இன்று தேசப்பிதா மகாத்மா காந்திஜி அவர்களின் நினைவு நாள்
அறுபத்து ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (1948 ஜனவரி 30 புதுதில்லியில் மாலை பிரார்த்தனை கூட்டத்திற்குசெல்லும் வழியில் தீவிரவாதி கோட்சேயால் சுட்டு கொல்லப்பட்டார்
தேசப்பிதா மகாத்மா காந்திஜி.ஜனவரி 24 1948 நண்பர் ஒருவருக்கு ஹிந்தியில் எழுதிய கடிதத்தில்,”சத்தியம்,அகிம்சை,பிரம்மச்சரியம் முதலானவற்றை கடவுள் சாட்சியாக நான் நிறைவேற்றி வருகையில், அவற்றையொட்டி நான் மரிப்பதற்கு ஆண்டவன் அருள் புரிவாராக! எவரோ ஒருவர் என்னை கொன்றால் அந்நபர் மீது நான் சிறிதும் கோபப்படலாகாது.ராம நாமத்தை முணுமுணுத்த வண்ணம் நான் சாவேன்” என்று கைப்பட எழுதியுள்ளார்.அவரது வேண்டுதல் அதற்கடுத்த வாரமே நிறைவேறியது.மெலிந்த தேகமுடைய மகாத்மா அவர்கள் பிரார்த்தனை கூட்டத்திற்கு செல்லும் பொது கரங்களை குவித்து வணக்கம் தெரிவித்து கொண்டே நெருங்கிய கோட்சே கையில் இருந்த துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டுகளில் இரண்டு குண்டுகள் வலது மார்பை துளைத்து சென்றது. காந்தியின் கால் தடுமாறியது. அவர் மேல் மேலும் மூன்றாவது குண்டு தாக்கியதும் அவர் மெல்ல தரையில் சரிந்தார். அவரது வாயிலிருந்து “ஹே ராம் “என்ற இரண்டு சொற்கள் வெளியே வந்தன.அவை இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலோ அல்லது இறைவனிடம் தனது பணிவான வேண்டுதலை தெரிவிப்பது போலவோ இருந்தது.
காந்திக்கும் தமிழருக்கும் இடையே இருந்த உறவு
காந்திக்கும் தமிழருக்கும் இடையேஇருந்த ,பிரிக்க முடியாத உறவு-போராட்டத்திற்காக அவருக்கு தங்களிடம் இருந்த அனைத்தையும் தந்தவர்கள் தமிழர்கள். ஜோஹன்ஸ்பர்க் நகரத்தில் நடத்தப்பட்ட கடைசிப் பாராட்டு கூட்டத்தில் காந்தி மூன்று இந்தியர்களைக் குறிப்பிட்டு பேசினார்.மூன்று பேரும் தமிழர்கள். “ஹானஸ்பர்க் வள்ளியம்மையைத் தந்தது. ஜோஹன்ஸ்பர்க் நாகப்பனையும் நாராயணசாமியையும் தந்தது.பதின்பருவத்திலிருந்து அப்போது தான் வெளியே வந்தவர்கள் உயிரைக்கொடுத்தவர்கள். புகழ் யாருக்காவது உரித்தானது என்றால் உயிரைத்தியாகம் செய்த இந்த மூவருக்கு அது உரித்தானது” என்றார். குஜராத்திகள் மத்தியில் பேசும்போது “குஜராத்தி சகோதரர்கள் எனக்கு உதவி செய்திருகிறார்கள். ஆனால் தமிழ் சமுதாயம் போராட்டத்தை வலுப்பெறச் செய்த அளவுக்கு அவர்கள் செய்யவில்லை என்றுதான் சொல்வேன்.எனக்கு தமிழ் தெரியாது. ஆனால் அவர்கள் தான் எனக்கு அதிக உதவி செய்தவக்ர்கள்” என்று பேசினார்.தமிழர்கள் மத்தியில் பேசும்போது எனக்கு மதராஸ் பற்றிக் கொஞ்சம் தெரியும். அங்கு சாதி வேற்றுமைகள் எவ்வளவு கூர்மையாக இருக்கின்றன என்பது பற்றியும் தெரியும். நீங்கள் யாரும் உயர்ந்த சாதியையோ தாழ்ந்த சாதியையோ சேர்ந்தவர்கள் அல்லர்,நீங்கள் எல்லோரும் இந்தியர்கள்,தமிழர்கள் என்பதை நினைவில் வைத்துகொள்ள வேண்டும்” என்று பேசினார்.(Thanks .Ramachandra Guhaa in Gandhi before India)
Thursday, January 30, 2014
V.C.Premlatha



