Welcome to NFPE Blog

Hi Friends, Welcome to National Federation Of Postal Employees, Group-C

Salem West Division

***R.Sundaram***

Wednesday, 27 November 2013

CONFEDERATION - WOMEN CONVENTION - 25, 26th NOV 2013- NEW DELHI










நமது தமிழகத்தில் NFPE  அமைப்பில் இருந்து  தமிழக மகிளா  கமிட்டி தலைவர் தோழர். ஏஞ்சல் சத்தியநாதன் , மகிளா  கமிட்டி கன்வீனர் தோழர். மணிமேகலை  தலைமையில் 15 தோழியர்கள் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மகிளா அமைப்பின் கருத்தரங்கில் கலந்துகொண்டது நமக்குப் பெருமையாகும். கோவை கோட்டத்தில் இருந்து மட்டும் எட்டு தோழியர்கள் கலந்துகொண்டது வரவேற்கத் தக்கது. அந்தத் தோழியர்களை நாம் பாராட்டுவோம் !

Monday, 25 November 2013

NFPE க்கு வயது 60 துவங்குகிறது 24.11.2013 திருப்பூரில் வைரவிழாக் கொண்டாட்டம்

நமது  திருப்பூர் அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்களான அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு மற்றும் GDS(NFPE) கோட்ட சங்கங்களின் சார்பில்  N F P E சம்மேளன வைர விழா கொண்டாட்டம்  24.11.2013  அன்று திருப்பூர் தலைமை அஞ்சலகத்தில் கொண்டாடப்பட்டது. 

தோழர் P.K.ராமசாமி ,தலைமை அஞ்சல் அதிகாரி அவர்கள் கொடியேற்றி விழாவை தொடக்கியதும் வீரமுழக்கங்கள் விண்ணதிர முழங்கியது.
தோழர்கள் K.S. ரவீந்திரன். தோழர் P.அம்மாசியப்பன்,தோழர் .R .கிட்டுசாமி  ஆகியோரின் கூட்டு தலைமையில் விழா தொடங்கியது .  கோட்ட செயலரும் மாநில  அமைப்பு செயலருமான தோழர் A.ராஜேந்திரன் வரவேற்புரை நிகழ்த்தினார். 

 மாநில உதவி செயலரும்,கோவை மேற்கு மண்டலச் 

செயலருமான தோழர் C.சஞ்சீவி  அவர்கள் வாழ்த்துரை 

வழங்க  மத்திய அரசு மகா ஊழியர் சம்மேளனத்தின் தமிழ் மாநில 

பொது செயலர்


                 தோழர் M.துரைபாண்டியன் அவர்கள் 

"ஏழாவது ஊதியக்குழு, புதிய பென்ஷன் மசோதா, நமது கடமை " 
என்ற தலைப்பில் மிக அற்புதமான உரையாற்றினார் .  தோழர் 
V.தர்மலிங்கம் அவர்கள் நன்றி கூற விழா இனிதே முடிவுற்றது. ஏறக்குறைய 100 தோழர்/தோழியர் கலந்து  கொண்டது விழாவின் மணிமகுடம். 







---சி.சஞ்சீவி, மண்டலச் செயலர் ,கோவை மேற்கு மண்டலம்------

REMEMBER ... MARTYRS OF OUR MOVEMENT .... NFPTE/NFPE IS GREAT

\

வைரவிழாக் கொண்டாட்டம் 
துவங்குகிறது ! ஆம் !
        
 NFPE  க்கு வயது 60 துவங்குகிறது ! 
UPTW  அமைப்பு NFPTE பேரியக்கமாக ஒன்றுபட்டு மலர்ந்த நாள்  : 24.11.1954

இப்பூவுலகில் இருந்து மறைந்திட்ட 
நமது தியாகத் தலைவர்களை 
நாம் நினைவில் கொள்வோம்! 




COM.K.G. BOSE











உதவிக் கரம் நீட்டுங்கள் !

அன்புத் தோழர்களுக்கு பணிவான வணக்கங்கள் !
இது ஒரு முக்கியமான வேண்டுகோள் !  நமக்காக 35 ஆண்டு காலம் தொழிற்சங்கத்தில் தொய்வில்லாது, எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாது, அர்ப்பணிப்பு உணர்வுடன்  பணியாற்றிய  மூத்த தோழர் ஒருவரின் துன்ப காலத்தில்  நம்மால் நாம் செய்யக் கூடிய உதவியாக நினைத்து  நீங்கள் ஆற்றிட வேண்டியது  இது .

