Wednesday, 24 September 2014
சேலம் மேற்கு கோட்டத்தில் முழு நேர தர்ணா - நிழற்ப்படங்கள்
Wednesday, September 24, 2014
V.C.Premlatha
Tuesday, 23 September 2014
Monday, 22 September 2014
மத்திய JCA – வின் 6 கட்ட போராட்ட அறைகூவலின் இரண்டாம் கட்ட போராட்டம்
Monday, September 22, 2014
V.C.Premlatha
NFPE JCA (கூட்டு போராட்டக்குழு) NFPE
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்
அஞ்சல் மூன்று,
அஞ்சல் நான்கு
மற்றும் புறநிலை ஊழியர்கள் சங்கங்கள்,
சேலம் மேற்கு கோட்டம், சூரமங்கலம் 636005
தோழர்களே! தோழியர்களே!! வணக்கம்.
மத்திய JCA – வின் 6 கட்ட போராட்ட அறைகூவலின்
இரண்டாம் கட்ட போராட்டம்
நாள்: 24.09.2014
|
- 100 சதவீதம் அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன்
- இணைக்கவேண்டும்.
- 01.01.2014 முதல் இடைக்கால நிவாரணம் வழங்கவேண்டும்.
- 7-வது ஊதியக் குழுவின் Terms of Reference – ல் GDS ஊழியர்களின்
- ஊதிய மாற்றத்தையும் சேர்த்து அவர்களை இலாக்காஊழியர்களாக அங்கீகரித்து அனைத்து பயன்களையும்
- வழங்கவேண்டும்.
- புதிய பென்ஷன் திட்டத்தை கைவிடவேண்டும்.
- 01.01.2014 முதல் 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள்
- அமுல்படுத்தப்படவேண்டும் போன்ற
- 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
நமது மத்திய JCA – வின் 6 கட்ட போராட்ட அறைகூவலின்
படி 24.09.2014அன்று இரண்டாம் கட்ட போராட்டமாக சேலம் மேற்கு
கோட்டகண்காணிப்பாளர் அலுவலகம் முன் தர்ணா
போராட்டம் நடைபெறவுள்ளது. அதுசமயம்
பெருவாரியான தோழர்களும், தோழியர்களும் கலந்துக்கொண்டு தர்ணா
போராட்டத்தை வெற்றியடையச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஒன்றுபடுவோம்! போராடுவோம்! வெற்றிபெறுவோம்!!
வெற்றி கிட்டும் வரை போராடுவோம்!
இறுதி வெற்றி நமதே!
போராட்ட வாழ்த்துக்களுடன்
NFPE
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்
அஞ்சல் மூன்று,
அஞ்சல் நான்கு
மற்றும் புறநிலை ஊழியர்கள் சங்கங்கள்,
சேலம் மேற்கு கோட்டம், சூரமங்கலம் 636005
NFPE RMS மூன்றாம் பிரிவின் மாநில மாநாடு
Monday, September 22, 2014
V.C.Premlatha
NFPE RMS மூன்றாம் பிரிவின் மாநில மாநாடு கோயம்புத்தூர் நகரில்
19.09.2014 முதல் 21.09.2014 வரைநடைபெற்றது .
மாநாட்டில் மாநில தலைவராக தோழர் K.R.கணேசன் அவர்களும்
செயலராக நண்பர் தோழர் R .ரமேஷ் அவர்களும்
பொருளாளராக தோழர் வீரமணிஅவர்களும் தேர்ந்தெடுக்க பட்டார்கள்
அனைவருக்கும் சேலம் மேற்கு கோட்ட
சங்கம் சார்பாக வாழ்த்துக்கள்
Saturday, 20 September 2014
குரூப் B அதிகாரிகள் 12 பேர் நம் தமிழ் மாநிலத்திற்கு இடமாறுதல் பெறுகிறார்கள் .
Saturday, September 20, 2014
V.C.Premlatha
Regularisation of irregularly opened MIS accounts in the multiples of 1000/- instead of Rs.1500/-
Saturday, September 20, 2014
V.C.Premlatha
UPDATE ON GDS COURT CASE
Saturday, September 20, 2014
V.C.Premlatha
NEXT HEARING ON 08.02.2015. GDS CASE CAME UP FOR
HEARING IN DELHI HIGH COURT ON 19.09.2014. COURT
ADJOURNED THE CASE FOR NEXT HEARING ON 08.02.2015.
GOVT. FILED COUNTER AFFIDAVIT LATE. REJOINDER
AFFIDAVIT WILL BE FILED BY NFPE & AIPEU- GDS (NFPE)
SHORTLY. WE HOPE THAT ARGUMENT WILL COMMENCE IN THE
NEXT SITTING.
Friday, 19 September 2014
செப்டம்பர் 19 தியாகிகள் தினம்
Friday, September 19, 2014
V.C.Premlatha
1960 வேலை நிறுத்தத்திற்கு பிறகு மீண்டும் மத்திய அரசு ஊழியர்கள் 19.09.1968 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்தனர் .
*தேவைக்கேற்ற குறைந்தபட்ச ஊதியம்
* விலைவாசி உயர்வு கேற்ப முழு நிவாரணம்
* பஞ்சப்படியை அடிப்படை சம்பளத்தோடு இணைத்தல்
உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளுக்காக போராட்டம் நடைபெற்றது
இந்த போராட்டத்தின் போது மத்திய அரசு கொண்டுவந்த அடக்குமுறை சட்டங்கள் இதோ !
1.காசுவல் லீவ் .மெடிக்கல் லீவ் ஏற்று கொள்ள பட மாட்டது .
2.செப்டம்பர் 19 அன்று வேலைக்கு வராத ஊழியர்களின் EL பறிக்கப்படும் .
3.செப்டம்பர் 19 அன்று வேலைக்கு வராத ஊழியர்களின் சேவை துண்டிக்க படும்
போன்ற அடக்கு முறைகளை தாண்டி போராடிய தோழர்கள் மீது மத்திய அரசு பல்வேறு தாக்குதல்களை தொடுத்தது .
துப்பாக்கி சூட்டில் 9 தோழர்கள் மாய்ந்தனர் .10000க்கு மேலானோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர் .3000பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர் .8000 பேர் கைது செய்ய பட்டனர்
இது போன்ற தியாகிகள் செய்த தியாகங்களை நாம் நினைவு கூறுவோம்
---------------SALEM WEST DIVISION P3,P4 & GDS(NFPE)--------------------------------
















.gif)




