Welcome to NFPE Blog

Hi Friends, Welcome to National Federation Of Postal Employees, Group-C

Salem West Division

***R.Sundaram***

Thursday, 2 May 2013

Wednesday 1 May 2013 INDEFINIT STRIKE IN KERALA CIRCLE


ENTIRE  POSTAL &  RMS  EMPLOYEES  (NFPE & FNPO) OF CENTRAL REGION KERALA CIRCLE STARTED  INDEFINITE  STRIKE FROM Ist MAY, 2013 AGAINST THE ATROCITIES AND PERVERTED ACTIONS OF SHRI GEORGE NAINAN PMG . STRIKE 100%. ALL POST OFFICES AND RMS OFFICES REMAINED PARALYSED . IF DEMANDS ARE NOT SETTLED BEFORE 5TH MAY, 2013, ENTIRE KERELA CIRCLE WILL GO ON INDEFINITE  STRIKE .

Wednesday, 1 May 2013

GDS D.A. ORDERS RELEASED - PLEASE INFORM OUR COMRADES

புரட்சிகர மே தின வாழ்த்துக்கள் !

REVOLUTIONARY GREETINGS TO ALL THE COMRADES, READERS AND VIEWERS ON THE EVE OF MAY DAY

                                                                           


                         
                         இளைஞர்கள் தெரிந்து கொள்ள ' மே தின' வரலாறு 

                                       பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் 


18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய 'சாசன இயக்கம்' (CHARTISTS ) என்பதாகும்.      சாசன இயக்கம் ஆறு  முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை.

பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள்,  தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். 1834 ல் 'ஜனநாயகம்' அல்லது 'மரணம்' என்ற கோஷத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.  இவையனைத்தும் தோல்வியில் முடிவ டைந்தன.

ஆஸ்திரேலியாவில் மெல்போர்னில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக் கையை முன்வைத்து 1856 ல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது.

அமெரிக்காவில் 1832ல் போஸ்டனில், கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். அதே போல், 1835 ல் பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து இயக்கம் நடத்தப்பட்டது. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், இரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி 1877 ல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

                                                  மாபெரும் வேலை நிறுத்தம் 

இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத்தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.

தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்வாக்கி, சின்சினாட்டி, பால்டிமோர், டெட்ராய்ட்  என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது. இவ்வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. இரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர்களின்  பேரணி  அமெரிக்காவை உலுக்கியது. மிக்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் இந்த பேரணியில் கலந்துக் கொண்டனர்.

                                                        சிக்காகோ  பேரெழுச்சி

மே 3, 1886 அன்று “மெக்கார்மிக் ஹார் வெஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்” வாயிலில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு கண்டனக் கூட்டத்தை நடத்தினர். இங்கு இடம்பெற்ற கலவரத்தில் நான்கு  தொழிலாளர்கள் காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயினர். இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில்  ஹே மார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை  தொழிலாளர்கள் அறிவித்தனர் . இது அரசினால் தடை செய்யப் பட்டது . தடையையும் மீறி  2500 தொழிலாளர்கள் பேரணியாக ஹே மார்கெட் நோக்கிச் சென்றனர்.  இந்நேரத்தில் காவல்துறையினர் ஏவி விடப்பட்டனர்.  அனைவரையும் கலைந்து செல்லுமாறு காவல் துறை  அறிவித்தது  . இவ்வேளையில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு காவலர் பலியானார். இதனால் கலவரமடைந்த  போலீசார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளர்களைத்  தாக்கினர்.  துப்பாக்கிச் சூட்டில்  20 க்கும் மேற்பட்ட தோழர்கள் பலியாயினர். அத்துடன் தொழிலாளர் தலைவர்களை கைது செய்து  தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு ஜூன் 21, 1886 அன்று துவங்கியது. இதன் முடிவாக  7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.