கிட்டத்தட்ட 15 ஆண்டு காலம் அரக்கோணம் கோட்டச் செயலராக , பின்னர்  கோட்டச் சங்கத்தின் தலைவராக , பின்னர்  தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் உதவித் தலைவராக  பணியாற்றிய  நம் அருமைத்தோழர் E .V. என்று அழைக்கப்படும் தோழர்.
E .வெங்கடேசன்  அவர்களின் ஒரே மகன்  திரு.  V .கார்த்திகேயன்  அவர்கள் ( வயது 35) வேலூர்  VIT  இல் LAB  INSTRUCTOR  ஆக பணியாற்றி வருகிறார். அவருக்கு  சமீபத்தில் தான்  திருமணம் நடைபெற்றது.  அரக்கோணம் தலைமை அஞ்சலகத்தில்  புதிதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பணி  நியமனம் பெற்ற அன்புத் தோழியர்.  சுஜாதா  அவர்கள்  தான்  அவருக்கு துணைவியார் .

திரு . கார்த்திகேயன் அவர்கள்   இரண்டு மாதங்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப் பட்டு  பல்வேறு இடங்களில் மருத்துவம் பார்த்தும் பலனில்லாமல்  இறுதியில்  மருத்துவர்களின்  பரிந்துரைப்படி  சிறப்பு சிகிச்சை பெற  சென்னை சோழிங்க நல்லூரில் உள்ள   GLOBAL HOSPITAL இல்  அனுமதிக்கப் பட்டார். அங்கு அவரது கல்லீரல் முற்றிலுமாக செயல் இழந்துவிட்டதாக அறிவிக்கப் பட்டு , LIVER TRANSPLANT செய்தால் மட்டுமே அவர் உயிர் பிழைக்கமுடியும் என்று அறிவித்து விட்டார்கள் . ஆனால் அதற்கான அறுவை சிகிச்சை செலவு மட்டுமே ரூ.24  லட்சம் என்று கூறிவிட்டார்கள். DONOR ஆக  தோழியர் சுஜாதா அவர்களே  நிர்ணயிக்கப் பட்டு மருத்துவமனையில் சேர்ந்ததில் இருந்து  DISCHARGE வரை மொத்தமாக 30 லட்சத்திற்கு மேல் கட்ட வேண்டியிருக்கும் என்று மருத்துவ மனையில் கூறிவிட்டார்கள்.

MIDDLE CLASS FAMILY யான அவர்களால் இவ்வளவு பணம் ஏற்பாடு செய்திட இயலாமல் மிகுந்த சிரமத்திற்கு இடையே  தனது TNHB FLAT ஐக் கூட அடமானம் வைத்து  அறுவை சிகிச்சைக்காக 21 லட்சம்  கட்டி,கடந்த சனியன்று  அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது. TRANSPLANTATION வெற்றிகரமாக நடத்தப் பட்டதாக  மருத்துவர்களால் தெரிவிக்கப் பட்டுள்ளது .  தோழர். E.V. அவர்களின் மகனும் மருமகளும் தற்போது ICU வில் உள்ளனர்.

இந்த நிலையில் நம்மால் முடிந்த உதவிகளை நாம் செய்திட்டால் அது அவருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் பெரும் உதவியாக இருக்கும் என்று கருதி  நம்முடைய தோழர்களுக்கு இந்த செய்தியை வெளியிடுகிறோம்.

சிறு அளவில் இருந்தால் கூட அது அவருக்கு பெரும் உதவியாக அமைந்திடும் என்பதே நம்  நம்பிக்கை . உதவ முடிந்தவர்கள் உடன்  கீழே கண்ட முகவரிக்கு EMO வாகவோ DD ஆகவோ அனுப்பிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்த செய்தியை இந்த வலைத் தளத்தை பார்க்காத அனைவருக்கும்  தெரிவிக்கவும்.
  
Com. P.Kumar,
Secretary, AIPEU Gr ‘C’
Arakonam Divl  Br,
Arakonam 631 001.
மனித நேயமிக்க நமது தோழர்/தோழியர்களுக்கு
வேண்டுகோளுடன்
Com.J.R. Circle Secretary AIPEU Gr-C
Com.C.Sanjeevi Regl Sec, AIPEU Gr-C WR
Com.K.S.Pugazhendhi Dvl Sec (I/C) Salem Wested by All India Postal Employees Union – Group ‘C’ Tamilnadu Circle

Saturday, 23 November 2013

144 Govt Officials penalised by CVC for graft


New Delhi, Nov 22 (PTI) : 144 officials working in various central government departments have been penalised by Central Vigilance Commission (CVC) for their alleged involvement in corruption.

Of them, a maximum of 55 are working in Central Board of Excise and Customs (CBEC), 16 in Department of Telecommunications, 11 in Ministry of Railways and six each in Delhi Urban Shelter Improvement Board, UCO Bank and Bank of Maharashtra, the CVC said in its performance report for September.
Courtesy-SA POST

Dopt issued orders on grant of incentive for acquiring higher qualifications.


