Welcome to NFPE Blog

Hi Friends, Welcome to National Federation Of Postal Employees, Group-C

Salem West Division

***R.Sundaram***

Tuesday, 6 November 2012

12 DEC 2012 ONE DAY STRIKE


                                           


NFPE
         
அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம்
அஞ்சல் மூன்று ,அஞ்சல் நான்கு மற்றும்  புறநிலை ஊழியர்கள் (NFPE)
சேலம்  மேற்கு  கோட்டம்,    சேலம் – 636 005

          


            

அறிக்கை எண் 23            (¯உறுப்பினர்களுக்கு மட்டும் )          நாள் : 09.11.2012

அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே !! வணக்கம் .
            .
7-வது ஊதியக்குழு அமைத்தல் உள்ளிட்ட,  15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன அறைகூவலை ஏற்று
12.12.12  அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம்
                மத்திய  அரசு ஊழியர்களின் பல்வேறு பொதுவான முக்கிய பிரச்சனைகள்  தீர்க்கப்படாமல் பல காலமாக  தேங்கிக் கிடக்கிறது. துறைவாரியாக  பல போராட்டங்கள்  நடத்தியும், மத்திய அரசு,  கோரிக்கைகள் தீர வழி வகுக்காமல்   மெத்தனமாக உள்ளது.  இதைக்கண்டு   வெகுண்டெழுந்த மத்திய அரசு ஊழியர்  மகா சம்மேளனம்  மிக முக்கிய - பொதுவான
15 கோரிக்கைகளை மையப்படுத்தி – முன்வைத்து, 12.12.2012 ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது. நம் அஞ்சல்  துறையைப்  பொறுத்தமட்டில் NFPE சம்மேளனத்தில் அங்கம்  வகிக்கும் அனைத்துப் பிரிவு சங்கங்களும்  இந்த மாபெரும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்று கோரிக்கைகளை வென்றெடுக்க  திட்டமிட்டுள்ளன.
கோரிக்கைகள்:
1)  7-வது  ஊதியக்குழு அமைத்து 1.1.2011 முதல் ஊதிய மாற்றம் செய்யப்பட வேண்டும்
                பொதுத்துறை மற்றும் வங்கித் துறைகளில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியமாற்றம் செய்யப்படுகிறது.  ஆனால் மத்திய அரசு  ஊழியர்களுக்கோ 10 ஆண்டுகளுக்கு  ஒருமுறைதான்.  அதுவும்   ஊதியக்குழு அமைக்கப்பட்டால்தான்  உண்டு!
5-வது   ஊதியக்குழு அறிக்கைப்படி  DA  50% -ஐ தாண்டிய  1.1.2011 முதல் ஊதியக்குழு  அமைக்கப்பட்டு  ஊதிய மாற்றம் செய்யப்படவேண்டும். 1.1.2006முதல் 5 ஆண்டுகளில் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் 160%-ஐ தாண்டியிருக்கும் போது, அகவிலைப்படியாக  வெறும் 51% மட்டுமே வழங்கப்பட்டது. 6-வது ஊதியக்குழுவும்  தந்திரமாக  விலையேற்றத்தை  முழுமையாக  கணக்கில்  கொள்ளாமல்  குறைந்த அளவிலேயே ஊதிய நிர்ணயம் செய்துள்ளது. இந்த முரண்பாடுகள் களையப்பட உடனடியாக 7-வது ஊதியக்குழு அமைக்கப்பட்டு 1.1.2011 முதல் ஊதியம் மாற்றப்பட வேண்டும்.

2) அகவிலைப்படியை  (DA)  அடிப்படை ஊதியத்துடன் இணைத்திட வேண்டும்
        DA 50% -ஐ தாண்டும்போது  அதை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் என்ற 5-வது  ஊதியக்குழு பரிந்துரை நிறைவேற்றப்படவில்லை. எனவே  GDS  உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் DA-வை ஊதியத்துடன்  இணைத்து, அதனை அடிப்படையாகக்கொண்டே மற்ற படிகள் (Allowance) அனைத்தும் கணக்கிட்டு  வழங்கப்பட வேண்டும்.

