Wednesday, 16 October 2013
GDS COMPASSIONATE APPOINTMENT - CLARIFICATION - ISSUED BY DIRECTORATE
Wednesday, October 16, 2013
V.C.Premlatha
Wednesday, October 16, 2013
V.C.Premlatha
PHOTOS OF WESTERN REGION D.S. MEET AND TRADE UNION STUDY CAMP HELD AT KOLATHUR/ METTUR
Tuesday, 15 October 2013
Tuesday, October 15, 2013
V.C.Premlatha
FELICITATION MEETING AT SALEM WEST DN ON 29.09.2013
சேலம் மேற்கு அஞ்சல் நான்கு கோட்டச் சங்கத்தின் தலைவர்
தோழர். I. பாலகிருஷ்ணன் அவர்களின் அரசுப் பணி நிறைவுப் பாராட்டு விழா கடந்த 29.09.2013 அன்று சேலம் நகரில் நடைபெற்றது .
அந்த விழாவில்
நமது முன்னாள் பொதுச் செயலர் தோழர் KVS, மற்றும் தமிழக அஞ்சல் மூன்று ,
அஞ்சல் நான்கு , GDS சங்கங்களின் மாநிலச் செயலர்களான தோழர். JR, தோழர்.V.
ராஜேந்திரன், தோழர். R. தனராஜ்,
மண்டலச்
செயலர்களான தோழர். C. சஞ்சீவி, தோழர். R. குமார், தோழர். மகாலிங்கம்,
அஞ்சல் நான்கு கோட்டச் செயலர் தோழர். R. பிரகாஷ் , கோட்ட இந்நாள் தலைவர்
தோழர் A. முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட காட்சி.
Comments from a viewer Sekar Chellappan நீண்ட
காலத்திற்குப் பிறகு அஞ்சல் மூன்று , அஞ்சல்
நான்கு , GDS மாநிலச் செயலர்கள், மாநிலச் சங்க
நிர்வாகிகள் ஒரு சேர கலந்துகொண்டு ஒரே
மேடையில் தோன்றியது எனக்கு மிக்க
மகிழ்ச்சியை தருகிறது. இந்த ஒற்றுமை கண்ணின்
மணி போல் காத்து போற்றி பாதுகாக்கப்பட
வேண்டும்
Saturday, 12 October 2013
STAY OBTAINED AGAINST ABOLITION OF POSTMAN POSTS IN SIVAGANGA DIVISION ALSO.
Saturday, October 12, 2013
V.C.Premlatha
அன்புத் தோழர்களே ! வணக்கம் !
ஏற்கனவே தாம்பரம் மற்றும் பாண்டிச்சேரி கோட்டங்களில் தபால்காரர்கள் மற்றும் MTS பதவிகளை ஒழிக்கக் கூடாது என்பதற்கான தடை ஆணை சென்னை மத்திய தீர்ப்பாயத்தில் பெற்ற உத்திரவை இந்த வலைத்தளத்தில் பிரசுரித்திருந்தோம்.
தற்போது சிவகங்கா கோட்டத்திலும் அவ்வாறு தபால்காரர் பதவிகளை ஒழிக்கக் கூடாது என்பதற்கான தடை ஆணை பெறப் பட்டுள்ளது . அதன் நகலை கீழே பார்க்கவும். பாதிக்கப் பட்ட தபால் காரர் மற்றும் GDS தோழர்களுக்கு தொடர்ந்து நமது தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கம் உதவி வருகிறது .
Friday, 11 October 2013
7th PAY COMMISSION DATE : 7th Pay Commission Date for implementation
Friday, October 11, 2013
V.C.Premlatha
Till this moment, the oral announcement only made by the Finance Minister to constitute 7th CPC for Central Government employees. There is no further action to constitute the committee for 7th CPC and we cannot say anything about the members of the committee and when it will be constituted.
Thee is no authentic information about the date to constitute the committee for preparing recommendations for 7th CPC. However, the committee will take maximum of 24 months to submit their recommendation report to Indian Government. The implementation of the 7th CPC is likely to be implemented from 1st January, 2016 to all Central government employees.
Not only the Central government employees, all government servants including their family members are keenly watching the news about 7th Central Pay Commission, because the same procedure / recommendations of Central Pay Commission are followed by state government to their employees.
Revision of pay has been implemented by the government once in ten years through the pay commissions and an employee can get a maximum of three pay hike in entire service. So, it is very excited to know the details of modifications in all the respect of pay.
