வாழ்வா சாவா போராட்டம்
நம் அஞ்சல் துறையின், அரசுத் துறை என்ற கட்டமைப்பு உடைக்கப்பட்டு, பொது மக்கள் சேவை அடியோடு ஒழிக்கப்பட்டு எதிர்காலம் BSNL போல CORPORATE மயமாக்கப்பட்டு , பன்னாட்டு நிறுவனங்களின் ஆளுகைக்கு கொண்டுவரப்பட உள்ள அநீதியை எதிர்த்துப் போராட, நம் வாழ்வாதாரம் காக்கப்பட நாம் அனைவரும் ஒட்டுமொத்தமாக திரண்டெழுந்து போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
இந்தப் பிரச்சினையை அடிமட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஊழியரின் பார்வைக்கும் உணர்வுக்கும் கொண்டு செல்ல வேண்டியது நம் அனைவரின் கடமை ஆகும். எனவே தமிழகம் முழுவதும் ஆங்காங்கு கோட்ட / கிளைகளில் உடனே JCA அமைத்திட வேண்டுகிறோம். வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டங்கள், உணவு இடைவேளை கூட்டங்கள், வாயிற் கூட்டங்கள் உடன் நடத்தி ஊழியர்கள் மத்தியில் இந்தப் பிரச்சினைகளை கொண்டு செல்ல வேண்டுகிறோம். ஆங்காங்கு உள்ள அனைத்து சங்கங்களின் மாநில/அகில இந்திய சங்க நிர்வாகிகளை அழைத்து கூட்டங்கள் நடத்திட வேண்டுகிறோம். மேலும் அனைத்து கோட்டங்களிலும் கிளைகளிலும் JCA மூலம் சுற்றறிக்கை வெளியிட வேண்டுகிறோம். எதிர்வரும் மே திங்கள் ஆறாம் தேதி முதல் நடைபெற உள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்தை நூற்றுக்கு நூறு முழுமையான வெற்றிகரமான வேலைநிறுத்தம் ஆக்கிட வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும் .
கோரிக்கைகள்
1. அஞ்சல் இலாக்கா சேவையை CORPORATION மற்றும் தனியார் மயமாக்காதே !
2. GDS ஊழியர்களை ஏழாவது ஊதியக் குழுவின் வரம்புக்குள் கொண்டுவந்து அவர்களுக்கு அரசு ஊழியர் அந்தஸ்து வழங்கு. அரசு ஊழியர்களுக்கு உண்டான அனைத்து சலுகைகளையும் மற்றும் விகிதாசார அடிப்படையில் ஊதியமும் எந்த வித பாகுபாடும் இன்றி வழங்கு.
3.காசுவல், பகுதி நேர, CONTINGENT ஊழியர்களை பணி நிரந்தரம் செய். அதற்கான வரம்பு காலத்தை நீக்கு.
4. 01.01.2014 முதல் GDS ஊழியர் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும், 100 % பஞ்சப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்து எல்லா வித பயன்களையும் அதன் மீது வழங்கி விடு .
5. 01.01.2014 முதல் 25% அடிப்படை ஊதியத்தை GDS உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் இடைக்கால நிவாரணமாக வழங்கி விடு.
6. புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய். 01.01.2004 க்குப் பின்னர் பணியில் அமர்ந்த ஊழியர்களுக்கும் அதற்கு முன்னர் உள்ளதுபோல சட்டபூர்வமான பாதுகாக்கப்பட்ட பென்ஷன் வழங்கி விடு.
7. கருணை அடிப்படையிலான பணி நியமனங்களில் உள்ள 5% கட்டுப்பாட்டை நீக்கு. பணியில் இறந்த அனைத்து ஊழியர்களின் வாரிசுகளுக்கும் வேலை கொடு.GDS ஊழியர்களுக்கு உள்ள குறைந்த பட்ச 50% புள்ளிகள் என்ற உத்திரவை உடனே நீக்கு .
8. MMS, GDS உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள காலியிடங்களை , நேரடி நியமனம், இலாக்கா பணிமூப்பு பதவி உயர்வு , தேர்வு முறை பதவி உயர்வு என்று எல்லா வழிகளிலும் தாமதமின்றி நிரப்பு. காலாவதியான MMS வாகனங்களை மாற்றி புதிய வாகனங்களை வழங்கு .
9. JCM இலாக்கா குழு ஊழியர் தரப்புக்கு அளித்த உடன்பாட்டின்படி கேடர் சீரமைப்புத் திட்டத்தை அஞ்சல் , RMS, MMS, கணக்குப் பிரிவு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உடனே அமல் படுத்து.