3) கருணை அடிப்படையிலான பணிநியமனங்கள்  உச்சவரம்பின்றி  வழங்கப்பட வேண்டும்
        கருணை அடிப்படையிலான பணிநியமனங்களுக்கு உள்ள 5% என்ற  உச்சவரம்பு நீக்கப்பட்டு, இரயில்வே துறையில் உள்ளதுபோல் உச்சவரம்பின்றி, வாரிசுதாரர்களுக்கு  பணிநியமனங்கள் உடனடியாக  வழங்கப்படவேண்டும். உச்சநீதிமன்றமும் 5% உச்சவரம்பு  வைக்கப்படவேண்டும்  என்று  வரையறுக்காத  நிலையில்  நம்  துறையில் மட்டும்  காத்திருக்கும்  RRR ஊழியர்களுக்கு பணிநியமனங்கள்  வழங்கப்படாதது அநீதியாகும்.

4) JCM  முறையாக கூட்டப்பட்டு அதன் முடிவுகள்  நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்
        அனைத்து  மத்திய அரசுத் துறைகளிலும்  JCM கூட்டம்  4 மாதங்களுக்கு  ஒருமுறை  தவறாமல்  கூட்டப்படவேண்டும். ஆனால்  ஆண்டுக் கணக்கில்  JCM  கூட்டப்படுவதில்லை. மேலும்  அதில்  எடுக்கப்படும்  முடிவுகள்  அரசால் நடைமுறைப்- படுத்தப்படுவதில்லை. அனாமலி  கமிட்டியில்  வைக்கப்படும்  கோரிக்கைகளும்  பரிசீலிக்கப்படுவதில்லை..
[                                                                                                 
5) ஆளெடுப்புத் தடை முற்றிலும் நீக்கப்பட்டு புதிய  பணியிடங்கள்    உருவாக்கப்பட வேண்டும்
        2001 முதல் 2008 ஆண்டுவரையில்  குரூப்-C  மற்றும்  குரூப்-D பிரிவுகளில் மட்டும்   மூன்றில்  இரண்டு பங்கு   காலிப் பணியிடங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்து 2010 ஆண்டுவரையில் மேலும் 20% குரூப்-C & D  பதவிகள் ஒழிக்கப்பட்டு பணிச்சுமை மிகவும்  அதிகமாக்கப்பட்டுள்ளது.  6-வது ஊதியக்குழுவும் ஆளெடுப்புத் தடை நீக்கப்பட்டு தேவைக்கேற்ப  ஊழியர்களை  நியமிக்க பரிந்துரைத்துள்ள  நிலையிலும் மத்திய அரசு  அதை  நடைமுறைப்படுத்தவில்லை. 
6) அரசுப்பணிகள் தனியாருக்கு தாரைவார்க்கப்படுவது நிறுத்தப்படவேண்டும்
        ரயில்வே துறை உள்ளிட்ட மத்திய அரசுத் துறைகளின் பல பணிகள் தனியாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால்  ஆட்குறைப்பும், சில  துறைகள்  மூடப்பட்டும், பல  மூடப்படும்  நிலையிலும்  உள்ளது. உதாரணமாக பாஸ்போர்ட்  மற்றும்  PAN CARD வழங்கும்  பணிகள்  TATA கம்பெனிக்கும், வருமானவரிக்  கணக்கு  தணிக்கைப்பணி NFOSYS கம்பெனிக்கும்  கொடுக்கப்பட்டுள்ளது. அஞ்சல் துறையிலும்கூட இந்திய அஞ்சல் சட்டம் திருத்தப்பட்டு  Public Private Partnership (PPP)                                                                                                                                                                                                                                                        
- 2 -
எனப்படும் அரசுத்துறையும் தனியார் துறையும் இணைந்து  செயல்படும் அபாயகரமான திட்டம் கொண்டுவரப்படவுள்ளது.
இது மேலும் கூரியர் சர்வீஸ் கம்பெனிகளை  வளர்க்கவே  உதவும். இத்திட்டங்கள் அரசுத் துறைகளை  முதலில்  கார்பொரேஷனாக்கி  முடிவில்  தனியார்மயமாக்கிடும் என்பதையே   உணர்த்துகிறது! BSNL-க்கு ஏற்பட்டுள்ள  நிலைதான்  இனி  மற்ற அரசுத் துறைகளுக்கும்.  இது உடனடியாக  தடுத்து  நிறுத்தப் படவேண்டிய  ஒன்று.

7) விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்பட்டு பொது விநியோகத் திட்டம் சீராக்கப்படவேண்டும்
        மத்திய அரசு  கடைபிடிக்கும்  புதிய  பொருளாதாரக் கொள்கைகளும்  அதன்மூலம்  பொது   விநியோகத் திட்டம் 
சீரழிக்கப்பட்டதுமே  கடுமையான  விலைவாசி உயர்விற்கு  காரணமாகும். எனவே  அனைத்துப் பிரிவு ஊழியர்களும்  பொது விநியோகத் திட்டத்தில் கொண்டுவரப்பட்டு  அத்தியாவசியப்  பொருட்களின்  விலையை  அரசு  கட்டுப்படுத்த வேண்டும்.

8(a) GDS  ஊழியர்கள் அரசு ஊழியராக்கப்பட வேண்டும்
        ஜஸ்டிஸ் தல்வார் கமிட்டியும்,  அதற்கும் முன்பாக 1977 -லேயே  உச்சநீதிமன்றமும்  ED  ஊழியர்களையும் அரசு ஊழியராகக் கருதி  அனைத்து உரிமைகளும், சலுகைகளும் வழங்கவேண்டும் என்று தெரிவித்துள்ளது.  GDS ஊழியர்களை அரசு
ஊழியராக்க அனைத்து சாத்தியக் கூறுகளும் உள்ள  நிலையில், நடராஜ மூர்த்தி கமிட்டி அநீதியாக அவர்களை அங்கன்வாடி/ பகுதிநேரப் பணியாளர்களாகத்தான் பாவித்தது. அவர்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு சலுகைகள் பறிக்கப்பட்டுள்ளது. இழைக்கப்பட்ட  அநீதி களையப்பட்டு, TRCA  முரண்பாடுகள், போனஸ் உச்சவரம்பு, போஸ்ட்மேன்/ குரூப்-D பணியிடங்களை நிரப்புதல் போன்றவற்றிற்கான  விதிமுறைகளும் GDS  ஊழியர்களுக்கு சாதகமாக  மாற்றியமைக்கப்பட வேண்டும்.
 (b) பகுதி நேர / தற்காலிக பணியாளர்கள்   நிரந்தரமாக்கப்பட வேண்டும்
        அரசுப் பணிகளில் சுமார் 25% ஊழியர்கள்  தற்காலிகப்  பணியாளர்களே! மத்திய அரசால் மிகவும் குறைந்த கூலி கொடுக்கப்பட்டு  அவர்களின் உழைப்பு  சுரண்டப்படுகிறது.   அவர்களும் அரசு  ஊழியராக்கப்பட வேண்டும்.

9) அனைவருக்கும் உச்சவரம்பின்றி போனஸ் வழங்கப்பட வேண்டும்
        போனஸ் தொகை மற்றும் நாட்கள் கணக்கிடுவதில் உள்ள உச்சவரம்பு நீக்கப்பட்டு  GDS  உள்ளிட்ட அனைத்துப்  பிரிவு ஊழியர்களுக்கும் அவர்கள் பெறுகின்ற ஊதியத்தின் அடிப்படையில்  போனஸ் வழங்கப்பட  வேண்டும்.