                                                  அமெரிக்காவின் கருப்பு தினம் 

நவம்பர் 11, 1887 அன்று தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பிரட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜார்ஜ் ஏங்கல் ஆகியோர்  தூக்கிலிடப்பட்டனர். இது அமெரிக்காவின் கறுப்பு தினமாக தொழிலாளர்களால் அறிவிக்கப் பட்டது.  நவம்பர் 13, 1887 அன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது. நாடு முழுவதும் ஐந்து  லட்சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அமெரிக்கா முழுவதும் கறுப்பு  நிறமேந்தி  கண்டனக் குரல் எழுப்பினர் .அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக – உழைப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது.

                                அனைத்துலக தொழிலாளர்  போராட்டம் 

1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.உலகத் தொழிலாளர்கள் அனைவரும், எட்டுமணி வேலை நேரத்திற்காக போர்க்குரல் கொடுக்கவேண்டிய நாள் மே 1 என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக கடைப் பிடிப்பதற்கு  வழிவகுத்தது.

இதைத் தொடர்ந்து தொழிலாளர்களின் உரிமைக் கோரிக்கையும், அதற்கான இயக்கமும் வலிமை பெற்றன. நாளொன்றுக்கு எட்டுமணி நேரம் மட்டும் உழைக்கும் உரிமையும், வாரத்தில் ஒரு நாள் விடுமுறையும் உலகம் முழுதும் கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறைக்கு வரத் தொடங்கின. உழைக்கும் மக்களை உலகம் மனிதாபிமானத்தோடு பார்க்கக் கற்றுக்கொண்டது.

                                               மே தினம் - வரலாற்று நிகழ்வு 

அமெரிக்கத் தொழிலாளர்களின் எட்டு மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ போராளிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக, உழைப்பாளர்களின் தினமாக நம் முன் நிற்கிறது. இப்படியாக, பொதுவுடைமைத் தத்துவத்திற்கு பெரும் எதிர்ப்பு காட்டி வரும் அமெரிக்காவில்தான் உழைப்பாளர்களின் அடிப்படை உரிமை முதன் முதலில் நிலைநாட்டப்பட்டது  என்பது  வரலாறு காட்டும் பாடம் ஆகும். எங்கு அழுத்தம் அதிகமாகிறதோ அங்கு  நிச்சயம் புரட்சி வெடித்துக் கிளம்பும்.

                                               பெற்ற சுதந்திரம் பறி  போகிறது !

நேற்று வரை நம் முன்னோர்களின் தியாகத்தால் நாம் பெற்ற இந்த 8 மணி வேலை என்ற சுதந்திரம் , இப்போது ஏகாதிபத்திய அரசுகளால்,  முதலாளித்துவ சக்திகளால், பன்னாட்டு நிறுவனங்களால், நம்மை அடகு வைக்கும் ஆளும் நாலாந்தர அரசியல் வாதிகளால் படிப்படியாகப் பறிக்கப் படுகிறது. 10 மணி நேரம் , 12 மணி நேரம் நீ வேலை செய்தால் என்ன என்று  நம்மிடமே  கொடூர எண்ணம் கொண்ட அதிகாரிகளால் இன்று தைரியமாக கேட்கப் படுகிறது . மீண்டும் அடிமைச் சாசனம் எழுதப் படுகிறது.  

                                                 மீண்டும் புரட்சிக்கு தயாராவீர் !

இதிலிருந்து நாம் மீள வேண்டுமானால் , பெற்ற சுதந்திரம் பறிபோகாமல் காக்கப் படுமானால்  என்ன தியாகத்திற்கும் நாம் தயாராக  வேண்டும். தொழிற் சங்கம் என்ன செய்தது என்று கேட்பதை விட்டு , நாம் என்ன செய்ய வேண்டும்  என்ற உணர்வு  ஒவ்வொரு  தோழனிடமும்  வெடித்துக் கிளம்ப வேண்டும். அதிகார மிரட்டலுக்கு அடி பணியாது , தண்டனை களுக்கு  பயந்து ஓடாது , போராட்ட குணம் வளர்க்கப் பட வேண்டும். தொழிலாளர் சக்தி  அற்ப எண்ணங்களுக்காக  பிரிக்கப்படாமல் , ஒன்று படுத்தப் படவேண்டும். மீண்டும் வரலாற்றுப் போருக்கு  இளைஞர்களை நாம் தயார் செய்திட வேண்டும் . இதுவே மே தின தியாகிகளுக்கு  நாம் செய்திடும் உண்மையான அஞ்சலி ஆகும்.

