Welcome to NFPE Blog

Hi Friends, Welcome to National Federation Of Postal Employees, Group-C

Salem West Division

***R.Sundaram***

Wednesday, 3 July 2013

GDS ஊழியர் கோரிக்கை அனைத்து மத்திய அரசு ஊழியர் கோரிக்கை ஆனது !

அன்புத் தோழர்களே ! வணக்கம் !  கடந்த  பல காலங்களில்  GDS  ஊழியர்களுடைய கோரிக்கைகளுக்காக  அஞ்சல் துறையில் நாம் மட்டுமே தனியாக போராடி வந்தோம் . நம்முடைய NFPE  சம்மேளனத்திலும் , மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்திலும்   ஒற்றுமை ஏற்பட்டு, அதன் தொடர் விளைவாக நம்முடைய  தலைவர்கள்  தோழர் KR , KVS  மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் பொறுப்புக்கு வந்த பின்னர் மிகப் பெரும் மாற்றங்களை நாம் கண்டுவருகிறோம் 

கடந்த 12.12.2012 ஒருநாள் வேலை நிறுத்தத்தில்  மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மூலம்  அனைத்து மத்திய அரசு ஊழியர் சங்கங்களும் ஒரு சேர  GDS  ஊழியர்களின்  கோரிக்கைகளையும் முன்வைத்து  வேலை நிறுத்தத்திற்கான கோரிக்கை மனுவினை அரசுக்கு அளித்ததை நாம் மறந்திருக்க முடியாது . INCOME TAX, CUSTOMS, CENTRAL EXCISE, CENTRAL WATER BOARD, ATOMIC RESEARCH CENTRE, CENTRAL PWD,  AUDIT  AND ACCOUNTS உள்ளிட்ட   36  மத்திய அரசு துறைகளின் ஊழியர் சங்கங்கள்  GDS  ஊழியருக்கான  கோரிக்கைகளை  தங்கள் மனுவில் சேர்த்து  அளித்தது  , GDS  ஊழியர்களின் பிரச்சினைகளை வெளி  உலகத்துக்கு  கொண்டுவர  வழி வகுத்தது . 

தற்போது  அதனையும் தாண்டி  ரயில்வே துறையின்  மிகப் பெரிய சங்கமான AIRF , பாதுகாப்பு துறையின்  மிகப் பெரிய சங்கமான AIDEF  ஆகியவற்றையும் உள்ளடக்கி  போராட்ட திட்டம் வகுக்கப் பட்டுள்ளது . அந்த ஒட்டு மொத்த போராட்ட வியூகத்தின் கோரிக்கைகளில் GDS  ஊழியர்களின் கோரிக்கையும் சேர்க்கப் பட்டு , ஒரு சேர 36   லட்சம்  மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கையாக இன்று முடிவெடுக்கப் பட்டுள்ளது.  இது  நமக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும்.  


கடந்த 29/6/2013 அன்று டெல்லியில் AIRF தொழிற் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ரெயில்வே , பாதுகாப்பு துறை  மற்றும் மத்திய அரசு ஊழிய்ர் மகா சம்மேளனத்தின் தலைவர்கள் கூடி எடுத்த முடிவின் படி ஏழாவது ஊதியக்குழு அமைத்தல் , பஞ்சப்படியை அடிப்படை ஊதியத் துடன் இணைத்தல் புதிய பென்சன்  திட்டத்தை ரத்து செய்தல் , அஞ்சல் துறையில் பணியாற்றும் கிராமப் புற அஞ்சல் ஊழியர்களை நிரந்தம் செய்தல்  போன்ற முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து மத்திய அமைச்சரவை ச் செயலரிடம் கோரிடவும் , துறை சார்ந்த கோரிக்கைகளை அந்தந்த சங்கங்கள் சம்பந்தப்பட்ட துறைசெயலரிடம் தந்திடவும் , இது தொடர்பான மேல் நடவடிக்கை வருகிற ஆகஸ்ட் 2013 முதல் வாரத்தில் கூடி முடிவெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது . 