10) மிகுதி நேரப்படி (OTA) மற்றும் இரவுப் பணிப்படி உயர்த்தி வழங்கப்பட வேண்டும்
       4-வது  ஊதியக்குழு நிர்ணயித்த OTA ஒரு மணி நேரத்திற்கு ரூ 15.85 மட்டுமே இன்றும்  வழங்கப்- படுகிறது. ஆனால் வெளியாட்களைப் பயன்படுத்தி செய்யப்படும் பணிகளுக்கு, அரசு இதைவிட அதிகப்படியான தொகை வழங்குகிறது. எனவே  நடுவர்மன்றத்  தீர்ப்பின்படி உயர்த்தப்பட்ட OTA மற்றும் இரவுப் பணிப்படி  வழங்கப்பட வேண்டும்.

11) நடுவர்மன்றத் தீர்ப்பாய உத்தரவுகள் அமலாக்கப்பட வேண்டும்
        ஊழியர்களுக்கு சாதகமாக இதுவரை  நடுவர்மன்றத் தீர்ப்புகள் 17 வந்துள்ளது. இவற்றை  அமல்படுத்துவதற்கான செலவும் மிகக் குறைவே. இருப்பினும் மத்திய அரசு இவற்றை பாராளுமன்றத்தில் வைத்து நிராகரிக்க முனைகிறது.

12) தொழிற்சங்கங்களை பழிவாங்கும் போக்கினை கைவிட வேண்டும்

13) வேலைநிறுத்தப் போராட்ட உரிமை சட்டப்பூர்வமாக்கப்பட வேண்டும் 
பாராளுமன்றத்தில் தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்கும் சட்டங்கள் இயற்றப்படவேண்டும். 

14) ஐந்துகட்ட பதவிஉயர்வு வழங்க வேண்டும் 
        எவ்வித தேர்வுகளும் எழுதாமல் குரூப்-A  அதிகாரிகளுக்கு 5 கட்டத்திற்கும் மேலாக பதவி உயர்வுகள் வழங்கப்- படுகிறது. ஆனால் குரூப்-C & D ஊழியர்களுக்கு மட்டும் முறையான பதவி உயர்வுகள் வழங்கப்படுவதில்லை. எனவே அனைத்து தரப்பு ஊழியர்களுக்கும் கேடர்  சீரமைப்பு  செய்யப்பட்டு, 5 கட்ட பதவி உயர்வு வழங்கப்படவேண்டும். 

15) புதிய ஓய்வூதிய திட்டம் கைவிடப்பட வேண்டும்
        1.1.2004 முதல் நடைமுறைப்படுத்தப்படும் - சமூகப் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் புதிய ஓய்வூதியத்  திட்டம் கைவிடப்படவேண்டும். ஓய்வூதிய திட்ட நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்தல் கூடாது.  பழைய  பாதுகாப்பான - உத்திரவாதத்துடன் கூடிய  ஓய்வூதியத் திட்டமே தொடர்ந்து அமலாக்கப்படவேண்டும்.
       
        கோரிக்கைகள் அனைத்தையும் வென்றெடுத்து, அனைத்து நமது  ஊழியர் நலன் காக்க சங்கபேதமின்றி அனைவரும்  ஒன்றுபட்டுப்  போராடுவோம்! 12.12.2012 ஒருநாள் வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம்!!

வெல்லட்டும் வேலை நிறுத்தப் போராட்டம்!   வென்றெடுப்போம் அனைத்துக் கோரிக்கைகளையும்!!

போராட்ட வாழ்த்துக்களுடன்,
தோழமையுள்ள,
  K. பரமசிவம் தலைவர்  P3                                  C.சஞ்சீவி செயலர் P3         P. இளங்கோவன் நிதிச்செயலர் P3                                         
R.வரதராஜன் தலைவர் P4                R..பிரகாஷ் செயலர் P4           S.ரத்தினம் நிதிச்செயலர்  P4
                     K. கண்ணபிரான் கௌரவதலைவர் GDS(NFPE)   C.ஆறுமுகம் செயல் தலைவர் GDS(NFPE)    R.சரவணன்தலைவர்GDS(NFPE)  S.சண்முகம் செயலர்GDS(NFPE)   C.முருகன் நிதிச்செயலர் GDS(NFPE)
          

