாடு முழுவதிலும் 1.2 கோடிக்கும் அதிகமான கடைகள் உள்ளன. இக்கடை களில் 6 கோடிக்கும் அதிகமான மக் கள் வேலை செய்து வருகிறார்கள். இவற்றில் 95 சதவீத கடைகள் தங்களுக்கு தாங்களே சுய வேலைவாய்ப்பு ஏற்படுத்திக்கொண்ட நபர்களால் 500 சதுர அடி பரப்பிற்கும் குறைவான இடத்தில் நடத்தப்படுபவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பன் னாட்டு நிறுவனங்களின் சில்லரை விற்பனை கடைகள் நுழைந்தால், நகர்ப்புற பகுதிகளில் உள்ள சிறு கடை வியாபாரிகள் மிக மிகக் கடுமையான முறையில் தாக்கப்படுவார்கள். எங்கெல்லாம் சூப்பர் மார்க்கெட்டுகள் வந்தனவோ, அங்கெல்லாம் சிறு கடை வியாபாரிகள் நிர்மூலமாக்கப் பட்டார்கள் என்பதே உலகம் முழுவ திலுமுள்ள அனுபவம். அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற வளர்ச்சி யடைந்த நாடுகளில் சிறு அளவிலான சில்லரை விற்பனைக்கடைகள் என் பவை முற்றிலும் அழித்தொழிக்கப் பட்டுவிட்டன. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டதால் சிறுகடை வியாபாரிகள் தங்களது தொழிலிலி ருந்து முற்றிலும் வெளியேற்றப்பட்ட னர். இப்போது வரைமுறையின்றி வளர்ந்து நிற்கும் சூப்பர் மார்க்கெட் டுகளின் வளர்ச்சியை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு கடுமையான உரிம விதிமுறைகளை இந்நாடு கள் உருவாக்கிக்கொண்டிருக்கின்றன.

சில்லரை வர்த்தகத்துறையில் நுழையும் பன்னாட்டு நிறுவனங்கள், குறைந்தபட்சம் 50 சதவீதம் அள விற்கு, சில்லரை விற்பனை நடவடிக் கைகளுக்கான அடிப்படை கட்ட மைப்பு வசதியை ஏற்படுத்துவதற்காக முதலீடு செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்திருப்பதாகக் கூறி அரசு நியாயப்படுத்துகிறது. (இந்த முதலீடு உணவு மற்றும் இதர பொருட்கள் பதப்படுத்தல், தயாரிப் புப்பணி, விநியோகம், வடிவமைப்பு மேம்பாடு, தரக்கட்டுப்பாடு, சேமிப் புக்கிடங்குகள், குளிர்பதன வசதி கொண்ட கட்டமைப்புகள் மற்றும் பேக்கிங் போன்ற துறைகளில் செய் யப்படவேண்டும் என்று அரசு கூறு கிறது.) இந்த நிபந்தனை, நாட்டில் சரக்குகளைக் கையாள இன்னும் கூடுதல் வாய்ப்பு வசதிகள், குளிர்பதன கிடங்கு வசதிகள் போன்றவற்றை உரு வாக்க உதவும் என்றும், இது விவசாயி களுக்கு பலனளிக்கும் என்றும் அரசு வாதிடுகிறது. ஆனால், பன்னாட்டு பெரும் நிறுவனங்களின் சில்லரை விற்பனை மையங்களால் நடத்தப் பட்ட கொள்முதல் நடவடிக்கைகள், சிறு விவசாயிகளுக்கு எந்தவிதத்தி லும் பலனளிக்கவில்லை என்பதே உலகம் முழுவதிலுமுள்ள அனுபவம். மாறாக, விவசாயிகளுக்கு மிக மிகக் குறைவான விலையே கிடைக்கப் பெற்றுள்ளது. விளைபொருட்க ளுக்கு தன்னிச்சையாக தர நிர்ணயம் செய்துகொண்டு, விவசாயிகளின் பொருட்கள் அந்தத் தரத்தை பூர்த்தி செய்வதாக இல்லை என்று கூறி விலையை அப்பட்டமாகக் குறைப் பதே அனுபவமாக இருந்திருக்கிறது. பன்னாட்டு பெரும் நிறுவனங்களை விவசாயிகளிடமிருந்து விளை பொருட்களை கொள்முதல் செய்ய அனுமதிப்பது என்ற அரசின் திட் டம், அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தனது பொறுப்பு களை கைவிடும் முயற்சியே ஆகும். இது நாட்டின் உணவுப்பாதுகாப்பில் மிகக்கடுமையான பாதகத்தை ஏற் படுத்தும். 