இது சம்பந்தமான செய்தியை கீழே பார்க்கவும்.


CONFEDERATION OF CENTRAL GOVERNMENT EMPLOYEES & WORKERS
(Central Head Quarters)

1ST FLOOR, NORTH AVENUE POST OFFICE BUILDING, NEW DELHI – 110001

                                                                                                                       
Dear Comrade,
            The representatives of AIRF, AIDEF, Confederation met at AIRF Office today under the Chairmanship of Com. Umraomal Purohit. President, AIRF. The following Comrades were present.
Com. U. M. Purrohit, President AIRF
Com. Shiv Gopal Mishra, General Secretary, AIRF
Com. S. N. Pathak, President AIDEF
Com. C. Srikumar General Secretary AIDEF
Com. J. S. Sharma, Org. Secretary: AIDEF
Com. S. K. Vyas, Advisor, Confederation.
Com. K. K. N. Kutty, President, Confederation.
Com. M. Krishnan, Secretary General, Confederation
Com. Virigu Bhattacharjee, Finance Secretary Confederation.
           
            The meeting decided to forge a Joint Council of Action to pursue the enclosed Charter of Common Demands of CGEs. Com. Umraomal Purohit President AIRF will be the Chairman and Com. Shiv Gopal Mishra will be its Convenor. The following shall be the members of the Council.

1.         Com. U.M. Purohit – AIRF
2.         Com. Shivgopal Mishra-AIRF
3.         To be nominated by AIRF
4.         Com. S.N. Pathak – AIDEF
5          Com. Sree Kumar –AIDEF
6.         To be nominated by AIDEF
7.         Com. S.K. Vyas – Confederation
8.         Com. KKN Kutty – Confederation
9.         Com. M. Krishnan- Confederation

The following demands were included in the Common Charter of demands:

1.    Set up the 7th CPC and frame its terms of reference after consultation with Staff Side.
2.    Merge DA with pay for all purposes.
3.    Scrap the New Contributory Pension Scheme.
4.    Regularize (a) Gramin Dak Sevaks of Postal Department.(b)Daily rated workers , (c) Contract Labourers:
5.    Remove 5% Ceiling on Compassionate appointments.
6.    Settle all 6th CPC anomalies raised in the National Anomaly Committee and implement the Arbitration Awards.
7.    Remove Ceiling of Rs. 3500 on computation of Bonus.

            All organizations may include the department –specific and other demands in Part B of the Charter and seek settlement thereof with the appropriate authorities.

            The meeting also decided to submit the Charter of demands to the Cabinet Secretary and seek negotiated settlement.

            The Council will meet again in the first week of August 2013 to decide upon the date of National Convention and other programmes of action in pursuance of the Charter of demands.

(M. Krishnan)
Secretary General

Tuesday, 2 July 2013

பாண்டிசேரி கோட்ட போராட்டம் தொடர்பான செய்திகள் -TALKS BETWEEN UNIONS AND PMG,CCR SUCCEEDED IN PONDICHERY ISSUE


Monday, July 1, 2013


பாண்டிச்சேரி கோட்டத்தில் 38 அம்சக்  கோரிக்கைகளை வலியுறுத்தி  NFPE /FNPO  அஞ்சல் மூன்று  மற்றும் அஞ்சல் நான்கு சங்கங்களின் சார்பில் அளிக்கப்பட வேலை நிறுத்த  அறிவிப்பை ஒட்டி  கடந்த 29.06.13 அன்று PMG , CCR  அவர்களால்  இன்று (01.07.2013)  மாலை  பேச்சு வார்த்தைக்கு மாநிலச் சங்கங்கள் அழைக்கப் பட்டிருந்தது குறித்து ஏற்கனவே அஞ்சல் மூன்று  வலைத் தளத்தில்தெரிவித்திருந்தோம்.  