DIVISIONAL CONFERENCE OF SALEM EAST

சேலம் கிழக்கு கோட்டத்தின்  ஈராண்டு மாநாடு  கடந்த 04.11.2012 அன்று  சிறப்பாக நடைபெற்றது. மாநிலச் சங்கத்தின் சார்பில் மாநிலச் சங்கத்தின்  தலைவர்   தோழர். J.ஸ்ரீவெங்கடேஷ் ,  மற்றும்  மேற்கு மண்டலச் செயலர் தோழர். N.S.  ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

மாநாட்டில் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில் கீழ்க்கண்ட தோழர்கள்  நடப்பு ஈராண்டுகளுக்கான  கோட்டச் சங்க நிர்வாகிகளாக  தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

கோட்டத் தலைவர் : தோழர்.C.ரவீந்திரன் P.A., SALEM HO
கோட்டச் செயலர்:    தோழர். T.  நேதாஜி சுபாஷ் ,
                                             SPM, SHEVAPET BZR    
நிதிச் செயலர் :           தோழர். S. சரவணன், CRM, O/O SPOS., SALEM EAST
வெற்றி பெற்ற  தோழர்களின்  பணி  சிறக்க சேலம் மேற்கு கோட்ட  சங்கத்தின்  நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். 

Monday, 5 November 2012


FINANCE MINISTRY ORDERS RESTRICTION IN FILLING UP OF VACANT POSTS


Restriction on new post under economy measures : Vacant posts for more than a year shall not be revived...

No.7(1)E.Coord/2012
Government of India
Ministry of Finance
Department of Expenditure

New Delhi, the 1st November, 2012

OFFICE MEMORANDUM

Sub : Expenditure Management - Economy Measures and Rationalization of Expenditure

In continuation of this Departments OM of even no dated 31/5/2012 on the subject cited above, it is further stated that posts that have remained vacant for more than a year shall not be revived except under very rare and unavoidable circumstances and after seeking clearance of the Dept. of Expenditure. This shall be implemented with immediate effect.

Secretaries to the Government of India and Financial Advisers are requested to ensure strict compliance of the above instructions.

sd/-
(R.S.Gujral)
Finance Secretary


கோட்ட/ கிளைச் செயலர்களே உங்கள் பார்வைக்கு :-

SHORTAGE  OF  STAFF  :  A REVIEW :-

2006, 2007  மற்றும் 2008 ஆண்டுகளில் SCREENING COMMITTEE SCRAP  செய்யப் படுவதற்கு முன்னர் 'DEEMED TO HAVE BEEN ABOLISHED'  என்று  குறிக்கப்பட்டு , ஆனால் இன்னமும்  ABOLISH  செய்யப் படாமலும் , நிரப்பிட  DOPT  யில் இருந்து அனுமதி  பெற முடியாமலும்  'SKELETON'  இல் வைத்திருக்கப் பட்டுள்ள  ஆயிரக்கணக்கான  பதவிகள் மேலே கண்ட மத்திய அரசின் நிதி அமைச்சக உத்திரவின் மூலம்   இனி நிரப்பப் பட வாய்ப்பே இல்லாமல்  போய்விடும் .  

இந்தக் காலியிடங்கள் தான், பல கோட்டங்களில்   CURRENT YEAR VACANCY  ஐ தவிர்த்து , SANCTIONED STRENGTH க்கும்  WORKING STRENGTH க்கும்  வித்தியாசமாக உள்ளது என்பதை  பல தோழர்கள் அறியாமல்,  காலியிடங்கள் நிரப்பப் படவில்லை என்று கூறி வருகிறார்கள். 

13.10.2010 வேலை நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் , 2010, 2011 இல் நடைபெற்ற  RECRUITMENT  களில் DIRECT RECRUITMENT,  RESIDUAL VACANCY, LGO EXAM, SC/ST  BACK LOG VACANCIES,  PH/OH VACANCIES என்று  இதுவரை எழுத்தரில் மட்டும் மொத்த ஊழியர் எண்ணிக்கையில்    33%  பணியிடங்கள் தமிழகத்தில்  நிரப்பப் பட்டுள்ளன. 