Dopt issued orders on grant of incentive for acquiring higher qualifications.

Inclusion of additional qualifications / Review of the qualifications listed in the Annexure to this Department’s OM No 1/2/89-Estt.(Pay-I) dated 9/4/1999...

No.1/3/2008-Estt.(Pay-I)(Vol.II)
Government of India
Ministry of Personnel, Public Grievances and Pensions
Department of Personnel and Training

North Block, New Delhi
dated the 22nd November 2013

OFFICE MEMORANDUM 

Subject: Grant of incentive for acquiring higher qualifications - Inclusion of additional qualifications / Review of the qualifications listed in the Annexure to this Department’s OM No 1/2/89-Estt.(Pay-I) dated 9/4/1999 -reg.

The undersigned is directed to refer this Department’s OM of even number dated 28.4.2009 and subsequent reminders of even number dated 17.6.2009, 20.8.2009, 30.10.2009, 7.1.2010 and 23.3.2010 calling for suggestions regarding addition / deletion of qualifications listed in the Annexure to this Department’s OM dated 9.4.1999.

2. Even after lapse of considerable time, no inputs in this regard have been received from Ministries / Departments, except Department of Revenue, Ministry of Finance.

3. All the Ministries / Departments are, therefore, requested to furnish their suggestions in this regard to this Department within 30 days from the date of issuance of this OM, before a final decision is taken in the matter. This OM may please be given wide publicity.

sd/-
(Mukesh Chaturvedi)
Deputy Secretary to the Government of India

Source: www.persmin.nic.in

Friday, 22 November 2013

சம்பள பட்டியல் சேமிப்புத் திட்டம் அலைய வைக்காத அஞ்சலக சேமிப்பு!


                                                 



மாதச் சம்பளம் வாங்குகிறவர்களில் பலர் வங்கியிலோ அல்லது தபால் அலுவலகத்திலோ ஆர்.டி. போன்ற திட்டங்களில் சேர்ந்துதான் சிறுக சிறுக சேமித்து வருகிறார்கள். இப்படி சேமிக்கும்போது ஒவ்வொரு மாதமும் வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்துக்குச் செல்லவேண்டும். ஆனால், தபால் அலுவலகம் செல்லாமலே அதில் கிடைக்கும் வருமானம் மற்றும் வசதியை நீங்கள் பெற விரும்பினால், நீங்கள் தபால் அலுவலகத்திலுள்ள சம்பள பட்டியல் சேமிப்பு (payroll saving scheme) வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.

அது என்ன சம்பள பட்டியல் சேமிப்பு வசதி? இது யாருக்கானது?, இந்த முறையில் எப்படி சேமிப்புக் கணக்கைத் தொடங்குவது?, வட்டி எவ்வளவு? என பல விஷயங்களை விளக்கமாக எடுத்துச் சொன்னார் தென்மண்டல போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மெர்வின் அலெக்ஸாண்டர். அவர் தந்த விவரங்கள் இதோ:



சிறப்பு வசதி!

''ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் ஆர்.டி. (Recurring Deposits), டி.டி. (Time Deposits), தேசிய சேமிப்பு பத்திரம் (NSCs) மற்றும் பி.பி.எஃப். (PPF) போன்ற சேமிப்புத் திட்டங்களுக்கான சிறப்பு வசதிதான் சம்பள பட்டியல் சேமிப்பு. இந்த வசதியை சம்பளதாரர்கள் மட்டுமே பயன்படுத்த இயலும். ஆனால், தனிநபராக இதில் சேரமுடியாது. நிறுவன பணியாளர்கள் பலர் சேர்ந்துதான் இம்முறையில் சேமிப்பை ஆரம்பிக்க முடியும்.

இந்த முறையில் தபால் அலுவலகத்தில் சேமிப்புக் கணக்கை ஆரம்பிக்க வயது வரம்பு இல்லை. சம்பளதாரராக இருந்தால்போதும். தனிநபர்கள், தபால் அலுவலகத்தில் ஆர்.டி., டைம் டெபாசிட் (டி.டி). போன்ற சேமிப்பு கணக்கை ஆரம்பித்து, மாதந்தோறும் பணம் செலுத்த தபால் அலுவலகம் செல்வது வழக்கம். இதனால் நேரம் மற்றும் போக்குவரத்துக்காக செலவிடும் தொகை வீணாகிறது.

