Friday, 3 July 2015

CIRCLE UNION NEWS

CIRCLE UNION ON TRADE UNION VICTIMISATION AT MADURAI REGION

அன்புத் தோழர்களுக்கு வணக்கம் !  கடந்த  30.06.2015 அன்று மதுரை மண்டல நெறியாளர்  திருமதி . நிர்மலாதேவி அவர்களை  அஞ்சல் மூன்று மாநிலச் செயலர் சந்தித்து பேசிய  நேர்காணல் விபரங்கள்  முந்தைய வலைப் பதிவில் அளித்திருந்தோம் . அதன்படி  மதுரை மண்டல அலுவலகத்திலிருந்து DEPUTATION  இல் சென்ற  மொத்தம் 24  ஊழியர்கள் திருப்பி அனுப்பப்பட்ட விபரம்  தெரிவித்திருந்தோம்.

மேலும்  கடந்த 10.01.2014 மண்டல அலுவலகம் முன்பாக நடைபெற்ற  NFPE COC  யின் தொடர் முழக்கப் போராட்டத்தில் கலந்துகொண்டு நிர்வாகத்தால் பழிவாங்கப் பட்ட ஊழியர்களுக்கு  வழங்கப் பட்ட DIES NON நமது CPMG  அவர்களின் தலையீட்டின் பேரில்  ரத்து செய்திட முடிவெடுக்கப்பட்டதும் ,  ஏற்கனவே  நான்கு ஊழியர்களுக்கு  இதற்கான உத்திரவு அளிக்கப் பட்டிருப்பது குறித்தும்  தெரிவித்திருந்தோம். 

தற்போது  மதுரை  மண்டல நிர்வாகத்துடன்  மாநிலச் செயலர் தொடர்பு கொண்டு பேசியதில்  கீழ்க் காணும் ஊழியர்களின்  DIES NON  ரத்து செய்யப் பட்டு  இன்று உத்திரவு அளிக்கப் பட்டுள்ளதாக   மாநிலச் சங்கத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோழர்கள் 
1. K . சங்கர் ,   P..A. , TALLAKULAM HO
2. சிவகுருநாதன் ,  P.A., TALLAKULAM HO
3. S.  சந்திரசேகரன் , P.A., MADURAI HO
4. S. கிருஷ்ணமுர்த்தி , P..A., TALLAKULAM HO
5. S. குணசேகரன் , POSTMAN , MADURAI HO

மேலும்  உள்ள மேல் முறையீடுகளின் மீது  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக  நமக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேல் முறையீடுகளின் மீது   தண்டனையை ரத்து செய்து உத்திரவிட்டுள்ள மதுரை மண்டல நெறியாளர்  திருமதி. நிர்மலாதேவி  அவர்களுக்கும் , இந்த  பிரச்சினையில் தலையிட்டு  தீர்வுக்கு  வழி வகுத்த  நமது  CPMG திரு. சார்லஸ்  லோபோ  அவர்களுக்கும்  நம்  மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மதுரை மண்டலம் அமைதி மண்டலமாக மாறிட இந்த  முயற்சிகள்  முன்னோட்டமாக அமைந்து வருகின்றன .  இனி  ஊழியர்  பிரச்சினைகளில்  நல்ல முன்னேற்றங்கள் ஏற்படட்டும்.

THURSDAY, JULY 2, 2015

INFORMAL MEETING WITH THE DPS, SOUTHERN REGION ON 30.6.2015

மதுரை மண்டல நெறியாளருடன்  சந்திப்பு !