இந்த ஆண்டுக்கான  RECRUITMENT இல்   தமிழகத்தில் கிட்டத்தட்ட மொத்த எழுத்தர்  எண்ணிக்கையில்  12% பதவிகள் மேலே கண்ட இனங்களில்  நிரப்பட  முறையான  காலியிட  அறிவிப்பு வெளியிடப் பட உள்ளது .அதாவது அனைத்து காலியிடங்களும்  நிரப்பப் பட உள்ளன 

இதனையும் மீறி , 2006, 2007  மற்றும் 2008 க்கான  SCREENING COMMITTEE VACANCIES தான்  மீதமுள்ள காலியிடங்கள் ஆகும்.

இவை தவிர , வேலைப்பளு  அதிகமாக உள்ளதன் காரணம் ,  எந்தவித  வேலை நிர்ணய புள்ளி  வரையறைக்குள்ளும்  வராத  AGENCY  பணிகளை நாம் செய்து வருகிறோம்.இதற்கு ஈடாக  , நமது  இலாக்காவுக்கு  COMMISSION  ஆகப் பெறப்படும் தொகையில் 25% தொகையை, இந்த  AGENCY  பணிகளைப் பார்க்கும் ஊழியருக்கு  INCENTIVE  ஆகா வழங்கிட உத்திரவு பெற்றுள்ளோம். இதை தமிழகத்தில் நடைமுறைப் படுத்தவில்லை என்று  பல கோட்டங்களில் , புகார் அளிக்கப்பட்டதை CPMG அவர்களிடம்  மாநில கூட்டு ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் வைத்துப் பேசி அதற்கான உத்திரவையும் பெற்றுத் தந்துள்ளோம். இது பின்னர் CCR, CR,SR  மண்டலங்களில் BI-MONTHLY MEETTING களிலும் வைக்கப் பட்டு மீண்டும்  தலைமட்ட உத்திரவுகள்  இடப்பட்டுள்ளன. அந்த BI-MONTHLY MEETING MINUTES நகலும் நம் வலைத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டு , மீண்டும் அதன் நகல் கோட்ட/கிளைச் செயலர்களுக்கு அனுப்ப பட்டுள்ளது.   என்பதை நினைவு கூர்கிறோம்.

  RPLI  பகுதியில், PLI  பகுதியில்.  புதிய  பணி  நியமன ஆணை எதுவும் மத்திய அரசில் வழங்கிட வில்லை. எனவே  அந்தப் பணியிடங்களுக்கான  அதிகப்படியான வேலைப்பளுவும்  நம்மிடையே கூடியுள்ளது. புதிய பணியிட உருவாக்கத்திற்கு (CREATION OF POSTS)   மத்திய அரசில்  தடை  அனைத்து துறைகளுக்கும் இருப்பதால் , இந்தப் பிரச்சினையில் ஒரு தேக்க நிலை உள்ளது.

இந்த நிலையில்தான்,  மாநில அளவில்  எடுக்கக் கூடிய நடவடிக்கைகளை  இடைவிடாது மாநிலச் சங்கம் செய்து வருகிறது  என்பதை  அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம் 

இதே பிரச்சினையில்  ரயில்வேயில் என்ன நிலை என்பதைப் பார்த்தால் இன்றுள்ள மத்திய அரசின்  சூழலில் , நாம் எவ்வளவு  ADVANCED  ஆக  உள்ளோம்  என்பது உங்களுக்குப் புரிய வரும் . கீழே பார்க்க ரயில்வேயில் அங்கீகாரம் பெற்ற  பெரிய சம்மேளனமான NFIR   பொதுச் செயலரின் கடித  நகல் :-



NFIR
National Federation of Indian Railwaymen
(Affiliated to Indian National Trade Union Congress)

No.II/1A/Pt.17
Dated : 03/11/2012
The Member Staff,
Railway Board,
NEW DELHI.

