நமது கோவை மண்டலத்தின் அஞ்சல் தலைவராக பொறுப்பேற்றுள்ள திருமதி. மஞ்சு பிள்ளை அவர்களுடன் மரியாதை நிமித்தமான சந்திப்பாக 19.12.2013 அன்று நமது மண்டல செயலர் தோழர் சி.சஞ்சீவி,, மாநில உதவி தலைவர் தோழர். எபினேசர் காந்தி, மாநில அமைப்பு செயலர் தோழர் A.ராஜேந்திரன் ஆகியோர் சந்தித்தோம். மண்டல செயலர் கொடுத்த பூங்கொத்தை மகிழ்ச்சியுடன் பெற்று கொண்ட PMG அவர்கள் மிகச்சிறந்த கோவை மண்டலத்தில் தான் பொறுப்பேற்றது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.
இரு மாதாந்திர பேட்டியின் போது நமது அஞ்சல் மூன்று சங்கம் கொடுத்த மனு மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி கூறினார். ஊழியர்கள் பிரச்சனையில் மிகுந்த அக்கறை கொண்டு பேசிய நமது PMG அவர்களுக்கு நன்றி கூறி நாமும் நமது கோவை மண்டலம் அகில இந்திய மட்டத்தில் அணைத்து பிரிவுகளிலும் முதலாவதாக வர முழு ஈடுபாட்டுடன் பணி புரிவோம் என உறுதி கூறி விடை பெற்றோம்.

--சி.சஞ்சீவி ,மண்டல செயலர் , கோவை மேற்கு மண்டலம் --
Friday, December 20, 2013
V.C.Premlatha