ஆனால், சம்பள பட்டியல் சேமிப்பு திட்டத்தின் கீழ் சேமிப்பை மேற்கொள்ளும்போது பணத்தைப்போலவே நேரமும், உழைப்பும் சேமிக்கப்படுகிறது. அதுதவிர, இத்திட்டத்தில் சேர்ந்திருக்கும் நிறுவனத்துக்கு கமிஷனும் வழங்கப்படுகிறது.



யாருக்கு?
அரசு மற்றும் தனியார் துறையில் வேலை செய்யும் அனைவரும் இந்த சம்பள பட்டியல் சேமிப்பு திட்டத்தின் மூலம் சேமிக்க முடியும். குறைந்தபட்சம் 5 நபர்களில் இருந்து அதிகபட்சம் எவ்வளவு பணியாளர்கள் வேண்டுமானாலும் இதில் ஒருங்கிணைந்து பயன் பெறலாம்.
ஒவ்வொரு மாதமும் பணியாளர்களின் சம்பளத்திலிருந்து சேமிப்பு தொகையைப் பிடித்து, தபால் அலுவலகத்தில் நிறுவனம் கட்டிவிடும். சேமிப்பு ஐந்தாண்டுகளுக்கானது என்றாலும், அதற்கு முன்னரே விதிமுறைகளுக்கு உட்பட்டு சேமிப்பு கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

நிறுவனத்துக்கு கமிஷன்!
சம்பள பட்டியல் சேமிப்பு திட்ட வசதியின் கீழ் சேமிப்பைத் தொடர விரும்பாத பணியாளர்கள் அவர்களின் நிறுவனத்திடம் தெரிவித்துவிட்டு விலகிக்கொள்ளலாம். மீண்டும் இணைந்துகொள்ள விரும்பினால் இடையில் சேமிப்பைத் தொடராமல் விட்ட மாதங்களுக்கான தொகையை அபராதத்துடன் செலுத்த வேண்டும்.

ஆர்.டி. சேமிப்பு திட்டத்தில் இந்த வசதியை பயன்படுத்தினால், ஆர்.டிக்கு வழங்கப்படும் 8.3% வட்டி வழங்கப்படுகிறது. இதேபோல், அந்தந்த திட்டத்துக்கு ஏற்ற வட்டி கிடைக்கும். இதில் கூடுதல் சலுகை என்பது இந்த வசதியைப் பயன்படுத்தும் நிறுவனத்துக்கு 2.5% கமிஷன் வழங்கப்படுவதாக இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் கமிஷன் தொகையானது வழங்கப்படும். 

சம்பள பட்டியல் சேமிப்பு திட்ட வழிமுறையில் சேர்ந்து சேமிக்க நினைக்கும் நிறுவனத்துக்கு கூடுதலாக 2.5 சதவிகித கமிஷனும், டி.டி. சேமிப்புக்கு 1%, என்.எஸ்.சி. சேமிப்புக்கு 1%, பி.பி.எஃப். சேமிப்புக்கு 1% கமிஷனும் வழங்கப்படுகிறது'' என்று முடித்தார் அவர்.

அங்குமிங்கும் அலையாமல் பாதுகாப்பாக சேமிக்க நினைப்பவர்கள் இத்திட்டத்தைப் பரிசீலிக்கலாமே!
Courtesy : http://www.sstaweb.com

Advances to Government servants - Rate of interest for purchase of conveyances during 2013-2014


Government of India

Ministry of Finance

Department of Economic Affairs


New Delhi, the 12th November, 2013


OFFICE MEMORANDUM


                                     Subject : Advances to Government servants — Rate of interest for                                                                     purchase of  conveyances during 2013-2014.


The undersigned is directed to state that the rates of interest for advances sanctioned to the Government servants for purchase of conveyances during 2013-2014 i.e. from 1st April, 2013 to 31st March, 2014 are revised as under:

                                                                                                     Rate of interest

                                                                                                             per annum

(i)         Advance for purchase of conveyance other than

motor car (viz. motor cycle, scooter etc.)                -                                       9%


(ii)        Advance for purchase of motor car                        -                          11.5%



Sd/-

(A.K. Bhatnagar)

Under Secretary (Budget)

To

1.         All Ministries/Departments of the Government of India with spare copies for IFA, Controller of Accounts and Pay and Accounts Offices.

2.         Finance Secretaries of UTs without legislature.


Copy forwarded to:—


1.         C&AG of India, New Delhi.

2.         C.G.A., New Delhi.

3.         C.G.D.A., New Delhi.

4.         All AGs and Director of Accounts.

5.         Supreme Court of India.

6.         UPSC, New Delhi.


Tender floated for Supply and Sale of Gold Coins in Post offices has been Cancelled ....................