In the view of above scenario, so many questions and doubts are raising among the Central government employees…
The questions and doubts are given below for your information…
1. When will constitute the committee for 7th CPC..?
2. Who are all will be as chairperson and members of the committee..?
3. Minimum pay scale in 7th CPC (7000 in 6th CPC)
4. Multiplication factor in 7th CPC (In 6th CPC 1.86)
5. Is ‘Grade Pay’ structure will continue in 7th CPC also..!
6. Percentage of Increment will be fixed as 10%..!
7. ACP – MACP – what will be next..?
8. ‘Tuition Fee’ then ‘Children Education Allowance’ and next…?
9. Any major changes in LTC Rules
10. Voluntary Retirement Scheme will be announced..?
11. Rectification of anomalies arising in implementation of 6th CPC
12. Any changes in ‘Fixation of Pay’on promotion
13. Rates of HRA (now getting 30%, 20% and 10%)
14. Expectations more on the calculation of Dearness allowance with AICPIN
15. About interest free and bearing advances
16. Minimum Pension (Now Rs.3500)
17. Any ‘Women employees welfare schemes’ (like CCL)
18. Travelling allowance and Daily allowance rules and rates
19. Weightage for promotion
21. Rates of Transport allowance (Now Rs.400, 600, 800, 1600 and 3200 + DA)
22. Modification in Qualifying Service for pension
23. Additional Pension scheme
Readers are requested to send their comments and suggestions on this post.
click the below link to download as pdf : 7th PAY COMMISSION DATE
Source : www.7thpaycommissionnews.in
SC DIRECTS CENTRE, STATES TO RESERVE 3% GOVERNMENT JOBS FOR DISABLED PERSONS.
Friday, October 11, 2013
V.C.Premlatha
The Supreme Court on Tuesday directed the Centre and all state governments to provide three per cent job reservation to disabled persons in all their departments, companies and institutions.
A bench headed by Chief Justice P Sathasivam also clarified that the principle of not exceeding more than 50 per cent reservation would not be applicable while granting quota for disabled persons.
The apex court directed the authorities to compile the number of vacancies in all their departments to give jobs to disabled persons under three per cent reserved quota within three months.
The bench said it is an “alarming reality” that disabled persons are not getting jobs because of various social barriers forcing them to live life in poverty and negligence.
It said the government has “categorical obligation” to protect the right of disabled persons and passed a slew of directions for providing jobs to them.
Posted by NFPE
ராஜ்ய சபா முறையீட்டுக் குழுவுக்கு GDS ஊழியர் பிரச்சினை குறித்து பரிசீலிக்கஅகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநிலங்கள் அவை உறுப்பினரும் , அதன் மாநிலங்களவை கொறடாவும், அஞ்சல் வாரிய ஆலோசனைக்குழு உறுப்பினரும், திருமிகு . நா. பாலகங்காஅவர்களிடம் கோரிக்கை மனு
Friday, October 11, 2013
V.C.Premlatha
ராஜ்ய சபா முறையீட்டுக் குழுவுக்கு GDS ஊழியர் பிரச்சினை குறித்து பரிசீலிக்க கோரிக்கை மனு .
இந்த மனு மீது RAJYA SABHA PETITION COMMITTEE பரிசீலனை மற்றும் உரிய விசாரணை செய்து அதன் பரிந்துரைகளை பிரதம அமைச்சருக்கு அளித்திட அதிகாரம் உள்ளது என்பதையும் அதன் மீது பிரதம அமைச்சர் அமைச்சரவைக் குழுவுக்கு முடிவுகளை தெரிவிக்க வேண்டியது அரசியல் சாசன விதி ஆகும் என்பதையும் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
09.10.2013 அன்று காலை சுமார் 12.00 மணியளவில் தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் சார்பில் அதன் மாநிலச் செயலர் தோழர். J.R. அவர்களும் மாநிலச் சங்கத்தின் நிதிச் செயலரும் , அகில இந்திய சங்கத்தின் உதவிச் செயலருமான தோழர். A. வீரமணி அவர்களும் மற்றும் தமிழ் மாநில AIPEU GDS NFPE சங்கத்தின் மாநிலச் செயலரும், அதன் அகில இந்திய துணைப் பொதுச் செயலருமான தோழர். R. தனராஜ் அவர்களும்
அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநிலங்கள் அவை உறுப்பினரும் , அதன் மாநிலங்களவை கொறடாவும், அஞ்சல் வாரிய ஆலோசனைக்குழு உறுப்பினரும், அதன் வட சென்னை (தெற்கு ) மாவட்டச் செயலருமான
திருமிகு . நா. பாலகங்கா
அவர்களை அவரது எழும்பூர் இல்லத்தில் GDS ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்தும் , அவர்களை இலாக்கா ஊழியர்கள் ஆக்கிட உள்ள வழிமுறைகள் குறித்தும் அதன் சட்ட ரீதியான விபரங்கள் குறித்தும் , ஏழாவது ஊதியக் குழுவே அவர்களது ஊதிய மற்றும் பணித்தன்மைகளை பரிசீலித்திட வேண்டியும் இந்திய நாட்டின் மாநிலங்களவை தலைவரிடம் அளிப்பதற்கான - PETITION COMMITTEE க்கான - (RAJYA SABHA PETITION COMMITTEE) மனுவினை அளித்தார்கள் . அப்போது எடுக்கப் பட்ட புகைப்படத்தின் நகலையும் , அந்த மனுவுக்கான COVERING LETTER ஐயும் கீழே பார்க்கவும்.