                                    மே தின தியாகிகள் நினைவு ஓங்கட்டும் ! 
                                         புரட்சிக்கான சிந்தனை பெருகட்டும்!
=======================================================================

இந்த  வரலாற்றை  பிரதி எடுத்து அனைத்து இளம் தோழிய/ தோழர்களுக்கும் அளித்திட  அனைத்து முன்னணித் தோழர்களையும் மாநிலச் சங்கமும் ,கோட்ட சங்கமும் அன்புடன் வேண்டுகிறது ! நிச்சயம் செய்வீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம் ! எதிர் கால எழுச்சிக்கு நம் இளைஞர் சக்தியை  ஒன்று படுத்துவீர்கள்  என்றும் நம்புகிறோம் !

========================================================================

புரட்சிகர மே தின வாழ்த்துக்களுடன் 

   J . ராமமூர்த்தி, மாநிலச் செயலர் , 
   அஞ்சல் மூன்று , தமிழ் மாநிலம் .
 &
சி.சஞ்சீவி
கோட்ட செயலர் ,அஞ்சல் மூன்று,சேலம் மேற்கு கோட்டம் 

Tuesday, 30 April 2013

HEARTIEST GREETINGS ON THE EVE OF SUPERANNUATION TO LEGEND


NFPE சம்மேளன செயல் தலைவர் கோவை தோழர். C. சந்துரு அவர்கள்
இலாக்கா பணி நிறைவு
40 ஆண்டுகள் இலாக்கா பணி , 36  ஆண்டுகள் இடைவிடாத தொழிற்சங்கப் பணி , ஆறு ஆண்டுகள் கோவை கோட்டச் செயலராக , நான்கு ஆண்டுகள் கோவை மண்டலச் செயலராக , 5 ஆண்டுகள் சம்மேளன செயல் தலைவராக தோழர் சந்துரு என்று அன்போடு அனைவராலும் அழைக்கப் படும்தோழர். C. சந்திரசேகர்  (POSTMASTER GRADE I, PEELAMEDU, COIMBATORE 09944922122) அவர்கள் ஆற்றிய தொழிற்சங்கப் பணி அளப்பரியது.
சிரித்த முகமாக, சீரிய சிந்தனையாளராக , சாதாரணமாகக் கூட வெகு சரளமாக தங்கு தடையின்றி உரையாடும் ஆங்கிலப் புலமை மிக்கவராக, அதிகாரிகளிடம் சாதுரியமாகப் பேசி ஊழியர்கள் பிரச்சனைகளை இன்றும் தீர்த்து வைக்கும் பக்குவப் பட்டவராக,   சங்கத்தில் கருத்து வேறுபாடுள்ள தோழர்களிடையிலும் ஒற்றுமைக்கு பாலமாக கோவை மண்டலத்தில் NFPE இயக்கத்தின் தூணாக.....  இப்படிப் பல முகங்கள் தோழர் சந்துருவுக்கு உண்டு.
சந்துரு இன்று (30.04.2013) இலாக்கா பணி நிறைவு செய்கிறார். அவர்தம் தொழிற் சங்கப் பணி நிச்சயம் தொடரும். அவரது அனுபவமும் அறிவும் பல இளைஞர்களுக்கு வழிகாட்டியாக அமையும் என்பதும் திண்ணம் . இந்தப் பணி நிறைவு நாளில் அவர் குடும்பத்தோடு நீண்ட காலம் ஆரோக்கியமாக எல்லா வளங்களும் பெற்று நல் வாழ்வு வாழ்ந்திட சேலம் மேற்கு கோட்ட அஞ்சல் மூன்று சங்கம் மனதார வாழ்த்துகிறது.