அதன் படியே  மாலை 04.00 மணியளவில்  NFPE /FNPO  அஞ்சல் மூன்று  மற்றும் அஞ்சல் நான்கு  மாநிலச் செயலர்கள் ,  பாண்டிச்சேரி கோட்ட சங்கத்தின்  NFPE /FNPO  கோட்டச் சங்க நிர்வாகிகளுடன்  பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டோம். பேச்சு வார்த்தை கிட்டத்தட்ட 3 1/2 மணி நேரம் நடைபெற்றது . கோரிக்கை பட்டியலில் உள்ள ஒவ்வொரு பிரச்சினை குறித்தும் தனித்தனியே விவாதித்தோம்.  இறுதியாக சுமுகமான தீர்வு எட்டப்பட்டது .  பேச்சு வார்த்தையின் MINUTES  COPY அளித்திடக் கோரினோம் . அதன்படியே நாளை  RECORDED  MINUTES  அளித்திட PMG , CCR  அவர்கள் ஒப்புதல் அளித்தார்கள் . 

MINUTES  நகல் கிடைக்கப் பெற்றவுடன் வேலை நிறுத்தம் விலக்கிக்  கொள்வது குறித்த அறிவிப்பை   கலந்து பேசி  தெரிவிப்பதாக  அறிவித்தோம்.  பேச்சு வார்த்தையில்  சுமுகமான அணுகுமுறையை மேற்கொண்ட மதிப்பிற்குரிய  PMG ,CCR  திரு  மெர்வின்  அலெக்சாண்டர் அவர்களுக்கும் , DPS ,CCR  திரு . J .T . வெங்கடேஸ்வரலு  அவர்களுக்கும் நம் மாநிலச் சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி .  

பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டவர்கள் :-தோழர்  J.R., மாநிலச் செயலர் அஞ்சல் மூன்று (NFPE ),  தோழர்.G.P. முத்துகிருஷ்ணன் ,  மாநிலச் செயலர், அஞ்சல் மூன்று (FNPO ), தோழர். குணசேகரன்,  மாநிலச் செயலர் , P  4, FNPO  , தோழர் . சத்திய முர்த்தி , கோட்ட தலைவர், NFPE , அஞ்சல் மூன்று, தோழர். கலியமுர்த்தி , கோட்டச் செயலர் NFPE  அஞ்சல் மூன்று, தோழர். பன்னீர்செல்வம் , கோட்டச் செயலர் , NFPE  அஞ்சல் நான்கு , தோழர். தாமோதரன் , கோட்ட நிதிச் செயலர்,  NFPE , அஞ்சல் மூன்று, மற்றும் FNPO  வின் P 3, P 4, GDS  கோட்டச் செயலர்கள் உள்ளிட்ட 15 நிர்வாகிகள் . 

இதுவரை  நாம் அளித்த பல்வேறு ஊழியர் பிரச்சினைகளில்   உரிய கவனம் செலுத்தி ,  தொழிற் சங்கங்களை  மதித்து முறையாகப் பேச்சு வார்த்தை நடத்தி பல்வேறு பிரச்சினைகளை தீர்த்து வரும்  மதிப்பிற்குரிய PMG-CCR திரு. மெர்வின்  அலெக்சாண்டர்  அவர்களுக்கு  நம் மாநிலச் சங்கத்தின்  சிறப்பு  நன்றியினை தெரிவிக்கிறோம்.  

இந்த நிலை தொடரவேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.  நம்  ஊழியர் தரப்பு  ஒத்துழைப்பு என்றும் அவருக்கு அளிக்கப் படும் என்று உறுதி கூறுகிறோம். இதுபோல மற்றைய மண்டலங்களிலும் ஊழியர்கள்  குறைகள் பரிவுடனும், சட்டத்திற்கு உட்பட்ட வகையிலும்  தீர்க்கப் பட்டால்  நமது  மாநில அஞ்சல்  நிர்வாகம்  மக்கள் மத்தியில் நிச்சயம் நல்ல பெயர் பெறும்  என்று நாம் இந்த   வலைத்   தளத்தின் மூலம் அனைத்து பகுதியினருக்கும்  தெரிவிக்கிறோம். 