மனுவின் நகல் அதிக பக்கங்கள் கொண்டதால் தனியே பிரசுரிக்கப் படும்.
புகைப் படம் இடமிருந்து வலமாக :-
திருமிகு. நா. பாலகங்கா, தோழர். J.R., தோழர். A. வீரமணி,
தோழர். R. தனராஜ் .
PROMOTION AND POSTINGS IN PSS GR. 'B' CADRE TO 156 OFFICIERS
Friday, October 11, 2013
V.C.Premlatha
THE DIRECTORATE TODAY RELEASED THE PROMOTION AND POSTING LIST FOR
156 ASPOs THROUGH OUT THE COUNTRY. PLEASE CLICK THE LINK BELOW TO SEE THE LIST :-
http://www.indiapost.gov.in/DOP/Pdf/Postings/9_33_2013_SPGdtd10oct2013.pdf
http://www.indiapost.gov.in/DOP/Pdf/Postings/9_33_2013_SPGdtd10oct2013.pdf
MEETING WITH PMG, CCR , APMG (STAFF) , APMG ( RECTT) TODAY BY OUR CIRCLE UNION
Friday, October 11, 2013
V.C.Premlatha
அன்புத் தோழர்களே ! வணக்கம் !
இன்று (09.10.2013) நமது மாநில மற்றும் சென்னை பெரு நகர மண்டல அதிகாரிகளுடன் காலை 12.30 முதல் மதியம் 03.00 மணி வரையான காலத்தில், நமது மாநிலச் சங்க நிர்வாகிகளின் INFORMAL சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பில் பல்வேறு ஊழியர் பிரச்சினைகள் விவாதிக்கப் பட்டன. பல்வேறு சந்திப்புக்கள் இதற்கு முன்னர் நடைபெற்றாலும் சில முக்கிய பிரச்சினைகள் குறித்து இன்று விவாதிக்கப்பட்டதால் அதன் விபரம் கீழே தருகிறோம் :-
சந்திப்பில் கலந்து கொண்ட நிர்வாகிகள் :-
1. தோழர். J. ஸ்ரீ வெங்கடேஷ், மாநிலத் தலைவர்.
2. " J. இராமமூர்த்தி , மாநிலச் செயலர்.
3. " A. வீரமணி, மாநில நிதிச் செயலர்.
4. " R. தனராஜ், GDS NFPE மாநிலச் செயலர்.
சென்னை பெருநகர மண்டல PMG அவர்களுடன் சந்திப்பு :-
1. சென்னை வடகோட்டத்தின் தேங்கிக் கிடக்கும் பிரச்சினைகள் மீதான JCA சார்பான வேலை நிறுத்த அறிவிப்பு மற்றும் கோட்ட அதிகாரியின் அத்து மீறிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்து கடிதம் அளிக்கப் பட்டது.
இதன் மீது உடன் நடவடிக்க எடுக்க PMG, CCR அவர்கள் உறுதி அளித் தார்கள்.
2. செங்கல்பட்டு கோட்டத்தில் இலாக்கா விதி மீறி அச்சரப்பாக்கம் அலுவலகத்திற்கு மாற்றப் பட்ட தோழியர். அமுதா மாறுதல் ரத்து செய்யப் படவேண்டும் என்று உரிய ஆவணங்களுடன் கடிதம் அளித்து விவாதிக்கப் பட்டது .