                                         வாழ்த்துக்களுடன்                                  சி.சஞ்சீவி ,கோட்ட செயலர்

Monday, 29 April 2013

சேலம் மேற்கு கோட்டத்தில் 7 வது சம்பள கமிசன் அமைக்க கோரி மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளஅறைகூவலுக்காக ஆர்ப்பாட்டம்

7 வது சம்பள கமிசன் அமைக்க கோரியும் ,GDS பிரச்சினைகளை பரிசீலிக்க  கோரியும்,50சதம் DA இணைப்பு கோரியும் புதிய பென்சன் திட்டம் கை விடக்  கோரியும் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளஅறைகூவலுக்காக அஞ்சல் மற்றும் RMS  ஊழியர்கள் கலந்து கொண்ட  மாபெரும் ஆர்ப்பாட்டம் சேலம் மேற்கு கோட்டத்தில் 29.04.2013   பகல் 1.00 மணிக்கு சேலம் மேற்கு கோட்ட அஞ்சல் மூன்று,அஞ்சல் நான்கு மற்றும் புறநிலை ஊழியர்கள் சங்கம் (NFPE) ஆகிய சங்க தலைவர்களின் கூட்டு தலைமையில் சூரமங்கலம் தலைமை அஞ்சலகம் முன்பு நடை பெற்றது.  P4 அஞ்சல் மூன்று மாநில உதவி தலைவர் தோழர் T.நேதாஜி சுபாஷ் ,R3 மாநில உதவி தலைவர் K.R.கணேசன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள் .  பகல் நேரமென்றாலும் ஏறக்குறைய 75 க்கும் மேற்பட்ட தோழர்கள் /தோழியர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்ட நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

              இனி கால வரையற்ற வேலை நிறுத்தத்திற்கு தயாராவோம்

                                                      போராட்ட வாழ்த்துக்களுடன்

                                                       சி.சஞ்சீவி கோட்ட செயலர்

Circle Union News

CAT MADRAS BENCH GRANTED STAY ON MINUS BALANCE RECOVERY

'MINUS BALANCE' ,   'AGENT FRAUD CASE'  மற்றும்    'BPM FRAUD CASE' களில்  நம்முடைய அதிகாரிகள்  இலாக்கா சட்ட விதிகளை மீறி  சாதாரண அப்பாவி ஊழியர்களின் மீது சகட்டு மேனிக்கு  சம்பளத்தில்  'RECOVERY' செய்ய உத்திரவிடுகின்றனர்.  இது தவறு என்பதை சட்ட விதிகளை சுட்டிக் காட்டி  நாம் அவ்வப்போது  உயர் அதிகாரிகளுக்கு 
 தெரிவித்து வருகிறோம். 

அப்படித் தெரிவித்தாலும்  அந்த நேரத்தில் மட்டும் அவர்கள் தலையிட்டு  தற்காலிகமாக நிறுத்திட உத்திரவுகள் இடுகிறார்கள். அதே போல சம்பந்தப் பட்ட ஊழியர்களுக்கு  அவர்களின்  பங்கு குறித்து அறிய  அந்த நேரத்தில் மட்டும்  அதற்கான  ஆவணங்களை பரிசீலனை செய்ய  அறிவுறுத்தப் படுகிறார்கள். 

ஆனால்  மீண்டும் மீண்டும் கீழ் மட்டத்தில் உள்ள அதிகாரிகள்  அவர்கள் செய்வதையே தான் செய்து வருகிறார்கள். அப்பாவி  ஊழியர்கள் மீது  தேவையில்லாமல் 'RECOVERY'  செய்திட உத்திரவு இடுகிறார்கள். தற்போது சென்னை மத்திய கோட்டத்தில்  இந்தப் பிரச்சினை மீது உரிய சட்டவிதிகளை சுட்டிக் காட்டி  'RECOVERY'  உத்திரவை நிறுத்திட PMG CCR  அவர்களிடம்  கடிதம் அளித்துப்  பேசினோம்.  

அடுத்த கட்டமாக  பாதிக்கப் பட்ட ஊழியர் ஒருவர் மூலம்  நீதிமன்றத்தை நாடி  இந்த உத்திரவை நிறுத்திட தடை ஆணையும்  பெற்றுள்ளோம்  கோட்ட / கிளைச் செயலர்கள், அவர்கள் பகுதியில் இப்படி சட்ட விரோதமாக ஏதேனும்   RECOVERY  பிரச்சினை இருப்பின்  சம்பத்தப் பட்ட ஊழியர் மூலம்  முதலில் , நமது மாநிலச் சங்க கடிதத்தில் காட்டப் பட்டுள்ள  சட்ட விதிகளைச் சுட்டிக் காட்டி  REPRESENTATION  அனுப்பச் சொல்லவும் . 