10. POSTMASTER GRADE ஊழியர்களுக்கு உண்டான பிரச்சினை தீர்த்து வை. IP, GR. B தேர்வு எழுதிட அனுமதி. பதவி உயர்வில் உள்ள சேவைக்கால இடைவெளியை GENERAL LINE ஊழியர்களுக்கு உள்ளது போல , அதற்கு சமமான பதவி உயர்வுகளில் வழங்கி விடு. அனைத்து PSS GR. B, PM GRADE III, PM GRADE II காலிடங்களையும் நிரப்பிடு. அதற்கு உண்டான தகுதி அடிப்படை பூர்த்தியாகாவிட்டால் அனைத்து காலியிடங்களையும் ADHOC PROMOTION அடிப்படையில் நிரப்பி விடு. POSTMASTER CADREக்கு ஒதுக்கப் பட்ட அனைத்து SENIOR POSTMASTER/CHIEF POSTMASTER பதவிகளையும் POSTMASTER CADRE ஊழியர்களைக் கொண்டு நிரப்பிடு . இதற்கான CIRCLE GRADATION LIST வெளியிடு.
11. SYSTEM ADMINISTRATOR களுக்கு முழுமையான ROAD MILEAGE ALLOWANCE வழங்கி விடு. அவர்களின் பணித்தன்மை மற்றும் பணி நேரத்தை வரையறை செய். SYSTEM ADMINISTRATOR களுக்கு தனியான கேடர் உருவாக்கு.
12. நிர்வாக மற்றும் RMS அலுவலகங்களில் உள்ளது போல அஞ்சல் பகுதி காசாளர்களுக்கு CASH HANDLING ALLOWANCE வழங்கி விடு.
13. PO & RMS ACCOUNTANT களுக்கு வழங்கப்படும் SPECIAL ALLOWANCEஐ பதவி உயர்வுக்கான ஊதிய நிர்ணயக் கணக்கீட்டிற்கு எடுத்துக் கொள்.
14. I.T. MODERNISATION PROJECT செயல்படுத்துவதில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் உடனே தீர்த்து வை. உதாரணம் : COMPUTERISATION, CORE BANKING SOLUTION, CORE INSURANCE SOLUTION ETC. காலாவதியான கணினி, PRINTER உள்ளிட்ட கணினி பயன்பாட்டு சாதனங்களை புதிதாக உடனே மாற்றி வழங்கு. NETWORK மற்றும் BANDWIDTH அளவுகளை உயர்த்து. ஊழியர் விடுப்பு நாட்களில் மாற்று ஊழியருக்கு உண்டான USER CREDENTIAL பிரச்சினைகளை தீர்த்து வை. CBS, CIS செயல்பாட்டில் உள்ள குளறுபடிகளை முழுமையாக களைந்திடாமல் அவசர கதியில் MIGRATION செய்து, சேவைக் குறைபாட்டை ஏற்படுத்தி பொது மக்கள் பார்வையில் இலாக்கா பெயரை அசிங்கப் படுத்தாதே. CBS, CIS திட்ட அமலாக்கத்தில் ஊழியர்களுக்கு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட எல்லா உதவிகளையும் வழங்கு. SERVICE PROVIDER களை கட்டுப் படுத்தாமல் ஊழியர்களை கொடுமைப் படுத்தாதே. HEAD POSTMASTER களுக்கு உயர் நிதி செலவீட்டு அதிகாரத்தை வழங்கு.
15. மாதாந்திரப் பேட்டிகள், இரு மாத, நான்கு மாத பேட்டிகள், JCM கூட்டங்கள், WELFARE BOARD, SPORTS BOARD MEETING ஆகியவற்றை முறையான கால அளவீட்டில் நடத்து. இதற்குண்டான உறுப்பினர்களை அங்கீகரிப்பட்ட சங்கங்களின் பிரதிநிதிகளைக் கொண்டு உடன் நிரப்பு .
16. GDS ஊழியர்களுக்கு முழுமையான ஊதியப்பாதுகாப்பு (FULL PROTECTION OF TRCA)வழங்கி விடு. ஊதியக் குறைப்பு செய்யாதே. MEDICAL REIMBURSEMENT திட்டத்தை GDS ஊழியர்களுக்கும் அமல்படுத்து. CASH HANDLING NORMS மாற்றி அமை.
17. அனைத்து C.O., R.O., DPLI OFFICE, KOLKATA அலுவலகங்களும் CORE INSURANCE SOLUTIONக்கு CIRCLE PROCESSING CENTRE ஆக பணி செய்ய உத்திரவு வழங்கு. PLI/ RPLI சேவையை மேம்படுத்து. 615 எழுத்தர் பதவிகளை C.O. PLI மற்றும் APS PLI CELLபகுதியில் இருந்து DIVERSION செய்ய வழங்கப் பட்ட உத்திரவை ரத்து செய். நிர்வாக அலுவலகங்களில் உள்ள ஊழியர்களை DECENTRALISATION பெயரால் கொடுமைக்கு ஆளாக்காதே.
18. இலாக்கா கட்டிடங்கள், ஊழியர் குடியிருப்புகள், RMS ஒய்வு இடங்கள் போன்றவற்றை புதிதாக கட்டுவதற்கும், பழுது பார்ப்பதற்கும், பராமரிப்பு பணிகள் செய்வதற்கும் உரிய நிதி உடனே வழங்கு.
Thursday, April 30, 2015
V.C.Premlatha