Thursday, 21 November 2013

புதிய செய்திகள்

COM. N.S., DY GENERAL SECRETARY , P 3 CHQ BECOME MEMBER JCM (DC)

===============================================
தமிழகத்தைச் சேர்ந்த நமது அன்புக்குரிய  

தோழர் . N . சுப்ரமணியன் , துணைப் பொதுச் செயலர், P 3 CHQ  அவர்கள் 

JCM (DC )  உறுப்பினராக சம்மேளனத்தால் நியமிக்கப் பட்டு 
எதிர் வரும் 27.11.2013 அன்று தன்னுடைய முதல் கூட்டத்தை சந்திக்கிறார் . அவர்தம் பணி  சிறக்க  நம் தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின்  மனம் திறந்த  நல் வாழ்த்துக்கள் .  

நம் தலைவர் KVS  அவர்கள் விட்டுச் சென்ற மத்திய கூட்டு ஆலோசனைக் குழுவின் பணியை அவர் தொடர்ந்திட வேண்டும், ஊழியர் நலனில் பல்வேறு வெற்றிகளை  பெற்றிட  வேண்டும்  என்று  வேண்டுகிறோம்.
===============================================

வாழ்த்துக்களுடன் 
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் மூன்று,
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் நான்கு,
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் N F P E (GDS)
சேலம் மேற்கு கோட்டம் 


The meeting of JCM (DC) will be held on 27/11/2013 at 10.00 A.M. under the Chairpersonship of Secretary (Posts) at, Dak Bhavan, New Delhi.


No.06-02/2013-SR
Government of India
Ministry of Communications & IT
Department of Posts
                                                         (S.R. Section)                                                18/11/2013

Subject:     Notice for the JCM(DC) meeting to discuss new subjects.

     The meeting of JCM (DC) to discuss the new subjects will be held on 27/11/2013 at 10.00 A.M. under the Chairpersonship of Secretary (Posts) in G.P. Roy Committee Room, 2nd Floor, Dak Bhavan, New Delhi.

     Please make it convenient to attend the meeting.  Subjects for discussion in the meeting were circulated vide S.R. Section’s letter of even number dated 23rd July, 2013.  The meeting will be followed by lunch.


( Arun Malik )
Director(SR)

Official Side:  Member(O),  Member(P), Member(Tech),  Member(PLI),  Member (Plg), Member(HRD).CGM(MB)/CGM(PLI)/CGM(BD&MD)/JS&FA.Secretary(PSB)/DDG(P)/DDG(Estt)/DDG(R&P)/DDG(Estates&MM)/DDG(PAF)/DDG(Vig.)/DDG(PO&CP)/DDG(FS)/DDG(Technology) OSD to Secretary(Posts).

Staff Side:
1.      Shri  M. Krishnan
2.      Shri   D. Theagarajan
3.      Shri  Giri Raj Singh
4.      Shri  Ishwar Singh Dabas
5.      Shri  D. Kishan Rao
6.      Shri  T.N. Rahate
7.      Shri  P. Suresh
8.      Shri  Pranab Bhattacharjee
9.      Shri T. Satyanarayana
10.    Shri  R.N. Parashar
11.    Shri  N. Subramanian
12.    Shri  C.B. Surve
13.    Shri S.K. Humayun
14.    Shri  N. Ramappa

Copy for information to : Sr. PPS to Secretary(Posts)
Copy to:
(i)   ADG(GA) – For booking of Committee Room and arrangements of Tea/Coffee/Snacks and Lunch, through CPLO.  Exact number of persons and Menu etc. will be intimated later.
(ii)  Reception Officer  - A list of members of Staff Side is enclosed for issuing entry passes on 27/11/2013.
(iii)  Caretaker -  To ensure cleanliness of Committee Room and to arrange flower vase etc.
(iv)  A.E.(Elect) – for ensuring functioning of mikes etc.

MARCH TO PARLIAMENT - STAY FOR T.N. COMRADES AND OTHER DETAILS

அன்பான கோட்ட/ கிளைச் செயலர்களே ! 
 மாநிலச் சங்க நிர்வாகிகளே ! வணக்கம் !

எதிர் வரும் 11.12.2013 மற்றும் 12.12.2013 தேதிகளில்  நடைபெற உள்ள பாராளுமன்றம் நோக்கிய  பேரணியில் கலந்துகொள்வதற்கு ஊழியர்களை தயார்படுத்தும் பணியில் இருப்பீர்கள்  என்று  எண்ணுகிறோம்.  இதுவரை நான்கு கிளைகளில் இருந்து மட்டும்  எத்தனை பேர் கலந்து கொள்கிறீர்கள் என்ற தகவல்  கோட்ட/ கிளைச் செயலர்களிடம் இருந்து வந்துள்ளது. இதர கிளைகளில் இருந்து எந்த வித தகவலும் வரவில்லை . சரியான தகவல் வந்தால் மட்டுமே  நம்முடைய தோழர்கள் தங்குவதற்கு   டெல்லி மாநகரில் இடவசதி செய்து தர இயலும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டுகிறோம். இல்லையேல் அந்த நேரத்தில் எந்த ஏற்பாடும் செய்திட இயலாது என்பதையும்  கவனத்தில் கொண்டிட வேண்டுகிறோம்.