அதனையும் மீறி  தன்னிச்சையாக  RECOVERY  உத்திரவு இடப்பட்டால்  உடன் நீதி மன்றத்தை நாட  உதவி புரிய வேண்டுகிறோம் . மாநிலச் சங்கம் இதற்கான உதவிகளைச் செய்ய  காத்திருக்கிறது. 
மாநிலச் சங்கத்தின் கடித நகலையும்  நீதி மன்றத் தடையாணை நகலையும் கீழே பார்க்கவும். 


Sunday, April 28, 2013

ATROCITIES AND OUTRAGE AGAINST STAFF AT TAMBARAM DIVISION - CIRCLE UNION PROGRAMME FOLLOWS

"தோட்டம் காக்கப் போட்ட வேலி  பயிரைத் தின்பதோ ?
அதைக் கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதோ ?"

அன்புத் தோழர்களே !  வணக்கம். தாம்பரம் கோட்ட அதிகாரியின் அடாவடித்தனத்தையும் அதிகார அத்து மீறலையும் எதிர்த்து வெடித்தெழுந்த அம்பத்தூர் கிளைச் செயலரின் சுற்றறிக்கையினை  உங்கள் பார்வைக்கு 
கீழே அளித்துள்ளோம்.  

அம்பத்தூர் கிளைக்கென  தொழிற்சங்கத்தில் வரலாற்றுப் பதிவுகள் பலவுண்டு . அமைதியின் திரு உருவாய் , அறிவுப் பெருங்கடலாய் , ஆற்றலின் மகா சக்தியாய்  நம் அருமைத் தலைவர் KVS  அவர்களைத் தந்த கிளை  அம்பத்தூர்.  

திருவாளர் தேவராஜன் காலத்தில்  நடைபெற்ற போராட்டங்கள் 
அம்பத்தூர்  வீரத்தின் வெளிப்பாடு.  

கையூட்டுப்  பெற்ற  அம்பத்தூர் ASP  கையும் களவுமாக CBI  ஆல்  பிடிக்கப் பட்டு  தண்டனைக்காளானது  அம்பத்தூர் விவேகத்தின் வெளிப்பாடு. 

KVS  அவர்கள் டெல்லி மாநகர் சென்று விட்டார் என்று எண்ணி கொக்கரிக்கும்  குட்டி அதிகாரிகளுக்கு எச்சரிக்கை .  

அதிகாரம் உங்களுக்கு அரசாங்கம் கொடுத்திருப்பது  நிர்வாகம் நல்லமுறையில் நடத்தி  பொதுமக்களுக்கும்  ஊழியர்களுக்கும் நன்மை செய்வதற்குத்தான் . அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப் பட்டு  ஊழியர்கள் கொடுமைப் படுத்தப் பட அல்ல . ஊழல்  செய்திட அல்ல . பெண் ஊழியர்கள் கேவலப் படுத்தப் பட அல்ல ! அஞ்சலகம் அடிமைக் கொட்டடியாய் மாற்றப் பட அல்ல ! 

உங்கள் தவறான  போக்கு திருத்திக் கொள்ளப் படவில்லையானால் , ஊழல்கள் களையப் படவில்லையானால் 
மத்திய , மாநிலச் சங்கங்கள் வாளா இருக்காது !

உங்கள் மீது பெண் ஊழியர்கள பலர்  கைப்பட அளித்த புகார் மனுக்கள் புது டெல்லியில் உள்ள  மகளிர்  உரிமை ஆணையத்தில் மத்திய சங்கத்தால் நேரிடையாகச் சென்று அளிக்கப் படும் .  உயர் மட்ட விசாரணை கோரப்படும். 

உங்களின் நிர்வாகம் குறித்த ஊழல் புகார்கள் , PMG, CPMG,  MEMBER(P),  DG  ஆகியோரிடம்  நேரடி விசாரணை  கோரி அளிக்கப் படும் !

அதன் மீது  கவன ஈர்ப்பு கொடுத்திட மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப் படும் ! நிலைமை மாறும் என்று எதிர்பார்க்கிறோம் !

