அஞ்சலக தொகுப்பு வைப்பக முறை/அமைப்பு
(CORE BANKING SYSTEM)
நமது சேலம் மேற்கு கோட்டத்தில்
அனைத்து
அஞ்சலகங்களும் அ.தொ.வை.மு (CBS) ஆனது.
நமது வேலைகள்
வேளை பாராமல்
உழைத்திடும் பொழுதினில்
புதிய தொழில்நுட்பம்
நம்மிடை வரும்போது
அதனினை எதிர்கொள்ள
அணியமானோம்!
உங்களின் உழைப்பு நமது
துறையின் மணி மகுடம்
தொடர் பணி நீடிக்கட்டும்
விடியலின் தொலைவு அருகினிலே!
நமது நேர இழப்புகள் விரைவில்
களைந்திடும்!
நமக்காக இரவு பகல் பாராமல்
கணிணியின் திரையினில்
உழைத்திட்ட
வடிவேலனுக்கும் திருவேங்கட பெருமாள்
பாலாஜிக்கும் சிவத்திற்கு குருவானவனுக்கும்
அழகின் மதி இராமச்சந்திரனுக்கும்
துறந்த சுடர் நிர்மல்
பிரகாசுக்கும்
துணை நின்ற அத்துனை தோழருக்கும்
நமது கோட்டச் சங்கம்
நன்றியினையும்
வாழ்த்தினையும் முழு மனதோடு
இந்நேரத்தே அளிப்பதில்
பெருமை கொள்கிறோம்!
நீங்கள் அனைவரும் எமது துறையின்
தூண்கள் உங்களின் கீழ்
எமது பணி என்றென்றும் சிறக்கும்
தொடர் பணி செய்திட ஊழியர்
ஒவ்வொருவரும் உறுதி கொள்வோம்
ஒத்துழைப்பு நல்கிய கோட்ட
நிர்வாகத்திற்கு எமது நன்றிகள் பல.
உங்களின் கனிவான பார்வை எங்கள்
மீது என்றும் நிலைத்திருக்கட்டும்
மீண்டுமொருமுறை அய்வர்
அணிக்கு எமது நிறைவான
வாழ்த்துக்கள்!
- கோட்டச் சங்கம்
சேலம் மேற்கு கோட்டம்
Wednesday, January 27, 2016
V.C.Premlatha