Dear Sir,
Sub: Appointment on compassionate grounds in the Clerical Cadre - urge to fill up vacancies - reg.
Ref : Railway Board's letter No.E(NG)II/91/RR-1/20 dated 03/12/1991.

NFIR wishes to invite kind attention of the Railway Board (MS) to the fact that the Railway Board vide letter, quoted under reference, had imposed ban in filling up the vacancies in the Clerical Cadre (Clerks and Senior Clerks) falling in the share of direct recruitment and at the same time had frozen 25% of such vacancies initially for a period of two years. These instructions further stipulate that Railways would undertake critical review of unfilled D.R. quota vacancies and progressively surrender the posts. A period of more than 21 years has passed and the present postion in the Clerical Cadre throughout the Zonal Railways/Producation Units has gone from bad to worse, and after over two decades the quality of working system at different levels is getting eroded.


2. The NFIR desires to add that the extant instructions of the Railway Board have banned the intake in the Clerical Cadre even through Compassionate Ground appointments where female wards/widows of the Railway employees are not at all being considered. The General Managers for the purpose expect justification from the DRMs/Heads of Units, consequently the clerical posts are either lying vacant or surrendered in the mid and at the end of every financial year without caring the consequences of shortage. This situation is really alarming and if the Railway Board's order continues for some more years there might be no clercial staff to even proces the papers what to speak of noting/drafting duly connecting instructions/rules, more particularly in Accounts and Personnel Departments of Railways.

NFIR, therefore, makes the following suggestions :-

(i) Freezing of 25% posts in Clerical Cadre in GP Rs.1900 and Rs.2800 should be lifted with immediate effect,

(ii) The condition laid down in Baord's letter for considering compassionate appointment to wards of deceased/medically invalidated (who possess grdauate qualification) be removed.

NFIR urges the Railway Board (MS) to kindly consider the above suggestions and see that revised instructions are issued, duly endoring copy to the Federation.

Yours faithfully,
sd/-
(M.Raghavaiah)
General Secretary





                  GDS தோழர்கள்-தேர்வுகுறித்ததகவல்   

தபால் காரர் /MTS தேர்வுக்கான  புத்தகங்கள்  கிழ்கண்ட  முகவரியில் 

கிடைக்கிறது  தேவைபடுவோர்  வாங்கி பயன்பெறுவீர் .

SPM தோழர்கள்  நமது அலுவலக  GDS  ஊழியர்களுக்கு 

இந்த தகவல்களை  தெரிவிக்கும்படி  கேட்டு கொள்கிறோம் 

                                   வாழ்த்துக்களுடன் 
    சி.சஞ்சீவி            கோட்ட செயலர் P3    இரா.பிரகாஷ்   கோட்ட செயலர் P4   
சி.சண்முகம் கோட்ட செயலர் GDS(NFPE)                             
                                                                                       
    

Guide for Postman & MTS Exam

GUIDES FOR POSTMAN AND MTS EXAMINATIONS

Shri. P.Karunanithy, ASPOs (HQ), O/o the SPOs, Karaikudi Division, Karaikudi 630 001 will send four books for Limited Competitive examination for the filling the posts of Postman / Mail Guard and Multi Tasking Staff to be held on 20.01.2013 and 27.01.2013as per latest objective type model.
(1) Arithmetic Guide prepared by Shri. P.Karunanithy, ASPOs.
(2) General English Guide prepared by Shri. P.Karunanithy.
(3) General Knowledge 2013 Arihant publication price Rs. 25/-
(4) Test of Reasoning by Sura publication price Rs. 240/-
(a) Please remit Rs. 600/- Six hundred only to the following address for getting the above books.
Shri. T.Suresh,
Flat No. F2, Door No. 5,
Moovendar Second Street,
Tiruvalluvar Nagar,
Madurai Reserve Lines SO,
Madurai 625 014
(b) Please write a post card with your full office address with the particulars of eMO sent.
(c)For further details, Please contact: Shri. P.Karunanithy Cell: 94433 29681

Saturday, 3 November 2012

               12.12.2012 ஒரு  நாள்                                                                          வேலைநிறுத்தம் 

