Saturday, 22 October 2011

கொஞ்சம் யோசிங்களேன்

இன்றே செய்யுங்கள்..!! (do it today..!)

எந்த செயலையும் நாளை நாளை என்று நாட்களைக் கடத்தாமல், இன்றே செய்வதால் அது நன்றே முடியும்.

    bharathi with his wife
  • வயதானவர்களின் அறிவு முதிர்ச்சி, நடுவயதுக்காரர்களின் மன உறுதி, இளைஞனின் உற்சாகம், குழந்தையின் இதயம் ஆகியவற்றை அளிக்கும்படி தினமும் இறைவனிடம் வேண்டிக்கொள்ளுங்கள்.
  • மனிதனின் எண்ணத்தையும் மீறி சிலநேரங்களில் கால சக்தி வேலை செய்வதுண்டு.  எனவே, எது நடந்தாலும் அதை ஏற்கும் வகையில், மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • வாழ்க்கையில் எப்போதும் சமாதானத்தையும், சகிப்புத்தன்மையையுமே நமது லட்சியங்களாக கொள்ள வேண்டும்.
  • கடந்து போன நாட்களும், செயல்களும் மீண்டும் வருவதில்லை.  எனவே, கடந்த கால வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கூடாது.
  • தனி இடத்தில் அமர்ந்து உயர்ந்த சிந்தனை மற்றும் அமைதியான சிந்தனையால் அறிவை நிரப்பி தியானம் செய்வது ஆரோக்கியத்திற்கு நல்லது.
  • அறிவு தான் அரசன்.  மனமும், இந்திரியங்களும், உடம்பும் அறிவுக்கு அடங்கி வாழ வேண்டும்.
  • -- பாரதியார்.-
  • courtesy:Thangampalani