சிறு உற்பத்தியாளர்களும் கசக்கிப் பிழியப்படுவார்கள். பன்னாட்டு நிறுவனங்களால் முன்கூட்டியே விலைகள் தீர்மானிக்கப்பட்டு, போட் டியிலிருக்கும் இதர சிறு உற்பத்தி யாளர்கள் அனைவரும் வெளியேற் றப்படுவார்கள். அதுமட்டுமின்றி உணவுப்பொருட்கள் போன்ற அத் தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்துவிதமான நுகர்பொருட்களின் ஒட்டுமொத்த சப்ளை மீதும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது கட்டுப்பாட்டை கொண்டுவரும். உள்நாட்டுச் சந்தைக்குள் அந்நிய நாடுகளிலிருந்து கொள்முதல் செய் யப்படும் பொருட்கள் வெள்ளமெனப் பாயும். இப்படி பொருட்கள் வந்து குவிவது, சில்லரை விற்பனையில் பொருட்களின் விலை குறையவும், நுகர்வோருக்கு பலன் கிடைக்கவும் உதவும் என்று கூறப்படுவது முற்றி லும் மோசடித்தனமானது. ஏகபோக சந்தை அதிகாரமும், பெருமளவி லான பொருட்களை இருப்பு வைக் கும் திறனும் கொண்ட இந்த மிகப் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள், விலைக்குறைப்பில் ஈடுபடாது; மாறாக பொருட்களை பதுக்கி வைத்து, அதன்மூலம் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கே முனையும்.

கடந்த பல ஆண்டுகளாகவே இந்தியாவில் பணத்தைக்கொடுத்து பொருளை பெற்றுச்செல்லும் வர்த்த கத்தில் பன்னாட்டு பெரும் நிறுவனங் கள் ஈடுபட்டுள்ளன; இதற்காக அரசு அனுமதியும் அளித்துள்ளது. இந்த அனுமதியை பெற்ற நிறுவனங்கள், நுகர்வோருக்கு நேரடியாக பொருட் களை விற்பனை செய்யக்கூடாது என்ற தடையை தொடர்ந்து மீறியே வந்திருக்கின்றன; ஆனால் இதை தடுப்பதற்கு அரசு எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை. அதேபோல சுயகட்டுப்பாடு என்ற முறையிலான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் எவை யும் பின்பற்றப்படவில்லை. குறிப்பாக இந்த நிபந்தனைகளை அமல்படுத்து வதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை.

இந்தியாவில் சில்லரை வர்த்தகத் துறையை தாராளமாக திறந்துவிட வேண்டுமென்று நீண்ட காலமாகவே மத்திய அரசை பன்னாட்டு பெரும் நிறுவனங்களும் அந்நிய அரசாங்கங் களும் தொடர்ந்து நிர்ப்பந்தித்து வந் திருக்கின்றன. முந்தைய ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசின் காலத்தில்,  இந்த முடிவை மேற்கொள்ள விடாமல் எதிர்க் கட்சிகளும் பொது இயக்கங்களும்,  சிறு வணிகர் சங்கங்களும் தடுத்து நிறுத்தின. ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது ஆட் சிக்காலத்தில், நாசகர சக்திகளின் நிர்ப்பந்தங்களுக்கு அரசு முழுமை யாக பணிந்துவிட்டது.

அரசின் இந்த முடிவை அனைத்து தரப்பு மக்களும் அரசியல் கட்சிகளும் கூட்டாக எதிர்த்து நிற்க வேண் டும் என்று கிட்டத்தட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் , அனைத்து பொது அமைப்புகளும் , சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்களுக்கு கேடு விளைவிக்கும் இது போன்ற மொத்த -சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுக்கு திறந்து விட  மத்தியில் ஆளும் அரசுக்குக் காரணம் என்ன இருக்க முடியும் ? 

தொலைத் தொடர்புத் துறை, அஞ்சல் துறை, வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், இதர  பொதுத் துறை நிறுவனங்கள் இவற்றையெல்லாம் முடக்கி வருவது போலவேதான், இவற்றிலெல்லாம் அந்நிய நாட்டுக் கம்பெனிகளை நுழைய விடுவதுபோலவேதான் ....... இந்த முடிவும் எடுக்கப் பட்டுள்ளது. நமக்கு பாதகம் வந்தால் எதிர்க்க வேண்டும் என்பதும்,  தொழிற் சங்கங்கள் என்ன செய்தன என்று வரட்டுக் கேள்விகள் எழுப்புவதும் , இது போன்ற பொதுவான பாதகங்கள் என்றால் அதைப் பற்றி நமக்கு கவலையில்லை என்பதும் , அதற்கு சித்தாந்த சாயங்கள் பூசுவதும்   ஒரு தவறான பார்வை ஆகும். 

இறுதியாக இதுபோன்ற முடிவு ,விவசாயத் துறையின் மீதும் , குடிதண்ணீர் மீதும், மின்சாரத் துறை மீதும் முழுமையாகப் பாயும் போது,  இந்தநாட்டின் அனைத்து குடிமக்கள் முதுகிலும் பேரிடியாக, அந்த அடி விழுந்து இருக்கும். அப்போது எல்லாம் முடிந்து போய் இருக்கும்.


மீண்டும் புதுவித காலனியாதிக்கத்தில் நாம் அடிமைப் பட்டு இருப்போம் என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும் ?

Saturday, 15 September 2012

AIPEU GDS (NFPE) தொடக்க விழா -சேலம் மேற்கு கோட்டம்