இருந்த போதிலும்  தற்போது 10.12.2013 மற்றும் 11.12.2013 ஆகிய இரு தேதிகளுக்கு தமிழகத்தில் இருந்து வரும் தோழர்களுக்கு மட்டும் தனியே  திருமண மண்டபம்  ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது . 12.12.2013 தேதியில் அதே  இடம் பெறுவதில் சற்று சிக்கல்  உள்ளதாக நமது துணைப் பொதுச் செயலர் தோழர். N .S . அவர்கள் தெரிவித்துள்ளார். இருந்த போதிலும் 12.12.2013 அன்றும்  அதே மண்டபம் ஏற்பாடு செய்திட நாம் கோரியுள்ளோம்.

இடம் :  சுபம்  திருமண மண்டபம் 
சரோஜினி நகர் அஞ்சல் ஊழியர் குடியிருப்பு வளாகம் 
சரோஜினி நகர் பஸ் டிப்போ  நேர் எதிரில் .
புது டெல்லி .

இந்த குடியிருப்பு வளாகத்தில் தான் நமது துணைப் பொதுச் செயலரும் தங்கியுள்ளார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.எனவே  இதர உதவி பெறுவதில் பிரச்சினை எதுவும் நம்  தோழர்களுக்கு இருக்காது .

அவரது அலைபேசி  எண் : 07838019997  
இல்லத் தொலைபேசி எண் : 01124121329

சரோஜினி நகர்  வருவதற்கு  வழிக் குறிப்பு 

புது டெல்லி HAZRAT  NIZAMUDDIN  RAILWAY  STATION  இல் இறங்க வேண்டும் . அங்கிருந்து  சரோஜினி நகர் பஸ் டெப்போ  வுக்கு ஆட்டோ அல்லது வாடகை  காரில்தான் வர இயலும் . மொத்த தூரம் 8.5  கி. மீ. பயண நேரம் 20 லிருந்து 25 நிமிடங்கள் .

அரசு நிர்ணய ஆட்டோ கட்டணம் : 

பகலில்  3 பேருக்கு  ரூ. 77.00   இரவில்   3 பேருக்கு : ரூ. 96.00

அரசு நிர்ணய வாடகை கார்  கட்டணம் : 

பகலில்  4 பேருக்கு  ரூ. 130.00  இரவில்  4 பேருக்கு ரூ. 162.00

CAB  இல்  7 பேர் வருவதற்கு  கட்டணம் :

 பகலில் ரூ. 170.00  இரவில்  ரூ. 200.00

சரோஜினி நகரில் இருந்து JANTAR  MANTAR  வருவதற்கு வழிக் குறிப்பு 

சரோஜினி நகரில் இருந்து  பேரணி நடைபெறும் JANTAR  MANTAR பகுதிக்கான தூரம் 8.5 கி.மீ.  பயண நேரம் 20 நிமிடங்கள் . ஆட்டோ கட்டணம்   3 பேருக்கு  ரூ. 75.00   கால் டாக்ஸி :  4 பேருக்கு  ரூ. 130.00 . 

சரோஜினி நகர்  சுபம்  திருமண மண்டபம்  அமைந்துள்ள  அஞ்சல் குடியிருப்புக்கு நேர் எதிரே ( நமது  துணைப் பொதுச் செயலரின்  வீட்டிற்கு நேர் எதிரே )  சரோஜினி  நகர் பஸ் டெப்போ  உள்ளது . அங்கேயே பேருந்து நிறுத்தமும் உள்ளது . அந்த பேருந்து நிறுத்தத்தில்  இருந்து  பேருந்து நேரிடையாக உள்ளது . அதன் பயண நேரம் 30 - 40 நிமிடங்கள் .

அருகில் AIIMS METRO ரயில்வே ஸ்டேஷன் உள்ளது . அதற்கு சரோஜினி நகரில் இருந்து  நடந்தும்  செல்லலாம். அல்லது  எதிரே உள்ள பஸ் டெப்போ  நிறுத்தத்தில் இருந்து  தடம் எண்  544 என்ற பேருந்தில்  ஏறி அருகில் உள்ள AIIMS  METRO RAILWAY STATION இல் இறங்கி அங்கிருந்து YELLOW LINE METRO ரயில் மூலம் PATEL CHOWK  METRO  STATION  இல் இறங்கி GATE NO  4 வழியே வெளியே வந்தால்  JANTAR MANTAR  வரலாம். 