01.01.2011 முதல் GDS உட்பட அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஏழாவது  சம்பளகுழு  அமைக்க வேண்டியும் 

50 சதம்  பஞ்சப்படியை GDS உட்பட அனைவருக்கும்  அடிப்படை  சம்பளத்துடன் இணைக்க கோரியும் 

புதிய பென்ஷன் திட்டத்தை இரத்து செய்தல்  உள்ளிட்ட 

15 அம்ச கோரிக்கைகளை  வலியுறுத்தி  மத்திய அரசு  ஊழியர்  மகா 

சம்மேளனம்  12.12.2012    அன்று  ஒரு நாள்  வேலைநிறுத்தம்  செய்ய அழைப்பு  விடுத்துள்ளது .

                 நமது  பகுதியில்  வேலைநிறுத்தம்  சிறப்பாக  நடைபெற 

தாங்கள்  அனைவரும்  ஆதரவு  தரும் படி  கேட்டு  கொள்கிறோம் .

                                     போராட்ட வாழ்த்துக்களுடன்  

        சி.சஞ்சீவி                         இரா.பிரகாஷ்                                   சி.சண்முகம்
  கோட்ட செயலர்          கோட்ட செயலர்                    கோட்ட செயலர்    
                                                                                           



No. PF-01(e)/2012                                                                                    DATED 02.11.2012
To,
All General Secretaries, All office bearers NFPE,
All Circle /Divisional & Branch Secretaries    
12.12.12  =  ALL INDIA STRIKE
Dear Comrades,
*     COMPLETE THE STRIKE CAMPAIGN IN NOVEMBER ITSELF.
*     EACH AND EVERY EMPLOYEE SHOULD BE CONTACTED PERSONALLY.
*     PRINT AND DISTRIBUTE NOTICES /PAMPLETS/POSTERS EXPLAINING TH 15 POINT CHARTER OF DEMANDS.
*     CONDUCT OFFICE TO OFFICE SQUAD WORK, GENERAL BODY MEETINGS  CONVENTIONS AND GROUP MEETINGS.
STRIKE NOTICE WILL BE SERVED ON 19.11.2012
*          CONDUCT DEMONSTRATIONS IN FRONT OF ALL OFFICES ON 19.11.2012
*          CONDUCT MASS EVENING DHARNAS ON ALL IMPORTANT PLACES ON 20th, 21st, 22nd   AND 23rd   NOVEMBER 2012.
*          CONDUCT CAMPAIGN JATHAS, PUBLIC MEETINGS, RALLIES, DEMONSTRATIONS & PRESS MEETINGS.
GET READY FOR THE BIGGEST STRIKE OF ENTIRE
CENTRAL GOVERNMENT EMPLOYEES
We Demand:
1.   Appoint Seventh Pay Commission for revision of wages of Central Government Employees including Gramin Dak Sevaks from 01.01.2011.
2.   Grant merger of 50% DA to all including Gramin Dak Sevaks from 01.01.2011.
3.   Remove restrictions on Compassionate appointments.
4.   Departmentalization of GDS and grant them all benefits of regular employees. Revise cash handling norms; withdraw open market recruitment in Postmen/MTS, Grant full protection of TRCA. Grant Time bound promotions. Implement Medical reimbursement Scheme etc.
5.   End Bonus discrimination and enhance the bonus ceiling of GDS to 3500/-
6.   Regularize the Casual, Part-time, contingent employees and grant revise pro-rata wages from 1.1.2006.
7.   Revise Overtime allowance and Night Duty allowance.       
8.   Stop downsizing, outsourcing, Contractorisation and privatization.
9.   Grant Five promotions to all.
10. Implement all Arbitration awards.
11. Ensure prompt functioning of JCM at all levels.
12. Withdraw PFRDA Bill.
13. Stop price rise and strengthen public distribution system.
14. Withdraw all trade union victimization.
15. Enact laws to grant Right to Strike to Government employees.
Yours fraternally,
{M. KRISHNAN}
Secretary General