அன்புத் தோழர்களுக்கு வணக்கம் !கடந்த 30.06.2015 அன்று மதுரை சென்ற நம்முடைய மாநிலச் செயலர் , மதுரை மண்டல நெறியாளர் திருமதி. T. நிர்மலாதேவி அவர்களை மரியாதையை நிமித்தம் சந்தித்தார். அந்த சந்திப்பின் போது  தோழர். திண்டுக்கல் சுப்ரமணியன் அவர்களும் உடன் இருந்தார். சந்திப்பு சுமுகமாக நடைபெற்றது.  சந்திப்பில்  சில முக்கிய ஊழியர் பிரச்சினைகள் குறித்தும்  விவாதிக்கப்பட்டது.  அதன் விபரம் வருமாறு :-

1. திண்டுக்கல் கோட்ட  சுழல் மாறுதலில் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து விரிவாக கடிதம் அளித்து தெரிவிக்கப்பட்டது. அதன் முழு விபரங்களை கேட்டறிந்த நெறியாளர் அவர்கள் , இதில் பல பிரச்சினைகளில் தான் உடன் படுவதாகவும் , இதுகுறித்து முது நிலை கண்காணிப்பாளரிடம்  விளக்கம் பெற்று  ஆவன செய்வதாக உறுதி அளித்தார்.

2. மதுரை மண்டல  தொழிற் சங்க பழிவாங்கும் நடவடிக்கைகள் குறித்து பேசிய போது , ஏற்கனவே CPMG  அவர்கள் தெரிவித்தபடி , DIES NON  மீது  DPS  அவர்களிடம் மேல்முறையீடு செய்துள்ளவர்களில் பலருக்கு  அந்த தண்டனை ரத்து செய்து உத்திரவிடப் பட்டுள்ளதாகவும்  குறிப்பாக தோழர்கள். பாலாஜி, பாலமுருகன், நாராயணன், மணி உள்ளிட்டவர்களுக்கு DIES NON ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள மேல்முறையீடு மனுக்கள் மீது ஆவன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மதுரை கோட்டச் செயலர் தோழர். சுந்தரமூர்த்தியின் மேல்முறையீடு உரிய  அதிகாரிக்கு  செய்யவில்லை என்பதால் அவருக்கு  அதன் மீது  பதில் அனுப்பப் பட்டுள்ளதாகவும் , அப்படி அவர்  மேல் முறையீட்டு அதிகாரிக்கு மனுச் செய்தால்  அதன்மீதும் ஆவன நடவடிக்கை எடுத்து  ரத்து செய்யப்படும் என்று கூறினார். எனவே இதுவரை மேல்முறையீடு செய்து பதில் வராத ஊழியர்கள் , அதன் விபரங்களை  மாநிலச் சங்கத்திற்கு தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

3.மண்டல அலுவலகத்திலிருந்து  DEPUTATION இல் சென்றுள்ள ஊழியர்களை திருப்ப அனுப்பும் பிரச்சினையில் ,  CHIEF  PMG உத்திரவுப்படி ஏற்கனவே  8+2+1+1 = 12 ஊழியர்கள் திருப்ப அனுப்பப் பட்டுள்ளதாகவும்  3.7.2015 அன்று  மேலும் 12 ஊழியர்களை  திருப்ப மதுரை கோட்டத்திற்கு அனுப்பிட உத்திரவிடப் பட்டுள்ளதாகவும்  தெரிவித்தார்.

மேலும் ஊழியர் பிரச்சினைகளில்  தம்மிடம் கொண்டு வரும் பிரச்சினைகளில் சட்டபூர்வமான உரிய நடவடிக்கை  தாம் எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். அவரிடம் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அணுகுமுறை மாற்றத்திற்கு நாம் நன்றி தெரிவித்து ,  இலாக்காவின் முன்னேற்றத்திலும் ஊழியர் பிரச்சினையை தீர்ப்பதிலும் நம்முடைய ஒத்துழைப்பை நாம்  நிச்சயம் அளிப்போம் என்றும்   தொழில் அமைதி காக்க  நம் மாநிலச் சங்கம் முன் நிற்கும்  என்றும் உறுதி அளித்தோம்.   PMG SR   அவர்கள் CAMP  சென்றிருந்த காரணத்தினால் அவரை பார்க்க இயலவில்லை .