அவர் ஏற்கனவே பணியாற்றிய அலுவலகத்திற்கு மீண்டும் பணியமர்த்திட PMG, CCR அவர்களால் உறுதி அளிக்கப் பட்டது .
3.தவறு செய்யாத திருவண்ணாமலை தபால்காரர் தோழர். கருணா கரனின் மீது அளிக்கப் பட்ட இடை நீக்க உத்திரவு குறித்து அவரின் மேல் முறையீடு விரைவில் பரிசீலித்து ஆவன செய்யப்படும் என்று உறுதி அளிக்கப் பட்டது.
4. CHENNAI GPO விலிருந்து நீண்ட காலமாக DEPUTATION இல் வெளியே அனுப்பப் பட்டுள்ள ஊழியர்களை திரும்பப் பெற வலியுறுத்தப் பட்டு கடிதம் அளிக்கப் பட்டது.
இது குறித்து ஆவன நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலில் தென் சென்னை கோட்டத்திற்கு அனுப்பப் பட்டுள்ள ஊழியர் திரும்பப் பெற உடன் பரிசீலிக்கப் படும் என்றும் உறுதி அளிக்கப் பட்டது.
5. சென்னை பெரு நகர மண்டலத்தில் உள்ள கோட்டங்களில் மிகு பற்றாக்குறையாக உள்ள REPORT SHEETS அனைத்து கோட்டங்களுக்கும் பெற்றிட உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் , MPCM BAR CODE STICKERS குறித்த புகார் உடன் கவனித்து நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் உறுதி அளிக்கப் பட்டது.
OAP MO பட்டுவாடாவில் BAKSHEESH பெரும் ஒரு சில தபால்கார்கள் குறித்து புகார்கள் வருவதாகவும் இதனால் இலாக்காவின் பெயருக்கு களங்கம் ஏற்படுவதாகவும் இது குறித்து ஊழியர் சங்கங்கள் உரிய அறிவுரை வழங்கிட வேண்டும் என்றும் நமது PMG அவர்கள் வேண்டுகோள் அளித்தார்கள்.
நிச்சயம் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஊழியர் சங்கங்களின் கடமை என்றும், இதன் மீது உரிய நடவடிக்கை ஊழியர் அமைப்புகள் மூலம் எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தோம். அதே நேரத்தில் தவறு செய்யும் திருப்பத்தூர் கோட்ட கண்காணிப்பாளர் போன்றவர்கள் மீது நிர்வாகத்தின் நடவடிக்கையும் தேவை என்றும் ஆனால் அப்படி நடப்பதில்லை என்பதையும் நாம் சுட்டிக் காட்டி வலியுறுத்தினோம். அதிகாரிக்கு ஒரு பார்வை , தொழிலாளிக்கு ஒரு பார்வை என்பது களையப் பட வேண்டும் என்பதை நம் கருத்தாக பதிவு செய்தோம்.
நியாயமான ஊழியர் பிரச்சினைகளை சரியாக அணுகி தீர்த்திட உறுதி அளித்த PMG, CCR அவர்களுக்கு நம் நன்றியைத் தெரிவித்தோம்.
APMG (STAFF) , C.O. அவர்களுடன் சந்திப்பு :-
1. நீண்ட காலமாக தேங்கிக் கிடக்கும் LSG பதவி உயர்வு உடன் வழங்கிட
உரிய நடவடிக்கை வலியுறுத்தப் பட்டது .
இது குறித்து ஆவன நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாகவும் தற்போதைய நடப்பில் உள்ள இலாக்கா விதிப் படி DATE OF CONFIRMATION அடிப்படையில் மட்டுமே பணி மூப்பு பட்டியல் இறுதி செய்யப் பட உள்ளது என்றும் ,மேலும் PROMOTIVE க்கும் DIRECT RECTT ஊழியருக்கும் இடையிலான SENIORITY பிரச்சினை அந்தந்த ஆண்டு INTER-SE SENIORITY என்பது நேரடி நியமன ஊழியரின் CONFIRMATION வைத்தே தீர்மானிக்கப் படும் என்றும் தெரிவித்தார். இது தவறு என்றும் அதற்கான விதி தெளிவாக இல்லை என்றும், PROMOTIVE ஊழியர் ONE TIME CONFIRMATION பெற்றாலே போதும் என்று விதி இருக்கும் போது , அந்த அந்த ஆண்டு DR ஊழியரின் CONFIRMATION உடன் இதை இணைத்திடலாமா என்பதை விளக்கிட உரிய ஆணை இல்லை என்பதையும் நாம் பதிவு செய்தோம். இது குறித்து CPMG அவர்களுடன் விவாதித்து இறுதி செய்வதாக உறுதி அளித்தார்கள்..