இது தவிர  பேரணிக்கு முன்னதாகவோ அல்லது  மறுநாளோ தங்கி   டெல்லி நகரை  மற்றும் அதன் அருகாமையில் உள்ள  ஆக்ரா , பதேபூர் சிக்ரி , மதுரா, பிருந்தாவன்  உள்ளிட்ட பகுதிகளை  சுற்றிப் பார்க்க விரும்பும் தோழர்களுக்கு   சுற்றுலா  VAN   அல்லது பேருந்து தினம்  காலை 07.00 மணிக்கு புறப்பட்டு  இரவு 08.00 - 10.00 க்குள் திரும்புமாறு  உள்ளன . 

அவற்றை  நமது  துணைப் பொதுச் செயலர் மூலம் ஏற்பாடு செய்து கொள்ளுங்கள் . ஓரளவு நியாயமான கட்டணத்தில்  இந்த வசதியை பெறலாம். நேரிடையாக வரும் AGENT  கள்  மூலம் செல்ல வேண்டாம் . ஏனெனில் அவர்கள்  மொழி தெரியாத நம் தோழர்களிடம்  ஏமாற்றிட வாய்ப்பு உள்ளது .  மேலும் தென்னிந்திய உணவு  கிடைக்கும் இடங்களையும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் .

கோட்ட/ கிளைச் செயலர்களே !
1) நீங்கள்  வரும் போது உங்கள் கோட்டத்தின் BANNER  மற்றும் கொடியுடன் தவறாமல் வருகை  தர வேண்டுகிறோம். 

2)  இது டிசம்பர் மாதமானதால் டெல்லி நகரில் குளிர் அதிகமாக இருக்கும்.எனவே கண்டிப்பாக பேரணிக்கு வரும் தோழர்கள் அனைவரிடமும்  கம்பளி ஆடைகள் , போர்வை , ஸ்வெட்டர் , கம்பளி தலைக் குல்லாய்  கொண்டுவர அறிவுறுத்தவும் .

3) பேரணியில் தமிழகத்தை சேர்ந்த தோழர்கள் அனைவரும் தமிழக அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு , RMS  மூன்று , RMS  நான்கு , GDS  தோழர்கள் தமிழகத்தின்  BANNER  இன் கீழ்  வரிசைப் பட்டு  நிற்க அந்தந்த பகுதி தோழர்களிடம் முன்கூட்டியே அறிவுறுத்தவும்.

4) இந்த  செய்திக்  குறிப்பை  நகல் எடுத்து  பேரணிக்கு வரும் அனைத்து தோழர்களிடமும்  கண்டிப்பாக கொடுக்கவும்.


HAND BOOK 2014 – UPDATING - INDENT

To,


All Divisional/Branch Secretaries

Dear Comrades,

It is requested to furnish latest full Postal address, Mobile number and E-mail ID for updating Hand Book 2014 by next Post/e-mail/phone/SMS to 09013946988, 07838019997, 09868853970

CHQ e-mail ID: aipeugrc@gmail.com

Further requested to send indent for Hand Book - 2014 immediately.


Comradely yours,

(M. Krishnan)

General Secretary

JCM (DC) MEETING AND CADRE RESTRUCTURING COMMITTEE MEETING WILL BE HELD ON 27.11.2013

JCM (Departmental Council ) meeting is  notified  to be held on 27.11.2013  in the morning  at New Delhi.

Cadre Restructuring Committee meeting  is notified to be held on 27.11.2013 in the evening  at New Delhi.

-----------------------------------------------------------------------------------------------------------------------------
Ministry of Communications & IT
Department of Posts
(S.R. Section) 18/11/2013

Subject: Notice for the JCM(DC) meeting to discuss new subjects.

The meeting of JCM (DC) to discuss the new subjects will be held on 27/11/2013 at 10.00 A.M. under the Chairpersonship of Secretary (Posts) in G.P. Roy Committee Room, 2nd Floor, Dak Bhavan, New Delhi.

Please make it convenient to attend the meeting. Subjects for discussion in the meeting were circulated vide S.R. Section’s letter of even number dated 23rd July, 2013. The meeting will be followed by lunch.

( Arun Malik )
Director(SR)

------------------------------------------------------------------------------------------------------------------------------

TUESDAY, NOVEMBER 19, 2013


6th CADRE REVIEW FOR IPS OFFICERS ... FIRST CADRE REVIEW FOR GR.C EMPLOYEES

6th Cadre review of IPoS...

It is learnt that 6th Cadre Review of IPoS is under process at Directorate. In the said cadre review, up-gradation of few posts of JAG to SAG and SAG to HAG have been suggested besides new creation of few JAG posts. The proposal is under finalization. 

