பின்பு விழா மேடைக்கு நமது பாசத்துக்குரிய தோழர்கள்.J.R.,
மாநிலத்தலைவர். A.வீரமணி மாநில நிதி செயலர், Dஎபினேசர் காந்தி
மாநில உதவித் தலைவர்,P.சந்திரசேகரன் கிளைசெயாளர் PSD,கோவை
,K.R.கணேசன்,மாநிலத்தலைவர் R3,S.பன்னீர்செல்வம் மண்டலசெயாளர்
SBCO K.செம்பன் முன்னாள் மாநிலத் தலைவர் சண்முகம், மத்திய அரசு
ஊழியர் ஓய்வூதியர் சங்க செயலாளர்,நேதாஜி, மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம்,தங்கவேலுA.O (Retd), ஆகியோரை கோட்ட செயலர் சி.சஞ்சீவி வரவேற்று மேடையில் அமரவைத்தார் பின் தோழர். C.சுந்தரவடிவேலு அனைவரையும் வரவேற்று பேசினார். தலைவர் துவக்க உரை நிகழ்த்தினார். பின்னர் கோட்ட செயலர் சி.சஞ்சீவி ஈராண்டறிக்கையை சமர்பிக்க ஏகமனதாக சபை ஏற்றுகொண்டது. பின்னர் நிதி செயலர் K.K.கமலமணி வரவு செலவு கணக்கை சமர்பிக்க அதையும் சபை ஏகமனதாக ஏற்றுகொண்டது. பின்னர் நமது மாநிலச் செயலர் J.இராமமூர்த்தி அவர்கள் மிகச்சிறப்பாக இலாக்கா நிகழ்வுகள், நாம் எதிர் கொள்ளவிருக்கும் ஆபத்துகள், அதை எதிர்கொள்ள நாம் செய்ய
வேண்டிய பணிகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.
தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. மனமாச்சரியமின்றி போட்டியின்றி அனைத்து நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்படனர். பின்னர் ஓய்வு பெற்ற முன்னால் கோட்ட தலைவர் தோழர் K.பரமசிவம் அவர்களும் தோழர் சீனிவாசன் அவர்களும் இணைந்து அளித்த விருந்து நடைபெற்றது. மதியம் நடைபெற்ற பொது அரங்கில் தோழர்.A.வீரமணி மாநில நிதி செயலர், Dஎபினேசர் காந்தி மாநிலஉதவித் தலைவர்,P.சந்திரசேகரன் கிளைசெயாளர் PSD,கோவை ,K.R.கணேசன்,மாநிலத்தலைவர் R3,S.பன்னீர்செல்வம் மண்டல செயலர் SBCO K.செம்பன், சேலம் மேற்கு கோட்ட அஞ்சல் நான்கு செயலர் ரா.பிரகாஷ், சேலம் மேற்கு கோட்ட GDS(NFPE) செயலர் அய்யன்துரை,சேலம் கிழக்கு கோட்ட செயலர் தோழர் ரவீந்திரன் , பொருளாளர் தோழர் சரவணன் உட்பட பலர் வாழ்த்தி பேசினார்கள். பின்பு தோழர்.கொ.ராமன் அவர்கள் நன்றி கூற விழா இனிதே முடிவுற்றது.
புதிய நிர்வாகிகள்
கோட்ட தலைவர் : தோழர்.வெ.ஜெயராமன்,துணை அஞ்சலதிகாரி வெண்ணந்தூர்
கோட்ட செயலர் :தோழர்.க.சு.புகழேந்தி ,எழுத்தர் சூரமங்கலம்
கோட்ட நிதி செயலர் :தோழர் சி.சங்கர்,எழுத்தர் சூரமங்கலம்
Monday, May 11, 2015
V.C.Premlatha