ஏனெனில் , இன்று நமது தொழிற் சங்கங்கள் வைத்த கோரிக்கைகளில் பெரும்பான்மையானவை, தனி நபர் பிரச்சினை குறித்து அல்ல. மக்கள் சேவையை மேம்படுத்துவது குறித்தே. இந்த கோரிக்கைகள்  எல்லாம்  சேவை மேம்பாடு அடையும் வகையில் நிர்வாகமாக தீர்க்க வேண்டிய பிரச்சினைகளே. 

அதிகாரிகள்  'HATE  POLICY'  யைக் கைவிட்டு  ஊழியர் நலன் நோக்கினால்  நிச்சயம்  அதற்கான முழு வெற்றி கிடைக்கும்  என்பதனையும்  நாம் தெரிவிக்கிறோம். அந்த திசை நோக்கி நாம் பயணிப்போம். மாநில /மண்டல மட்ட அதிகாரிகளையும்  அந்த வகையில் சிந்தித்திட வேண்டுகிறோம். 

MINUTES  COPY  நகல்  கிடைத்தவுடன் இந்த வலைத்தளத்தில் பிரசுரிக்கிறோம்.

போராட்ட பாதையை மேற்கொண்டு  உறுதியாக நின்ற பாண்டிச்சேரி கோட்டத்தின் அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு NFPE /FNPO  கோட்டச் சங்க நிர்வாகிகளுக்கும் , கோட்டத்தில் பணியாற்றும் இதர தோழிய /தோழர்களுக்கும் நம் மாநிலச் சங்கத்தின் வீர வாழ்த்துக்கள் !.

இது போன்ற  ஆரோக்கியமான நிகழ்வுகள் அனைத்து மண்டலங்களிலும்  தொடர்ந்திட, அனைத்து மட்ட அதிகாரிகளுக்கும்  நமது நல்லிணக்க  வெளிப்பாடாக  இதனை  தெரிவித்திட அனைத்து கோட்ட/ கிளைகளின் வலைத் தளங்களிலும் இதனை பிரசுரித்திட வேண்டுகிறோம்.

நன்றியுடன் 
மாநிலச் செயலர் , அஞ்சல் மூன்று , NFPE , தமிழ் மாநிலம் .

ஒற்றுமையுடன் போராட்ட களத்தில் நின்ற பாண்டிசேரி கோட்ட தோழர்,தோழியர்களுக்கும், முன்னின்று நடத்திய  அனைத்து பிரிவு தலைவர்களுக்கும் ,பிரச்சனையை சுமூகமாக முடித்து கொடுத்த   தோழர்  J.R., மாநிலச் செயலர் அஞ்சல் மூன்று (NFPE ),தோழர்.G.P. முத்துகிருஷ்ணன் ,  மாநிலச் செயலர், அஞ்சல் மூன்று (FNPO ), தோழர். குணசேகரன்,  மாநிலச் செயலர் , P 4, FNPO  ,ஆகியோருக்கும் சேலம் மேற்கு கோட்டம் தனது வீர வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறது.
பிரச்சினைகளை தீர்த்து வைத்த மதிப்பிற்குரிய PMG-CCR திரு. மெர்வின்  அலெக்சாண்டர்  அவர்களுக்கு  நம் சேலம் மேற்கு கோட்டச்  சங்கத்தின்  சிறப்பு  நன்றியினை தெரிவிக்கிறோம்.  

                                              வாழ்த்துக்களுடன் 

---- ------சி.சஞ்சீவி மண்டல செயலர் ,கோவை மேற்கு மண்டலம்...........

பற்றி எரிகிறது பாண்டிச்சேரி !

பற்றி எரிகிறது பாண்டிச்சேரி ! 
38 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 09.07.2013அன்று 
ஒரு நாள் வேலை நிறுத்தம் ! 
NFPE /FNPO  சங்கங்களின் அஞ்சல் மூன்று , 
அஞ்சல் நான்கு போர்க்கொடி !