It is also notified that the Directorate has called for Cadre Restructuring meeting of Gr. C employees 27/11/2013. The meeting was earlier scheduled on 12.11.2013.  If something clinched, this would be the first cadre review for Gr.C employees.

NFPE DIAMOND JUBILEE CELEBRATIONS .... 24.11.2013

NFPE DIAMOND JUBILEE CELEBRATIONS FROM 24.11.2013 TO 24.11.2014


National Level inaugural Function of one year Long celebrations will be held at MP’s Hall, New Delhi (Near NFPE Office, North Avenue) on 24th November 2013 at 4 PM. Distinguished personalities, Leaders of Central Trade Unions, National Leaders of Confederation, NFPE and other fraternal organisations will participate in the function. All are requested to grace the occasion with their presence.


M. Krishnan
Secretary General
NFPE

BE PREPARED..... ORGANISE FOR DECEMBER PARLIAMENT MARCH

ENSURE MASS SCALE PARTICIPATION IN THE
2013 DECEMBER 12TH PARLIAMENT MARCH

Dear Comrades,

Intensive campaign and preparations are in full swing all over the country for making the 2013 December 12th Parliament March organized by all the Central Trade Unions an unforgettable event in the Trade Union history of our country. The rally is organized as a continuation of the united struggle of the working class of India against the neo-liberal policies of the Central Government.

Confederation of Central Government Employees and workers, being a class-oriented militant organisation of the Central Government Employees, has always been in the fore-front of all the struggles conducted against the neo-liberal globalization policies and had participated in all the strike actions including the 2013 February 20, 21st 48 hours strike. The 12th December 2013 mobilisation at Delhi must have to reflect the spirit and tempo of preparation for a bigger struggle in the days to come.

The National Secretariat of the Confederation calls upon the entirety of the Central Government employees to ensure massive participation in the 12thDecember 2013 Parliament March.

The C-O-Cs and affiliated organisations of Delhi, Himachal Pradesh, Haryana, Punjab, Rajasthan, Uttar Pradesh, Uttarakhad and Bihar are requested to make all out efforts to mobilize maximum Central Government employees in the Parliament March.

GDS PARLIAMENT MARCH ON 11.12.2013

All India Postal Employees Union – GDS (NFPE) and affiliate of Confederation will be organizing a massive Parliament March of Gramin Dak Sevaks on 11thDecember 2013 demanding inclusion of GDS under the purview of 7th CPC, Regularisation, Civil Servant Status, and other benefits at par with Departmental employees. All affiliates of the Confederation are also requested to ensure maximum support and cooperation for making the GDS Parliament March a grand success.

Comradely yours,
(M. Krishnan)
Secretary General
Mob: 09447068125

Election Commission allows launch of first all-woman Bharatiya Mahila Bank

The first all-woman Bharatiya Mahila Bank in the country open its branches in Delhi, Maharashtra and Madhya Pradesh.


          The Election Commission has allowed the launch of the first all-woman Bharatiya Mahila Bank in the country tomorrow but asked government not to open its branches in Delhi and Madhya Pradesh and neither do publicity of the bank in these poll-bound states.

          In a letter to the Finance Ministry, the Commission has said government should ensure that no publicity of the bank opening be done in poll-bound states.

          Prime Minister Manmohan Singh and UPA Chairperson Sonia Gandhi are expected to be present at the inaugural ceremony of the country's first all-woman bank in Mumbai tomorrow, coinciding with the birth anniversary of former Prime Minister Indira Gandhi. Finance Minister P Chidambaram will also attend.

          Government earlier wanted to launch the bank in Delhi but changed its plan in view of the Model Code of Conduct in force in the capital.

          With the inauguration of the bank, seven branches would become operational across the country, including in Kolkata, Chennai, Ahmedabad and Guwahati. The government proposed opening of the bank branches in Delhi and Indore also, which has been disallowed by the poll body till the end of polls.

          Headquartered in Delhi, the bank proposes to have 25 branches by March 31, 2014.

          The Finance Minister had announced the setting up of the all-woman bank in his Budget speech this year. The bank will be set up with an initial capital of Rs 1,000 crore.

          The Reserve Bank of India gave its in-principal approval for the Bharatiya Mahila Bank in June.

          Earlier this week, the government appointed Usha Ananthasubramanian as the bank's Chairperson and Managing Director.

          "Women are heads of many banks today, including two public sector banks, but there is no bank that exclusively serves women. Can we have a bank that lends mostly to women and women-run businesses, that supports women SHGs and women's livelihood, that employs predominantly women, and that addresses gender-related aspects of empowerment and financial inclusion? I think we can," Chidambaram had said.

Source : PTI