"மாறினால் மாறட்டும் ! இல்லையேல் மாற்றுவோம் !
தீமைகள் யாவையும் கூண்டிலே ஏற்றுவோம் !"
 

Govt. orders

ABOLITION OF MTS POSTS STAYED BY BANGALOTE CAT {CLICK HERE FOR DETAILS PAGE 1  2}

 

PROJECT ARROW CHECK LIST TO AVOID RED ZONE{CLICK HERE FOR DETAILS  2  COURTESY:  HTTP://SAPOST.BLOGSPOT.IN}

 

NEW PROJECT ARROW PORTAL LAUNCHED BY HONORABLE SECRETARY DEPARTMENT OF POSTS ON 25.04.2013 {CLICK HERE FOR DETAILS}

 

AMENDMENT TO RULE 93-A OF POSTAL MANUAL VOLUME-VII {CLICK HERE FOR DETAILS}
NEW OPERATIONAL NETWORK OF PARCELS {CLICK HERE FOR DETAILS PAGE 1 2 3}

Saturday, 27 April 2013

PROTEST DEMONSTRATION ON 29.04.2013

PROTEST DEMONSTRATION ON 29.04.2013 FOR 7TH CPC AND WITHDRAWAL OF PFRDA BILL

அன்புத் தோழர்களுக்கு வணக்கம் !

எதிர் வரும் ஏப்ரல் 29 . 2013 அன்று  7 ஆவது ஊதியக் குழு வேண்டியும் , புதிய பென்ஷன்  திட்டத்தை கைவிட வேண்டியும் , நம்முடைய கோரிக்கைகளை ஏற்று , CONFEDERATION  மற்றும் NFPE உடன் ,  ரயில்வே துறையின்  மிகப் பெரிய சம்மேளனமான  AIRF ,  மற்றும் பாதுகாப்புத் துறையின்  மிகப் பெரிய சம்மேளனமான AIDEF  ஆகியவை  ஒன்றுபட்ட , நாடுதழுவிய அளவிலான  கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளனர்.  

எனவே தமிழக NFPE  இணைப்புக் குழுவின் சார்பில்  அனைத்து மாநிலச் செயலர்களும் இந்தப்  போராட்டத்தை  அனைத்து கோட்ட/ கிளைகளிலும் சிறப்பாக நடத்திட  வேண்டுகோள்  விடுத்துள்ளனர் .  அதற்கான சுற்றறிக்கை கீழே தரப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் உள்பட அனைத்து கோட்ட/ கிளைகளிலும்  தனித்தனியே  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்திட வேண்டுகிறோம் அந்தந்தப் பகுதியில் உள்ள மாநிலச் சங்க நிர்வாகிகள் மற்றும் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன அமைப்புடன்  தொடர்பு கொண்டு  இந்தப் போரட்டத்தை சிறப்பிக்க வேண்டுகிறோம்.  இந்த வலைத் தளத்தை பார்க்கும்  தோழர்கள் அந்தந்தப் பகுதியில்  பொறுப்பாளர்களுடன் தொடர்பு கொண்டு  போராட்டம் சிறக்க  ஆவன செய்திட வேண்டுகிறோம். 

Friday, 26 April 2013

D A Orders released by Circle Office

அன்பு தோழர்களே ! தோழியர்களே !!
வீர வணக்கம் 
DA Orders  இன்று சற்று முன்  நமது  Circle Office  file No. ESB/134-1/2013 dated 26.04.2013 படி வெளியிடப்பட்டுள்ளது.  நமது கோட்டத்தில் DA arrears  விரைவில் வழங்க வேண்டப்பட்டுள்ளது.  
கும்பகோணத்தில் ஜூன் 5,,6,7 ல்  நடக்கும் நமது மாநில மாநாட்டிற்கு மனமுவந்து நன்கொடை அளிக்க வேண்டுகிறோம்.

                                                          தோழமையுடன்

K.பரமசிவம்                                        C.சஞ்சீவி                                        K.K.கமலமணி
தலைவர்                                             செயலாளர்                                       நிதி செயலர்

MESSEGE OF THE DAY