பாண்டிச்சேரி கோட்டத்தில் தொழிலாளர் படும் அவதி குறித்தும் , முது நிலைகோட்ட கண்காணிப்பாளரின் அலாதி மெத்தனம் குறித்தும் கோட்ட 
NFPE /FNPO  சார்ந்த சங்கங்களின் சுற்றறிக்கைகளை கீழே பார்க்கவும் .

கடந்த 29.06.2013 அன்று  PMG, CCR (ADDL CHARGE - PMG MM) அவர்களிடம்  அஞ்சல் மூன்று மாநிலச் செயலரும் ,RMS  மூன்று  மாநிலச் செயலரும் , 
RMS  CB  DIVISION  இல் தீடீரென்று கிட்டத்தட்ட 85 OUTSIDER  களை    நீக்கியதால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து  விரிவான பேச்சு 
வார்த்தை  நடத்தினர் . 

(தற்போது பிரச்சினை  தீர்க்கப்பட்டு  கடந்த சனி இரவு முதல்  RESTORE
 செய்யப் பட்டு  பணிகள் சீரடைந்தன ) 

அப்போது அஞ்சல் மூன்றின்  மாநிலச்  செயலர் , பாண்டிச்சேரி கோட்டத்தின் வேலைநிறுத்தம் குறித்து  PMG அவர்களுடன் விவாதித்த போது  , PMG , CCR  அவர்கள்  இன்று மாலை (01.07.2013)   NFPE /FNPO  மாநிலச் செயலர்களுடனும்  கோட்டச் செயலர்களுடனும்  இது குறித்து  
பேச்சு வார்த்தை நடத்திட  நேரம் அளித்துள்ளார் . இது குறித்து  உடன் 
OFFICIAL COMMUNICATION ம் அளிக்கப் .பட்டது .  
RMS பிரச்சினை தீர்க்கப்  பட்டது போல  பாண்டிச்சேரி கோட்டப் பிரச்சினையும்  PMG , CCR  அவர்களின் தலையீட்டினால்  
தீர்த்து வைக்கப் படும் என்று  நம்புகிறோம் .




Monday, 1 July 2013

DA RAISE FROM JULY 2013 WILL BE ESTIMATED TO 90%

CENTRAL GOVERNMENT EMPLOYEES DA FROM JULY 2013 – ESTIMATION BASED ON ALL iNDIA CONSUMER PRICE INDEX AICPI-IW UP TO MAY 2013 - DA FOR CENTRAL GOVERNMENT EMPLOYEES FROM JULY 2013 WILL BE  estimated to 90%

AICPI-IW for the month of May 2013 has been released by Ministry of  Labour recently  This index gains significance as AICPI-IW from July-2012 to June-2013 will be required to calculate Central Government Employees DA from July 2013.
MonthAICPI-IW
Jul 2012212
Aug 2012214
Sep 2012215
Oct 2012217
Nov 2012218
Dec 2012219
Jan 2013221
Feb 2013223
Mar 2013224
Apr 2013226
May 2013228
Jun 2013To be released in the month July 2013
Based on the  AICPI-IW points raise upto May 2013, we presume that DA for Central Government Employees from July 2013 will be 90% only.
Please note that actual increase of DA from July 2013 will be known only after the formal announcement of the same by Government in the month of October 2013.

கொஞ்சம் யோசிங்களேன்


*ஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்?*

முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக்கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?...

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை.ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.

கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்டகலசங்கள் இருக்கும். இக் கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும்,உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன. நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.

இவ்வளவுதானா? இல்லை, பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குட முழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது. அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள். காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்? ஆச்சர்யம்தான்.

அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது. ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் எர்த் ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும்மனிதர்கள்காப்பாற்றப்படுவார்கள்!

சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000சதுர மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது! இது ஒரு தோராயமான கணக்கு தான். இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.

*
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது.*
நன்றி :முத்துசாமி SPM,ELAMPILLAI