கண்ணீர் அஞ்சலி
இமயம் சரிந்தது.
18 ஆண்டு காலம் தமிழக அஞ்சல் தொழிற்சங்க வரலாற்றில் அசைக்க
இயலாத நாயகனாய், அதிகார வர்க்கத்தின் சிம்மசொப்பனமாய் வலம் வந்த அகில
இந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் முன்னாள் தமிழ்மாநில செயலாளர்
மதிப்பிற்குரியஅண்ணன் N.பாலசுப்பிரமனியன் (எ) பாலு அவர்கள்இன்று (20.10.2015) காலை 7 மணி அளவில் திருவனந்தபுரம் மருத்துவமனையில்
இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்தவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.. அவரின் மறைவுக்கு சேலம் மேற்கு கோட்ட தேசிய
சங்கத்தின் இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.
அவரை பிரிந்து வாடும் அனைத்து தமிழக தோழர்களுக்கும் அவர் தம் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம்.
அவரை பிரிந்து வாடும் அனைத்து தமிழக தோழர்களுக்கும் அவர் தம் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம்.
இறுதிச்சடங்கு அவரதுசொந்த ஊரான நாகர்கோவில் அருகில் உள்ள சுரண்டை கிராமத்தில் நடைபெறும்.
சேலம் மேற்கு அஞ்சல் மூன்று சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ,
அஞ்சல் மூன்று சேலம் மேற்கு கோட்டம் .
Tuesday, October 20, 2015
V.C.Premlatha