2. அண்ணா சாலை அஞ்சலக ஊழியர்களின் பணி மூப்பு பட்டியல் தவறாக கணிக்கப் பட்டுள்ளதாக நாம் அளித்த புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாகவும் விரைவில் இது தீர்க்கப் படும் என்றும் உறுதி அளித்தார்கள்.
APMG(RECTT), C.O. உடன் சந்திப்பு :-
1. நீண்ட காலமாக CMC நிறுவனத்தால் கால தாமதப் படுத்தப் படும் நேரடி எழுத்தர் தேர்வு முடிவுகள் குறித்து விவாதித்தோம். இந்த முடிவுகள் வெளியானால் உடனடியாக தமிழகத்திற்கு 616 நேரடி எழுத்தர்களும் 240 RESIDUAL காலியிடங்களுக்கான GDS மூலமான எழுத்தர் பதவிகளும் கிடைக்கும். இதன் மூலம் ஆட்பற்றாக்குறை ஓரளவு சரி செய்யப் படும் என்றும் தெரிவித்தோம்.
2. அதே போல MTS தேர்வு முடிவுகளும், தபால் காரர் தேர்வு பிரச்சினைகளும் தீர்த்திட நடவடிக்கை வேண்டினோம்.
எழுத்தர் தேர்வு விடைத்தாள் CMC இலிருந்து பெற்றிட உரிய அதிகாரிகள் அனுப்பப் பட்டுள்ளதாகவும் இந்த முடிவுகள் விரைவில் அறிவிக்கப் படும் என்றும் தெரிவித்தார்.
அதே போல இன்னும் ஓரிரு வாரத்தில் MTS மற்றும் தபால்காரர் தேர்வு பிரச்சினைகள் இறுதி செய்யப் படும் என்றும் தெரிவித்தார்.
3. நமது மாநிலச் சங்கத்தால் ஏற்கனவே தேர்வு விடை குளறுபடிகளால் பாதிக்கப் பட்ட மயிலாடுதுறை கோட்ட GDS ஊழியர் தோழர் முத்துராமன் பிரச்சினை குறித்து நாம் அளித்த கடிதத்திற்கு நடவடிக்கை வேண்டினோம். அது குறித்து இறுதி செய்யப் பட்டதாகவும் அந்த கோப்பு அதன் கோட்ட அதிகாரிக்கு உரிய நடவடிக்கைக்கு அனுப்பப் பட்ட தாகவும் நமக்கு தெரிவிக்கப் பட்டது.
மேலும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து சென்னை பெருநகர மண்டல AD STAFF அவர்களிடம் விவாதிக்கப் பட்டது . அவரும் அந்த பிரச்சினைகள் மீது DPS மற்றும் PMG உள்ளிட்ட அதிகாரிகளின் பார்வைக்கு உடன் பிரச்சினைகளை கொண்டு செல்வதாக உறுதி அளித்தார்.
தேங்கிக் கிடக்கும் ஊழியர் பிரச்சினைகள் மீது அவ்வப்போது நாம் அளிக்கும் கடிதத்தின் மீது விவாதித்து முடிவுகள் தெரிவிக்கும் மாநில, மற்றும் சென்னை பெருநகர மண்டல அதிகாரிகளுக்கு நம் மாநிலச் சங்கத்தின் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
Posted by All India Postal Employees Union – Group ‘C’ Tamilnadu Circle at 12:52 AM No comments: Links to this post
REPLY RECEIVED TO OUR CIRCLE UNION FROM PMG, CCR ON PARK TOWN BUILDING ISSUE
சென்னை பூங்கா நகர் அஞ்சலக கட்டிடப் பிரச்சினையில் உடன் ஊழியர் சங்கத்துடன் விவாதித்து உரிய நடவடிக்கை எடுத்த சென்னை பெரு நகர மண்டல PMG திரு மெர்வின் அலெக்சாண்டர் அவர்களுக்கும் DPS, CCR திரு. J.T. வெங்கடேஸ்வரலு அவர்களுக்கும் நம் மாநிலச் சங்கத்தின் மனமார்ந்த நன்றி.
All india Postal Employees Union – Group ‘C’ Tamilnadu Circle
















.jpg)
